ஓய்வு எடுக்காமல் பொது வாழ்க்கை: 20 ஆண்டு நிறைவு செய்தார் மோடி

Updated : அக் 07, 2020 | Added : அக் 07, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: அரசியல் பொது வாழ்க்கையில் பிரதமர் மோடி 20வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் தலைவராக எந்த இடைவெளியுமின்றி தொடர்ந்து 19 ஆண்டுகள் செயல்பட்டு, 20ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.2001ம் ஆண்டு அக்., 7 ல் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார். அக்காலகட்டத்தில் கடுமையான பூகம்பம் காரணமாக அம்மாநிலத்தின் பூஜ் நகரம் மோசமாக
Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: அரசியல் பொது வாழ்க்கையில் பிரதமர் மோடி 20வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் தலைவராக எந்த இடைவெளியுமின்றி தொடர்ந்து 19 ஆண்டுகள் செயல்பட்டு, 20ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

2001ம் ஆண்டு அக்., 7 ல் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார். அக்காலகட்டத்தில் கடுமையான பூகம்பம் காரணமாக அம்மாநிலத்தின் பூஜ் நகரம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'வைப்ரன்ட் குஜராத்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், மாநிலத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றினார். மோடியின் நடவடிக்கைகள் காரணமாக, மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் குஜராத் தன்னிறைவு பெற்றது. 2002, 2007 மற்றும் 2012ம் ஆண்டுகளிலும் குஜராத் முதல்வராக மோடி இருந்துள்ளார். அக்காலகட்டத்தை, மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.,வை ஆட்சியில் அமர வைப்பதற்கான வலுவான அடித்தளத்தையும் ஏற்படுத்தினார்.

குஜராத்தில் மோடி ஆற்றிய பணிகள் காரணமாக, அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது. 'குஜராத் மாடல்' வளர்ச்சி என நாட்டில் பலரும் பேச துவங்கினார். இதனை தொடர்ந்து, 2013ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். இதன்பின்னர், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, தேசிய அரசியலில் நுழைந்த அவர், 2014ல் பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 2019ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை மோடி வகித்து வருகிறார்.


latest tamil news


இது தொடர்பாக பா.ஜ., வட்டாரங்கள் கூறுகையில், இரண்டாவது முறையாக பதவியேற்றவுடன், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருவதுடன், கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறார். கடந்த ஆக.,5ல் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம், கட்சியின் தேர்தல் வாக்குறுதியை சட்டரீதியில் நிறைவேற்றியுள்ளார். இதனை தொடர்ந்து பா.ஜ.,வின் மற்றொரு முக்கிய கொள்கையான காஷ்மீர் சிறப்பு சட்ட அந்தஸ்து ரத்து என்பதையும் நிறைவேற்றியுள்ளதுடன், முத்தலாக் தடுப்பு சட்டத்தையும் நிறைவேற்றி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்கள் மீதும் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என்பதை எடுத்து காட்டுகிறது.

தன்னிறைவு இந்தியா, கொரோனா காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கியது, சீன அத்துமீறலுக்கு பதிலடி கொடுத்தது, நீண்ட காலம் நிலுவையில் இருந்த விவசாய சட்டங்களை நிறைவேற்றியது ஆகியன மோடியின் சாதனைகளில் அடக்கம். கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலகட்டத்தில் இந்த சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் அறிக்கைகளை அரசின் கொள்கை ரீதியிலான ஆவணங்களாக எடுத்து கொள்வதுடன், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு பா.ஜ., தலைவர் கூறுகையில், விவசாய சட்டங்களை நிறைவேற்றியதால், நீண்ட கால கட்சியான சிரோண்மனி அகாலிதளம் தே.ஜ.,விலிருந்து வெளியேறியுள்ளது. ஆனால், விவசாயிகள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக விவசாய சட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் உறுதியாக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
07-அக்-202023:49:18 IST Report Abuse
Rajagopal மோடி நடத்துவது ஆன்மீக அரசியல் - ஊழல், குடும்ப சொத்து சேகரிப்பு போன்றவை கிடையாது. நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடும் விதமாக அவர் ஆட்சி நடந்து வந்திருக்கிறது. உண்மையான மத சார்பின்மை நாட்டு தேவை - சிறு பான்மையினருக்கு சலுகைகளை அள்ளி வழங்காமல், அனைவருக்கும், மத சார்பற்ற சட்டங்கள் தேவை. இந்து தருமம் தனது பழமையான பெருமையை அடைய அவர் வழி வகுக்க வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் சில சட்டங்களை அவரது அரசு நீக்க வேண்டும். அவர் நீடூழி வாழ வேண்டுகிறேன். இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் அரிதான தலைவர்களில் மோடி ஒருவராவார்.
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
07-அக்-202022:21:58 IST Report Abuse
Suman உலகின் தலை சிறந்த முன்னுதாரணமாக மோதி நமக்கு கிடைத்துள்ளார். வாழ்த்துக்கள்... நன்றி..நன்றி.. நன்றி.
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
07-அக்-202022:09:53 IST Report Abuse
iconoclast மோடிஜி வாழ்க பிஜேபி வளர்க அதனால் மக்கள் .............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X