அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியை வெளியேற்றும் போராட்டம் தொடரும்: ஸ்டாலின் சபதம்

Updated : அக் 09, 2020 | Added : அக் 07, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை : ''அ.தி.மு.க., ஆட்சியை, கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.'கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த முப்பெரும் விழாவில், ஸ்டாலின் பேசியதாவது: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அந்த விசாரணைக் கமிஷனில்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : ''அ.தி.மு.க., ஆட்சியை, கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

'கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த முப்பெரும் விழாவில், ஸ்டாலின் பேசியதாவது: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அந்த விசாரணைக் கமிஷனில் முதல் ஆளாக, அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும்' என, சொன்னவர் பன்னீர்செல்வம். அவரே விசாரணை கமிஷனுக்கு போகவில்லை.

அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், 'பன்னீர்செல்வம் தன் மீதான ஊழல் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டும். சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியதே பன்னீர்செல்வம்தான். ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது, சேகர்ரெட்டிக்கு பதவி போட்டு கொடுத்தது பன்னீர்செல்வம் தான்' என்றார்.

இப்படிப்பட்ட ஆட்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். இன்று நடப்பது ஆட்சியல்ல; வீழச்சி. இந்த வேதனை ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்பட வேண்டும்.கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தை, தொடர்ந்து முன்னெடுப்போம். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jay - Coimbatore,இந்தியா
09-அக்-202011:51:04 IST Report Abuse
Jay இவரும் தலைகீழாய் நிற்கிறார், தலையால் தண்ணீர் குடிக்கிறார் ..ஹிந்தி ஹிந்தி .. திணிப்பு என்று சதா சர்வ காலமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார் .. ஹ்ம்ம் ஒன்றும் எடுபட்டதாய் தெரியவில்லை ..சட்டசபையில் கூட ஜல்லிக்கட்டு மாதிரியான போராட்டத்தை பண்ணுவோம் என்கிறார் .. ஒன்றும் நடந்த மாதிரி தெரியவில்லை .. இது 1960 இல்லை 2020 வருடம் என்பதனை மறந்துவிட்டார்போலும் .. இவர் கட்சி எப்போதும் சொல்லக்கூடிய வார்த்தைகள் .. பகுத்தறிவு, சமூகநீதி, சுயமரியாதை, சாதி மறுப்பு, மதசார்பின்மை ..இதெல்லாம் மழுங்கி போய்விட்டது என்று எனோ இவருக்கு தெரியவில்லை .. அடுத்தது .. தனிநபர் விமர்சனம்.. மொழி அறிவின்மை ..தங்கு தடையில்லாத தமிழ் இல்லை .. இதெல்லாம் இவருக்கு மிக பெரிய பலவீனம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-அக்-202021:54:35 IST Report Abuse
sankaseshan வெதுகோடி க்கு மட்டும் ஸ்பெஷலா நியூஸ் எப்படி கிடைக்கிது கூட்டணி தீர்மானமாகவில்லை BJP ku 60 சீட்டு .
Rate this:
Cancel
NRI - Chennai,கனடா
08-அக்-202020:54:50 IST Report Abuse
NRI Empty Box makes more noise.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X