பொது செய்தி

இந்தியா

பரவியது வீடியோ: உணவகத்தில் கூடிய கூட்டம்

Updated : அக் 08, 2020 | Added : அக் 08, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் சிறிய உணவகம் நடத்தி வரும் முதியவர்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில் அடைந்த வேதனையை கண்ணீருடன் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், அந்த கடையில் தற்போது, ஏராளமானோர் குவிய துவங்கியுள்ளனர்.டில்லியின் மால்வியா நகரில் தனது மனைவி பதாமி தேவியுடன் இணைந்து கண்டா பிரசாத் என்பவர் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர், உணவகத்தில் பருப்பு,
BabaKaDhabha, டில்லி, உணவகம், வீடியோ, டில்லி

புதுடில்லி: டில்லியில் சிறிய உணவகம் நடத்தி வரும் முதியவர்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில் அடைந்த வேதனையை கண்ணீருடன் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், அந்த கடையில் தற்போது, ஏராளமானோர் குவிய துவங்கியுள்ளனர்.

டில்லியின் மால்வியா நகரில் தனது மனைவி பதாமி தேவியுடன் இணைந்து கண்டா பிரசாத் என்பவர் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர், உணவகத்தில் பருப்பு, சப்பாத்தி மற்றும் அரிசி சாதம் ஆகியவற்றை சமைத்து விற்பனை செய்து வருகிறார். பதாமி தேவி காலை 6:30 மணிக்கு பணியை துவக்கி காலை 9: 30 மணக்குள் உணவை சமைத்து விடுவார். இந்த உணவகத்தில் விலை ரூ.30 முதல் 50 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தும் உதவுவதற்கு யாரும் இல்லை.


latest tamil newsஇந்நிலையில், வசுந்தரா தங்கா ஷர்மா என்பவர், அந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, கண்டா பிரசாத்திடம் விலை மற்றும் லாபம் குறித்து விசாரித்துள்ளார்.

அதற்கு கண்டா பிரசாத், தங்களது நிலையை விவரித்ததுடன், பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. கொரோனா காலத்தில் எங்களது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எங்களது குழந்தை கூட உதவவில்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தற்போது வரை எவ்வளவு பணம் கிடைத்துள்ளது என கேட்டதற்கு ரு.50 மட்டுமே சம்பாதித்துள்ளதாக கூறி 5 எண்ணிக்கையில் ரூ.10 நோட்டுகளை எடுத்து காண்பித்துள்ளார்.


latest tamil news
இதனை பதிவு செய்த வசுந்தரா, முதியவர்களின் கதையை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது. டில்லியில் வசிப்பவர்கள், தயவு செய்து, இந்த உணவகத்திற்கு சென்று சாப்பிடுங்கள் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இது சிறிய நேரத்தில் வைரலாக பரவ துவங்கியது. சாமன்யர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகை சோனம் கபூர் உள்ளிட்டோரும் இதனை பகிர்ந்தனர்.


latest tamil newsஇதனையடுத்து, இன்று காலை முதல் அந்த உணவகத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து சாப்பிட துவங்கினர். பிரபலங்களும் அந்த உணவகத்திற்கு வர துவங்கினர். இதனால், அங்கு கூட்டம் அதிகரித்தது. வரிசையில் நின்று உணவு பொருட்களை வாங்கி சென்றனர். இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.


latest tamil newsஇது தொடர்பாக கண்டா பிரசாத் கூறுகையில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனக்கூறினார்.

அவரது மனைவி கூறுகையில், ஊரடங்கு காலத்தில் எங்களால் எதையும் விற்க முடியவில்லை. வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால், இன்று வாடிக்கையாளர்கள் அதிகம் பேர் வர துவங்கியுள்ளனர். எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
13-அக்-202009:41:56 IST Report Abuse
thulakol இறைவன் அருட் பார்வை கிடைத்துள்ளது
Rate this:
Cancel
Shivshankar - Bangalore,இந்தியா
12-அக்-202014:23:47 IST Report Abuse
Shivshankar கொரோன கோலங்கள்
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
10-அக்-202015:09:23 IST Report Abuse
M Selvaraaj Prabu சமூக ஊடகத்தால் ஒரு நன்மையையும் விளைந்திருக்கிறது என்பதை காணும் போது மனதில் ஒரு நிறைவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X