அரசியல் செய்தி

தமிழ்நாடு

இபிஎஸ் - ஓபிஎஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : டிரெண்டிங்கில் வரவேற்பு

Updated : அக் 08, 2020 | Added : அக் 07, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை : அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையேயான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததோடு, இந்த விஷயம் டுவிட்டரில் இன்று(அக்., 7) டிரெண்ட் ஆனது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சியினர் இப்போதே தயாராகி வருகின்றனர். ஆளும் அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர்
EPSforTN, EPSFOR2021, AIADMK, CMCandidate, OPSvsEPS

சென்னை : அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையேயான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததோடு, இந்த விஷயம் டுவிட்டரில் இன்று(அக்., 7) டிரெண்ட் ஆனது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சியினர் இப்போதே தயாராகி வருகின்றனர். ஆளும் அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்தது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏ.,க்களுடனும் தனித்தனி அணியாக உருவாகி ஆலோசனை நடத்தினர். மேலும், அமைச்சர்களும் இருவருடனும் மாறி மாறி ஆலோசனை நடத்தியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் கட்சி நிர்வாகிகள் சமரசம் செய்தனர்.


latest tamil news
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிடுவதாக அதிமுக., கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு ஒன்றை அமைத்துள்ளதாக அறிவித்தனர். அதோடு 2021 தேர்தலில் முதல்வராக பழனிசாமி முன்னிறுத்தப்படுவதாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்தனர்.

இதை அதிமுக.,வினர் வரவேற்றனர். இதன்மூலம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இடையேயான சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. தொடர்ந்து அதிமுக., கட்சியினர் சமூகவலைதளங்களில் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news
''சாமானியனும் ஆட்சி செய்யலாம் என அதிமுக.,வில் உறுதி செய்யப்பட்டுள்ளது, நம்மில் ஒருவர் நமக்கான தலைவர், நம்மவர், நமக்கானவர்'' என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #EPSforTN, #EPSFOR2021, #AIADMK, #CMCandidate, #OPSvsEPS ஆகிய ஹேஷ்டாக்குகள் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகின.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-அக்-202014:56:52 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மணி அதிகம் உள்ள இடம் வெற்றி பெற்று இருக்கிறது , தேர்தலில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறி தான். இன்னொருவரும் 350 கோடி பணம் முதலீடு செய்து மக்கள் பணி செய்ய துடிக்கிறார். , இரண்டு ஊழல் கலகங்களும் முற்று பெற வேண்டும்.
Rate this:
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
08-அக்-202013:57:18 IST Report Abuse
C.Elumalai நண்பரே2019 எம் பி பொது தேர்தலில், பிஜேபிக்கு 5இடங்கள் தான் அதிமுக தந்தது. 2011 சட்டமன்ற தேர்தலில்கீழ் தளத்தில் திமுக+கான்கிராஸ் தொகுதி பேச்சுவார்த்தை காங் கேட்ட தொகுதி தரமுடியாது கருணா,உடனே மேல்தளத்தில் சிபிஐ சோதனை,காங் கேட்ட தொகுதி63 ஐ தங்கதாம்பளத்தில் வைத்து காங் காலில் விழுந்து கொடுத்தது மறந்து போச்சா.வீரஆவேசமாக ஈழ படுகொலையை கண்டித்து பொதுகூட்டம்நடத்தபடும் அறிவிப்பு,மணிமேகலை கண் அசைத்தவுடன் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு கட்டுமரம் வீட்டுக்குள் பதுங்கியது ஞாபகம் இருக்க அன்பரே?. மணிமேகலை தோப்பகரணம் போடு என்றால் எண்ணிக்கோ என்றாரே விஞ்ஞானி மறந்துபோச்சா?.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
08-அக்-202013:08:10 IST Report Abuse
RaajaRaja Cholan தனியா போனால் விலாசம் இல்லாமல் போகும் என்று தெரிந்ததால் நாட்டுக்கு சேவை செய்ய ஒற்றுமையா இருக்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X