சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே 'வாட்டர்போர்ட்!'

Updated : அக் 08, 2020 | Added : அக் 08, 2020 | கருத்துகள் (26)
Advertisement
புதுடில்லி :சென்னை - புதுச்சேரி -- கன்னியாகுமரி இடையே, சாலை மற்றும் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில், 'சீ ப்ளேன்' எனப்படும், நீர்நிலைகளின் மேல் பறக்கும் விமான சேவையை விரைவில் துவக்க திட்டமிடப்பட்டு வருவதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.விழுப்புரம் -- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில்
  சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே   'வாட்டர்போர்ட்!'

புதுடில்லி :சென்னை - புதுச்சேரி -- கன்னியாகுமரி இடையே, சாலை மற்றும் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில், 'சீ ப்ளேன்' எனப்படும், நீர்நிலைகளின் மேல் பறக்கும் விமான சேவையை விரைவில் துவக்க திட்டமிடப்பட்டு வருவதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

விழுப்புரம் -- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, அரும்பார்த்தபுரம் ரயில்வே கிராசிங்கில், 35 கோடி ரூபாய் மதிப்பிலான, 1 கி.மீ., நீளமுள்ள மேம்பாலம், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.இதை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.' வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:சென்னை -- புதுச்சேரி இடையிலான சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த, 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 287 கி.மீ., தூரத்துக்கு, பணிகள் நடந்து வருகின்றன.


பிரம்மாண்ட மேம்பாலம்கடந்த ஆறு ஆண்டுகளில், புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்காக, 70 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியின் ராஜிவ் சதுக்கத்தில், 232 கோடி ரூபாய் செலவிலும், இந்திரா சதுக்கத்தில், 196 கோடி ரூபாய் செலவிலும், பிரமாண்ட மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்ப ட்டுள்ளது.மேலும், சென்னை - புதுச்சேரி - காரைக்கால் - கன்னியாகுமரி வரையிலான கடல் மார்க்கத்தில், சீ ப்ளேன் எனப்படும், கடல் விமான சேவையை துவக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வானில் பறக்கும் விமானங்களை போலவே, கடல், நதி, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் மேல், அதி வேகத்தில் செல்லவும், தரையிறங்கவும், தேவைப்படும் போது பறக்கவும் பயன்படுத்தப்படும் விமானங்கள், சீ ப்ளேன் என அழைக்கப்படுகின்றன. பிரமாண்ட படகு போலவும், இவற்றை பயன்படுத்தலாம்.

கடுமையான காட்டுத் தீ போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது, நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, தீ எரியும் பகுதியில் ஊற்றி, கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளுக்கு தான், கடல் விமானங்கள், முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தன.பின், இவற்றின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்படுத்தப்பட்டதை அடுத்து, பயணியர் சேவைகளுக்கும் இவற்றை, பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

குஜராத்தின், ஆமதாபாதில் அமைந்துள்ள, சபர்மதி ஆற்றில் இருந்து, பிரமாண்ட சர்தார் படேல் சிலை அமைந்துள்ள, கேவாடியா வரை, கடல் விமான போக்குவரத்து, இம்மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது.
இதற்காக, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலை ஆணையம் ஆகியவற்றுடன், குஜராத் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.


பயண நேரம் குறையும்தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வாயிலாக, இந்த சேவை வழங்கப்பட உள்ளது. குஜராத்தில், 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தினர், இந்த சேவையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.சென்னை -- புதுச்சேரி -- கன்னியாகுமரி இடையே, இதுபோன்ற கடல் விமான போக்குவரத்து சேவை துவக்கப்பட்டால், விமானங்கள் புறப்படவும், தரை இறங்கவும், 'ஏர்போர்ட்'கள் அமைக்கப்படுவதைப் போல, 'வாட்டர்போர்ட்' எனப்படும், நீர்நிலை விமான நிலையங்கள் அமைக்கப்படும். சுற்றுலா வளர்ச்சி அடையும்; பயண நேரம் குறையும்.சாலை மற்றும் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசல் கணிசமாக குறையும்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
09-அக்-202021:15:37 IST Report Abuse
oce கடலில் வாட்டர் போர்ட் கட்டி விடும் விமானத்தில் சரக்கையும் ஏழை மக்களையும் ஏற்ற பயன்படாது.அதில் அடிக்கடி அரசியல் வாதிகள் தான் பயணிப்பர். இதனால் ரயில் நெரிசல் குறையாது. அதற்கு பதில் வாட்டர் ஷிப் யார்டு அமைத்து அதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களையும் நெஞ்சாலைகளில் கனரக வாகனங்களில் கொண்டு செல்லும் அனைத்து வித பொருட்களையும் ஏற்றி செல்ல சிறு கப்பல்களை குறைந்த கட்டணத்தில் விடலாம். நெடுஞ்சாலைகளை அடைத்தபடி செல்லும் ஹெவி குட்ஸ் லாரிகள் போக்கு வரத்து வெகு வாக குறையும். சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் கிடப்பில் உள்ளதை செயல்படுத்தலாம்.
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
09-அக்-202019:32:42 IST Report Abuse
Krish அய்யா எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சொல்லி என்ன உபயோகம் ? கர்நாடகாவை பாருங்கள் ,சுமார் நாற்பத்து ஐந்து வருடம் முன் பெங்களூருக்கு குல்பர்கா ராய்ச்சூர் சோலாப்பூர் பாம்பே போன்ற ஊர்களுக்கு போக குண்டக்கல்லில் டிரைன் மாற்றவேண்டும் .ஜாபிர் ஷரீப் என்பவர் ரயில் அமைச்சரானார் .இப்போது பாருங்கள் பதினாறு ட்ரைங்கள் உள்ளன , டிரைன் மாறவேண்டாம் . அதேபோல் மீட்டர் காஜ் எல்லாம் பிராட் காஜ் ஆகின . கொங்கன் ரயில்வே நிறுவி பெங்களுர் , மங்களூர் , உடுப்பி ,கார்வார் , வழியாக பாம்பே மற்றும் கோவா விற்கு டிரைன் .இதை செய்தவர் ஷரீப் . இப்போது காலம் ஆனாரே சுரேஷ் அங்காடி என்பவர் அவர் கொண்டு வந்த திட்டங்கள் மிக மிக அருமை எல்லாம் கர்நாடகாவிற்க்கே . இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ,அநத அமைச்சர்கள் கன்னட தேசத்தவர் கர்நாடகாவுக்கு சேவை செய்தனர் .நம் திராவிட கட்சிகளோ 'தன் குடும்பத்திற்கு வேண்டிய 'அலை வரிசை , வற்றாத வரும்படி கொடுக்கும் மருத்துவத்துறை ,போன்றவற்றை கொண்டு வந்து 'தமிழ் நாட்டை மறந்தே போனார்கள் .இல்லை என்றால் ஒருகாலத்தி கலைஞ்சர் 'மத்திய அரசை தன நுனி விறல் அசைவில் வைத்து ஆட்டம் காண்பிக்கும் பவர் இருந்தது . இந்த திராவிட கட்சிகளோ [ திராசாவிடர்கள் அல்லவா ] தமிழர்களை பற்றி ஏன் கவலை , தமிழ் நாட்டை ஏன் மூன்ற வேண்டும் .தான் தன கும்பங்கள் வாரிசுகள் இதுதான் அவர்கள் நினைப்பு
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
09-அக்-202019:08:20 IST Report Abuse
ஆனந்த் நான்கு வழிப்பாதையை கனவில் மட்டும் நினைத்திருந்த டுமீளர்களுக்கு இன்று அது நனவானது .. காரணம் .. பிஜேபி இந்த திட்டமும் வெற்றி பெறும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X