தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறலாம் என எப்படி எதிர்பார்க்கலாம்: ஐகோர்ட் கேள்வி

Updated : அக் 07, 2020 | Added : அக் 07, 2020 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தமிழகத்தில் கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ., படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில்
அரியர்தேர்வு, தேர்ச்சி, சென்னைஉயர்நீதிமன்றம்,

சென்னை: தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



தமிழகத்தில் கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ., படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.



இந்த வழக்கில் ஏ.ஐ.சி.டி.இ., தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை விதிகளுக்கு முரணானது என தெரிவித்திருந்தது.



latest tamil news


இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் கூறியதாவது: தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம். அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அரியர் தேர்வு ரத்துக்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும். ஏற்கனவே ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பி.இ., படித்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர் எனக்கூறி, இந்த வழக்கில் தமிழக அரசு, யு.ஜி.சி., பதிலளிக்க நவ.,20 வரை கால அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-அக்-202003:52:01 IST Report Abuse
ருத்ரா தவறான மனநிலைக்கு மாணவர்களை அரசு திருப்பி விட்டது. பாதுகாப்புடன் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். படிக்க விரும்பும் மாணவர்கள் கவனம் சிதறாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
07-அக்-202021:35:38 IST Report Abuse
Natarajan Ramasamy பணம் செலவு செய்து ஒரு பொருளை வாங்கினால் அது முழுமையாக இருக்க வேண்டும். டான்ஸ் ஸ்கூலில் சேர்ந்து பயின்றால் 30 % புரிந்தால் போதும் என்பார்கள் உண்டா? எந்த பள்ளிகளிலும் fees வாங்கி தான் படிப்பை விற்கிறார்கள். எனவே எல்லா மாணவர்களும் 100 % புரிந்து அறியும் அளவிற்கு ,கற்பிக்க வேண்டும் அப்படி இருந்தால் பரீக்ஷை தேவை இல்லை. எல்லோரும் பாஸ் சரியே. இங்கு அதுபோன்று சொல்லித்தரப்படுகிறதா? ஒரு வருட பாடத்தை 100 பங்காக பிரித்து ஒரு ஒரு பகுதியும் 80 % க்கு மேல் புரிந்துகொண்டதை வைத்து அடுத்த பகுதி சொல்லித்தரவேண்டும். இதுவே கல்வியின் தரத்தை உயர்த்தும். otherwise ஒன்லி மாஸ்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
07-அக்-202020:55:29 IST Report Abuse
vbs manian கல்வி துறையில் ஆதி மு க செய்த குளறுபடிகள் பெரிய கரும் புள்ளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X