அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏன் இப்படி தனி ஆவர்த்தனம் செய்றீங்க...

Updated : அக் 09, 2020 | Added : அக் 09, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என இப்போது அறிவிக்க தேவை இல்லை. தேர்தலின் போது தான், இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அது தான் நியாயம்.- பா.ஜ.,வின், பொன் ராதாகிருஷ்ணன்'ஏன் இப்படி தனி ஆவர்த்தனம் செய்றீங்க... பா.ஜ., இவ்வளவு நாள் இங்கே வளராம போனதுக்கு காரணம் புரியுது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர்,
பேச்சு_பேட்டி_அறிக்கை, பொன்_ராதாகிருஷ்ணன், பாஜ, உதயநிதி ஸ்டாலின்

அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என இப்போது அறிவிக்க தேவை இல்லை. தேர்தலின் போது தான், இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அது தான் நியாயம்.- பா.ஜ.,வின், பொன் ராதாகிருஷ்ணன்


'ஏன் இப்படி தனி ஆவர்த்தனம் செய்றீங்க... பா.ஜ., இவ்வளவு நாள் இங்கே வளராம போனதுக்கு காரணம் புரியுது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,வின், பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.தமிழக வாழ்வுரிமைக் கட்சி துவங்கப்பட்ட நாள் முதல், நடத்தப்பட்ட பல போராட்டங்களின் வாயிலாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும், கேள்விகளையும் தற்போது உயர் நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.- தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்


'அந்த அளவுக்கு, 'தீர்க்கதரிசனம்' கொண்ட உங்கள் கட்சி, தமிழகத்தில் ஏன் வளராமலேயே இருக்கிறது...' என, சந்தேகத்துடன் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை.இன்னொரு கூவத்துாருக்கோ, தர்மயுத்தத்துக்கோ, இருவரும் தயாரில்லை. மிச்சமிருக்கும் மாதங்களையும், கமிஷன், கலெக் ஷன்னு ஓட்டிடுவோம் என, பேசி முடிவுக்கு வந்துள்ளனர்.- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்


'நடிகரான நீங்கள், கமல் போல பெரிய நட்சத்திரமாக வர முயற்சிக்கலாம். அவரைப் போல அரசியல் செய்ய நினைக்காதீர்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.latest tamil news


மோடி, 20 ஆண்டுகளுக்கு முன் முதல்வராக பதவியேற்கும் போது, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் என்ற முத்திரையைத் தவிர, அவருக்கு எந்த பின்புலமும் இல்லை. 20 ஆண்டுகள் கடந்துவிட்டன, இன்னும் அதே முத்திரையுடன் ஜொலிக்கிறார்.- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'அரசியல் வானில் அவ்வப்போது, இது போன்ற நட்சத்திரங்கள் தோன்றுவது உண்டு...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க விரும்புவோருக்கு தேவையான கல்வித் தகுதியில் அடங்கியுள்ள செம்மொழிகள் பட்டியலில், தமிழ் மொழி இல்லை. தமிழர்களின் வரலாற்றை ஒட்டு மொத்தமாக அழிக்க நினைக்கும் காவிக் கூட்டத்தின் கீழ்த்தரமான செயல் இது!- தி.மு.க., எம்.எல்.ஏ., - டி.ஆர்.பி.ராஜா


'கட்சித் தலைமை போலவே, அனைவரும் குரல் கொடுப்பது போன்ற ஒற்றுமை, உங்கள் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியிலும் பார்க்க முடியாது...' என, பாராட்டுவது போல, கவலை தெரிவிக்கத் துாண்டும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., - டி.ஆர்.பி.ராஜா அறிக்கை.வரும், 2021 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா இருந்தால் கூட முதல்வராக முடியாது. எனவே, இ.பி.எஸ்., இருந்தால் என்ன; ஓ.பி.எஸ்., இருந்தால் என்ன?- தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்


'அட, அந்த அளவுக்கு, காங்., வலுப்பெற்று, தனித்து ஆட்சி அமைக்கப் போகிறதா...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arasu -  ( Posted via: Dinamalar Android App )
09-அக்-202018:47:50 IST Report Abuse
arasu திருநாவுக்கரசர் சொல்வது மிகச்சரி. இங்கு காங்கிரஸ் பற்றி குறை சொல்வது அர்த்தம் இல்லாதது. நாட்டையே ஆளும் பிஜேபிக்கே இங்கு ஒரு MLA கூட கிடையாது.
Rate this:
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
09-அக்-202020:18:51 IST Report Abuse
Davamani Arumuga Gounderசுயேட்சையாக நின்றாலும் வேற்றி வாகை சூடிவரக்கூடிய தனது சொந்த தொகுதியில் உள்ள தமது சொந்த பலத்தைப் போல காங்கிரஸ் கட்சியின் பலமும் தமிழ்நாட்டில் உள்ளது.. என்று திருநாவுக்கரசர் ஐயா அவர்கள் பகல்கனவு காணுகிறாரோ?...
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
09-அக்-202016:36:12 IST Report Abuse
Baskar காங்கிரஸ் என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறதா. சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு வருவேன் என்று சினிமா துறையை தேர்ந்தெடுத்து அங்குள்ள நடிகைகளிடம் ஆதி வாங்கியது தான் மிச்சம். எப்படி சீரழிந்து சினிமாவில் போனீர்களோ அதே நிலை அரசியலில் வரும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
09-அக்-202015:36:09 IST Report Abuse
r.sundaram காங்கிரசுக்கு களத்தில் இருந்தால்தானே நிலவரம் தெரியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X