பொது செய்தி

இந்தியா

" இளம்பெண்ணை குடும்பத்தினரே கொன்றனர் "- ஹத்ராஸ் சம்பவத்தில் திடுக்

Added : அக் 08, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,யின் ஹத்ராஸ் நகரில் 19 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினரே அடித்து கொன்றுவிட்டதாக , இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் போலீசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.உ.பி.,யின் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 14ம் தேதி, 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்ட அவர், டில்லி மருத்துவமனையில்
Hathras, Family, Friendship, Killed, Accused, உபி, ஹத்ராஸ், இளம்பெண், பலாத்காரம், படுகொலை, குடும்பத்தினர், சிறை,  சந்தீப் தாக்கூர், கடிதம்

லக்னோ: உ.பி.,யின் ஹத்ராஸ் நகரில் 19 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினரே அடித்து கொன்றுவிட்டதாக , இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் போலீசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யின் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 14ம் தேதி, 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்ட அவர், டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, மாநில அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப் தாக்கூர் என்பவரை, இளம்பெண்ணின் குடும்பத்திற்கு தெரியும் என போலீசார் கூறியிருந்தனர். அதில், சந்தீப் தாக்கூரும், இளம்பெண் சகோதரரும் தொலைபேசியில் பேசி கொண்டதாகவும், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மார்ச் வரை 109 முறை இருவரும் பேசி கொண்டதாக தெரிவித்திருந்தனர்.


latest tamil newsஇந்நிலையில், ஹத்ராஸ் போலீசுக்கு சிறையில் இருந்தபடியே சந்தீப் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார். அதில் 4 பேரும் விரல் ரேகையை பதிவு செய்துள்ளனர்.

ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் சந்தீப் தாக்கூர் கூறியுள்ளதாவது:
நானும், இளம்பெண்ணும் நண்பர்கள். நேரில் சந்தித்து கொள்வது மட்டுமல்லாமல், தொலைபேசி மூலமும் தினமும் பேசிக்கொள்வோம். ஆனால், எங்களது நட்பு, அவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இளம்பெண் கொல்லப்பட்ட நாளன்று, வயலில் இருந்த அவரை சந்திக்க சென்றேன். அப்போது தாயாரும், சகோதரரும் அங்கு இருந்தனர். இதனால், என்னை திரும்பி செல்லும்படி அவர் கூறியதால், திரும்பி வந்துவிட்டேன்.

வீட்டில் கால்நடைகளுக்கு உணவு வைத்து கொண்டிருந்த போது, எங்களது நட்பை பிடிக்காத தாயாரும், சகோதரரும், இளம்பெண்ணை கடுமையாக தாக்கியதாகவும், அதில் அவர் படுகாயமடைந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணை நான் தாக்கியதும் இல்லை. தவறாக நடந்து கொண்டதும் இல்லை. இளம்பெண்ணின் தாயாரும், சகோதரரும் தவறாக எங்கள் மீது தவறாக குற்றம்சுமத்தி சிறைக்கு அனுப்பியுள்ளார். நாங்கள் அப்பாவிகள். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
13-அக்-202014:43:49 IST Report Abuse
Vivekanandan Mahalingam இது ஆணவக்கொலை என்று தெரிகிறது. இதற்காக நாடகம் ஆடிய நக்சல் பெண்மணி எங்கே ? பிரியங்கா கட்டி பிடித்த சம்பந்தம் இல்லாத அந்த பெண்மணியை விசாரித்தால் எல்லாம் விளங்கும்
Rate this:
Cancel
palani - junrong,சிங்கப்பூர்
13-அக்-202010:54:35 IST Report Abuse
palani ஏன் காவல் துறை பெண்ணின் சடலத்த யாருக்கும் தெரியாமல் அதிகாலையில் இருக்கவேண்டும், குடும்பத்திற்குக்கூட தகவல் கொடுக்காமல்
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
09-அக்-202012:20:06 IST Report Abuse
Indian  Ravichandran உண்மையில் நடந்ததை தீவிரமாக விசாரித்து உண்மையை கொண்டுவாருங்கள். எதிர்க்கட்சிகளின் அதீத ஆர்வம் உ பி அரசை சாடுவதற்கு இந்த சம்பவத்தை உண்மைக்கு புறம்பாகவும் பொய் சொல்லி அரசியல் நடத்த தயங்காத பயங்கரவாதிகள் சதி தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X