பொது செய்தி

இந்தியா

கறுப்பு பணம்: இந்தியாவிடம் 2வது பட்டியலை வழங்கியது சுவிஸ்

Updated : அக் 09, 2020 | Added : அக் 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: கறுப்பு பணம் குறித்த இரண்டாவது பட்டியலை, சுவிட்சர்லாந்து அரசு, இந்தியாவிடம் வழங்கியுள்ளது.இரு நாடுகளுக்கு இடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை சுவிஸ் அரசு வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப்பணத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கையில்,
India, Swissbank, account, detail, automatic, exchange, framework, கறுப்புபணம், இந்தியா, சுவிஸ்வங்கி,

புதுடில்லி: கறுப்பு பணம் குறித்த இரண்டாவது பட்டியலை, சுவிட்சர்லாந்து அரசு, இந்தியாவிடம் வழங்கியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை சுவிஸ் அரசு வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப்பணத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கையில், இது முக்கிய மைல்கல்லாகும். சுவிட்சர்லாந்தின் மத்திய வரி நிர்வாகம்(எப்டிஏ), கறுப்பு பணம் குறித்த விவரங்களை மேலும் 85 நாடுகளுக்கும் வழங்கியுள்ளது.

கறுப்பு பணம் குறித்த முதல் பட்டியலை, கடந்த 2019ம் ஆண்டு செப்., மாதம் சுவிஸ் அரசிடம் இருந்து இந்தியா பெற்றிருந்தது. அப்போது 75 நாடுகள், தங்கள் நாட்டு மக்களின் கறுப்பு பணம் குறித்த விவரங்களை பெற்றிருந்தன. இன்று பெறப்பட்ட விவரங்களில் 31 லட்சம் நிதி கணக்குகள் குறித்த விவரம் உள்ளது. இதே அளவு விவரங்கள் கடந்த 2019ம் ஆண்டும் இருந்தது.


latest tamil news



எப்டிஏ வெளியிட்ட அறிக்கையில், கறுப்பு பணம் குறித்து வழங்கப்பட்ட பட்டியலில் இந்தியாவின் பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், இந்த அமைப்பு வழங்கிய விவரங்களில் இந்தியர்களின் விவரங்களை பெற்றுள்ளதாக, பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திடம் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-202013:24:54 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) பெயர்களை மத்திய அரசு வெளி இட வேண்டும் கருப்பு பண முதலைகளை இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் . தமிழக அரசியல்வாதிகள் நிச்சயம் இடம் பெற்று இருப்பார்கள் 50 ஆண்டுகளில் அடித்தது கொஞ்சமா நஞ்சமா ??
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-அக்-202004:51:20 IST Report Abuse
J.V. Iyer முதல் பட்டியல் வந்து என்ன தீர்வு? இந்திய அரசு என்ன செய்தார்கள்? விளைவுதான் என்ன? கறுப்புப்பணம் திரும்ப அரசுக்கு வந்ததா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தினமலரே நீங்கள் தான் செய்தி வெளியிடவேண்டும். நன்றி.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
10-அக்-202002:13:15 IST Report Abuse
Murthy கூடியவிரைவில் அனைவர் வங்கி கணக்கிலும் பதினைந்து லக்சம் வரவு வைக்கப்படுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X