பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் இருந்து குமரிக்கு 3 மணி நேரத்தில் வந்த சிறுநீரகம்

Updated : அக் 08, 2020 | Added : அக் 08, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
நாகர்கோவில் : மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்துடன், ஆம்புலன்ஸ் ஒன்று மதுரையில் இருந்து, நாகர்கோவிலுக்கு, மூன்று மணி நேரத்தில் வந்து சேர்ந்தது.மதுரையை சேர்ந்த இளைஞர் வேல்முருகன், 27; விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால், இவரது உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்தனர். குமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர், சிறுநீரகத்துக்காக பதிவு
organ donation, brain dead, Madurai

நாகர்கோவில் : மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்துடன், ஆம்புலன்ஸ் ஒன்று மதுரையில் இருந்து, நாகர்கோவிலுக்கு, மூன்று மணி நேரத்தில் வந்து சேர்ந்தது.

மதுரையை சேர்ந்த இளைஞர் வேல்முருகன், 27; விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால், இவரது உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்தனர். குமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர், சிறுநீரகத்துக்காக பதிவு செய்திருந்ததால், அவருக்கு சிறுநீரகம் வழங்க, முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மதுரை தனியார் மருத்துவமனையில் இருந்து, சிறுநீரகத்துடன் காலை, 11:00 மணிக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டது.


latest tamil newsமூன்று மணி நேரத்தில், 225 கி.மீ., துாரம் கடந்து, பகல், 2:00 மணிக்கு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையை அடைந்தது. தயாராக இருந்த டாக்டர் குழுவினர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதற்காக, நாகர்கோவில் நகரில், ஒழுகின சேரி முதல் மருத்துவமனை வரை, சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Sayiram - CHENNAI,இந்தியா
08-அக்-202011:34:11 IST Report Abuse
Balaji Sayiram the heading need not be so exaggerated....225 kms in 3 hours is very very easy (~75 KMPH)..on highways, generally the vehicles travel more than 100 KMPH......and any driver by profession will drive more than 120 KMPH.....
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
08-அக்-202010:45:52 IST Report Abuse
blocked user சிறப்பு. இது போன்ற காலத்தில் புல்லட் ட்ரைன் இருந்தால் ஒரு மணி நேரத்தை விட குறைவான நேரத்தில் சென்று சேர்ந்து விட முடியும்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
08-அக்-202010:33:09 IST Report Abuse
ocean இதல்லாம் சரி. அந்த நபரின் மாற்றுருப்பு இனி வருங்காலங்களில் சரியாக இயங்குமா. முடிவுகள் வெளியே வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X