சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 06, 2020
Share
Advertisement
'கைரேகை' பண பரிவர்த்தனைதொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலான துறைகளிலும் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அமேசான் வணிக மையத்தில், உள்ளங்கை ரேகையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை சோதனை முறையில் துவக்கியுள்ளது. நுகர்வோரின் உள்ளங்கையுடன் அவர்களது கிரடிட் கார்டு தகவல்கள் இணைக்கப்பட்டு, பொருட்களுக்கு பணம் செலுத்தும்

'கைரேகை' பண பரிவர்த்தனை

தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலான துறைகளிலும் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அமேசான் வணிக மையத்தில், உள்ளங்கை ரேகையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை சோதனை முறையில் துவக்கியுள்ளது. நுகர்வோரின் உள்ளங்கையுடன் அவர்களது கிரடிட் கார்டு தகவல்கள் இணைக்கப்பட்டு, பொருட்களுக்கு பணம் செலுத்தும் போது, அதற்குரிய ஸ்கேனரில் கார்டுக்கு பதிலாக நுகர்வோர் உள்ளங்கையை காண்பித்தால் போதும். பரிவர்த்தனை முடிந்து விடும்.

தகவல் சுரங்கம்

உலக பருத்தி தினம்

பருத்தி என்பது விவசாயிகளுக்கு வருமானம், அனைத்து மக்களும் உடுத்த உடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் நன்மை அளிக்கிறது. பருத்தி வறட்சியை தாங்கி விளையும் பயிர் என்பதால் இதற்கான உற்பத்தி செலவு குறைவு. உலகின் ஜவுளித்தேவைகளில் 27 சதவீத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது. பெனின், புர்கினா பாசோ, சாத், மாலி ஆகிய நாடுகள் வேண்டுகோளுக்கிணங்க, உலக வர்த்தக அமைப்பு 2019 அக்., 6ல் இத்தினத்தை அறிவித்தது. பருத்தி விளைச்சலில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரேசில், பாகிஸ்தான் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X