பொது செய்தி

இந்தியா

விமானத்தில் பிறந்த குழந்தை; வாழ்நாள் முழுவதும் பறக்க சலுகை

Updated : அக் 09, 2020 | Added : அக் 09, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
பெங்களூரு: டில்லியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை இண்டிகோ நிறுவனம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டில்லியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற இண்டிகோவின் 6E 122 விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார். விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த நேரத்தில் அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ
IndigoFlight, BabyBorn, FreeTicket, LifeTime, Offer, இண்டிகோ, விமானம், குழந்தை பிறப்பு, இலவச பயணம், சலுகை

பெங்களூரு: டில்லியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை இண்டிகோ நிறுவனம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டில்லியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற இண்டிகோவின் 6E 122 விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார். விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த நேரத்தில் அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வழி ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் விமானத்திலேயே ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இது விமானத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


latest tamil news


இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛6E 122 டில்லி - பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. மாலை 7:40 மணிக்கு விமானம் தரையிறங்கியது. அனைத்து செயல்பாடுகளும் இயல்பானவை. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களை வாழ்த்துகிறோம்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்திலேயே பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும், இண்டிகோ விமானத்தில் இலவசமாக பயணம் செய்யும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
10-அக்-202015:30:24 IST Report Abuse
Perumal Some people are there ,who always find fault in others actions. I don't know whether they are always perfect in their life.
Rate this:
Cancel
09-அக்-202019:41:57 IST Report Abuse
theruvasagan நடுவானில் பிறந்த குழந்தைக்கு தங்கள் சுயவிளம்பரத்துக்காக வாழ்நாள் முழுக்க இலவச பயணச்சலுகை கொடுக்குற இந்த விமான நிறுவனம் இதற்கு முன்பு பயணம் செய்ய வந்த சில மாற்றுத்திறனாளிகளை மிகவும் கடுமையாகவும் துளியும் மனிதாபிமானமில்லாமலும் நடத்திய கொடுமை மறக்கக்கூடிய விஷயமில்லை. அப்ப எங்க போச்சு இந்த சமூக அக்கறை.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
09-அக்-202019:23:18 IST Report Abuse
Tamilnesan அது சரி, குழந்தை பிறந்த இடம் என்று எந்த இடத்தை பிற்காலத்தில் சொல்வார்கள். புது பாஸ்போர்ட் போன்றவற்றை வாங்க இது தேவை ஆயிற்றே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X