பொது செய்தி

இந்தியா

24 மணிநேர ஆர்.டி.ஜி.எஸ் சேவை; டிரண்டிங்கில் வரவேற்பு

Updated : அக் 10, 2020 | Added : அக் 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: வரும் டிசம்பர் மாதம் முதல் 24 மணிநேரமும் ஆர்.டி.ஜி.எஸ் சேவையை பயன்படுத்தி பரிமாற்றம் செய்யலாம் என்ற ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்பிற்கு டுவிட்டரில் பலரும் வரவேற்று பதிவிட்டுள்ளனர். இதனால் #RTGS என்னும் ஹேஸ்டேக்குகள் டிரண்டானது.ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று நிதிக்கொள்கையை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், ‛ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே
RTGS, TodayTrending, RBI, Governor, ஆர்டிஜிஎஸ், டிரண்டிங்

புதுடில்லி: வரும் டிசம்பர் மாதம் முதல் 24 மணிநேரமும் ஆர்.டி.ஜி.எஸ் சேவையை பயன்படுத்தி பரிமாற்றம் செய்யலாம் என்ற ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்பிற்கு டுவிட்டரில் பலரும் வரவேற்று பதிவிட்டுள்ளனர். இதனால் #RTGS என்னும் ஹேஸ்டேக்குகள் டிரண்டானது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று நிதிக்கொள்கையை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், ‛ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும். நடப்பு நிதியாண்டு இறுதிவரை, இந்த விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி வகிதம் 3.35 சதவீதமாகவே தொடரும். பொருளாதார வளர்ச்சி 2020-21ல் 9.5 சதவீதமாக சரியும்,' என பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) குறித்த அறிவிப்பை பலரும் வரவேற்றனர். அதாவது, வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் ஆர்.டிஜி.எஸ் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என அறிவித்தார்.

வங்கி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் நேஷனல் எலெக்ட்ரானிக் பண்டு டிரான்ஸ்பர் எனப்படும் என்.இ.எப்.டி (NEFT) மற்றும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் எனப்படும் ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) ஆகியவை முக்கிய பங்காற்றுகிறது. இதில் என்.இ.எப்.டி, 2 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தொகைகளின் பரிவர்த்தனைக்குரியது, ஆர்.டி.ஜி.எஸ் என்பது, பெரிய தொகைகளின் பரிவர்த்தனைக்கானது.
இந்த முறைகளில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்பட்சத்தில் வங்கி சார்பில் குறிப்பிட்ட அளவிலான பணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 1 முதல் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை ஊக்குவிக்கும் வகையில் இந்த இரு முறைகளிலும் விதிக்கப்பட்ட கட்டணங்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.


latest tamil news



இதில், ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனை என்பது 24 மணிநேர சேவை கிடையாது. வங்கியின் வேலை நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த சேவையை பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இதனால், வங்கி செயல்படும் நாளில், செயல்படும் நேரத்தில் மட்டுமே 2 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்பதால் வணிக ரீதியாக பலரும் பாதிக்கப்பட்டிருந்தனர். எந்தநேரத்திலும் ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க பல கோரிக்கைகள் எழுந்த நிலையில், இன்று ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்பை பலரும் வரவேற்றனர்.

இனி, வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து நாட்களிலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆர்.டி.ஜி.எஸ் செய்யலாம் என்ற அறிவிப்பை வரவேற்கும் விதமாக டுவிட்டரில் #RTGS என்னும் ஹேஸ்டேக்குகள் டிரண்டானது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan -  ( Posted via: Dinamalar Android App )
10-அக்-202009:01:03 IST Report Abuse
Appan National Electronic Fund Transfer is a retail payment system. No minimum amount and no maximum amount is prescribed. customer can send any amount. Maximum mentioned as Rs 2 Lacs is incorrect. However, NEFT is not an instant transfer system. It works on batch settlement basis. settlement is once in half an hour only. Real Time Gross Settlement is designed for high value payments. Minimum is Rs. 2 Lacs and there is no maximum ceiling. The settlement is continuous and case to case ongoing basis. Funds transfer is instant. With regard to retail payment systems, even advanced countries have not achieved what India has achieved. Really great.
Rate this:
Cancel
குண்டிநோண்டி சோமு ஐய்யா ஜாலி
Rate this:
Cancel
Mani Nrs - mumbai,இந்தியா
09-அக்-202020:53:41 IST Report Abuse
Mani Nrs உண்மையாகவே வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை இதனால் வர்த்தகரீதியாக மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X