பேச்சு சுதந்திரம் மீறல்: உச்ச நீதிமன்றம் கவலை

Updated : அக் 10, 2020 | Added : அக் 08, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : 'பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் தான், சமீபகாலமாக அதிகமாக மீறப்படும் உரிமையாக உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. டில்லியை அடுத்துள்ள நிஜாமுதீனில் நடந்த, தப்லிகி அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலமாக, கொரோனா வைரஸ் பரவியதாக புகார் எழுந்தது.இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, ஊடகங்கள் பல்வேறு செய்திகளை
 
பேச்சு சுதந்திரம் மீறல்  சுப்ரீம் கோர்ட் கவலை

புதுடில்லி : 'பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் தான், சமீபகாலமாக அதிகமாக மீறப்படும் உரிமையாக உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


டில்லியை அடுத்துள்ள நிஜாமுதீனில் நடந்த, தப்லிகி அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலமாக, கொரோனா வைரஸ் பரவியதாக புகார் எழுந்தது.இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, ஊடகங்கள் பல்வேறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளன.


'அமைப்பு குறித்து தொடர்ந்து பொய் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, தப்லிகி அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மத்திய அரசின் சார்பில், செய்தி, ஒலிபரப்புத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே, ''பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நாங்கள் முடக்க நினைப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது; இதை ஏற்க முடியாது,'' என்றார்.


அப்போது, தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு கூறியதாவது:பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் தான், சமீபகாலமாக அதிகமாக மீறப்படும் உரிமையாக உள்ளது. இந்த வழக்கில், செய்தி, ஒலிபரப்பு துறையின் செயலர் பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், கூடுதல் செயலர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்; இதை ஏற்க முடியாது. மேலும், வழக்குக்கு தொடர்பில்லாத, தேவையில்லாத பல கருத்துக்களை அவர் பதிவிட்டுள்ளார். துறைச் செயலர் புதிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
09-அக்-202011:05:01 IST Report Abuse
sankaseshan TV சேனல்களுக்கு ம் சினிமா மற்றும் பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கும் கட்டுப்பாடு அமல் படுத்துவது மிக்க அவசியம் .
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
09-அக்-202004:27:58 IST Report Abuse
blocked user முதலில் மதம் பரப்ப வரும் அமைப்புக்களை தடை செய்யவேண்டும்.
Rate this:
Cancel
NRI - Chennai,கனடா
09-அக்-202004:14:28 IST Report Abuse
NRI We are worried about the judgments damaging the indian culture coming from the court ,Your Honor
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X