இந்திய போர் விமான தகவல்கள் பாக்.,க்கு விற்பனை: எச்.ஏ.எல்., ஊழியர் கைது

Updated : அக் 09, 2020 | Added : அக் 09, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
மும்பை: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர் ஒருவர், இந்திய போர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.மஹா., மாநிலம் நாசிக் அருகே ஒசர் என்ற பகுதியில் மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு போர் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
HAL, Employee, Arrested, Supplying, FighterJet, Pakistan, ISI, எச்ஏஎல், ஊழியர், இந்தியா, போர் விமானம், தகவல்கள், பாகிஸ்தான்

மும்பை: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர் ஒருவர், இந்திய போர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹா., மாநிலம் நாசிக் அருகே ஒசர் என்ற பகுதியில் மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு போர் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்குள்ள விமான தளம் மற்றும் உள்ளே இருக்கும் தயாரிப்பு அலகுகள் ஆகியவை தடை செய்யப்பட்ட பகுதிகளாகும். இந்த நிலையில் இங்கு துணை மேற்பார்வையாளராக பணியாற்றும் தீபக் சிர்சாத் நடவடிக்கைகள் குறித்து மஹா., தீவிரவாத தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் நடத்திய விசாரணையில், பாக்., சர்வதேச உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தீபக் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்தனர்.


latest tamil news


அவரிடமிருந்து 3 மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள், இரண்டு மெமரி கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் இந்திய போர் விமானங்கள் குறித்த தகவல்கள், தயாரிக்கும் இடத்தின் படங்கள், விமான தள படங்கள் ஆகியவை இருந்துள்ளன. இவற்றை வாட்ஸ்அப் மூலம் ஐ.எஸ்.ஐ.,க்கு அனுப்பியுள்ளார். நாசிக் அருகே ஒசர் பகுதியில் செயல்படும் எச்.ஏல்.எல்., 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு விமான படையில் உள்ள மிக் 21 ரகத்தில் உள்ள எப்.எல்., பி.ஐ.எஸ்., மற்றும் எம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டிலேயே முழுக்க வடிவமைக்கப்பட்ட சு-30 எம்.கே.ஐ., இங்கு தயாராகிறது. இது தவிர கே.31 ஏவுகணை உற்பத்திக்கும் இந்த அலகு உரிமம் பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
15-அக்-202015:53:31 IST Report Abuse
S.P. Barucha இட ஒதுக்கீடு கூட்டமா?
Rate this:
Cancel
12-அக்-202017:26:03 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) எதிரிகளை கூட மன்னிக்கலாம் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது.
Rate this:
Cancel
12-அக்-202017:24:51 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) பணத்துக்காக நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகளுக்கு தூக்குத்தண்டனை தான் சரியான தேர்வாக இருக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X