சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
உப்பு நீர் காரணம்பூமியின் மொத்த பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீர். இதில் 96.5 சதவீதம் கடல்நீர். பூமியின் மொத்த நீரில் 97.5 சதவீதம் உப்பு தண்ணீர். கடல் நீர் உப்பாக இருப்பதற்கு காரணம் உள்ளது. மழைநீர் பாறைகள், மணலை கரைத்துக்கொண்டு ஆறுகளில் சேர்கிறது. அப்போது பாறை, மணல்களில் உள்ள தாது, உப்புகளையும் எடுத்துச் செல்கிறது. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. ஆனால் நீரில் உள்ள

உப்பு நீர் காரணம்

பூமியின் மொத்த பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீர். இதில் 96.5 சதவீதம் கடல்நீர். பூமியின் மொத்த நீரில் 97.5 சதவீதம் உப்பு தண்ணீர். கடல் நீர் உப்பாக இருப்பதற்கு காரணம் உள்ளது. மழைநீர் பாறைகள், மணலை கரைத்துக்கொண்டு ஆறுகளில் சேர்கிறது. அப்போது பாறை, மணல்களில் உள்ள தாது, உப்புகளையும் எடுத்துச் செல்கிறது. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. ஆனால் நீரில் உள்ள உப்பு மட்டும் கடலிலேயே தங்கிவிடுகிறது. ஆவியாகும் நீர் மீண்டும் மழையாக பொழிகிறது. பின் மேற்கண்ட சுழற்சி நடக்கிறது. இதனால் கடல் நீர் உப்பாக இருக்கிறது.


தகவல் சுரங்கம்



தேசிய அஞ்சல் வாரம்

இன்று இ--மெயில், இன்டர்நெட், அலைபேசி என பல தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. ஆனால் முன்பு தகவல் பரிமாற்றத்துக்கு தபால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்திய தபால் துறை 1854 அக்., 1ல் தொடங்கப்பட்டது. இதில் 2017 கணக்கின் படி, 4.33 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்திய தபால் துறையின் திட்டங்கள், சேவைகள் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக தேசிய தபால் வாரமாக (அக்.,9 - 15) கடைபிடிக்கப்படுகிறது. தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கம் இளைஞர்களுக்கு குறைந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVAKUMAR - Pannankombu,இந்தியா
09-அக்-202019:56:50 IST Report Abuse
SIVAKUMAR நன்றாக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X