சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 09, 2020
Share
Advertisement
வெப்பநிலை உயர்வுக்கு காரணம்பூமியின் வெப்பநிலை உயர்வுக்கு கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகியவை அடங்கிய பசுமை இல்ல வாயுக்கள் முக்கிய காரணமாகின்றன. இந்நிலையில் கார்பன் வெளியீட்டின் பாதிப்பை விட, நைட்ரஸ் ஆக்சைடு வெளியீட்டின் அளவு 300 மடங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டு களில் விவசாய உற்பத்தியில்

வெப்பநிலை உயர்வுக்கு காரணம்

பூமியின் வெப்பநிலை உயர்வுக்கு கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகியவை அடங்கிய பசுமை இல்ல வாயுக்கள் முக்கிய காரணமாகின்றன. இந்நிலையில் கார்பன் வெளியீட்டின் பாதிப்பை விட, நைட்ரஸ் ஆக்சைடு வெளியீட்டின் அளவு 300 மடங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டு களில் விவசாய உற்பத்தியில் அதிகரித்து உரங்களின் பயன்பாட்டால், நைட்ரஸ் ஆக்சைடு வாயு அளவு அதிகரித்துள்ளது. 2100ல் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


தகவல் சுரங்கம்



மரண தண்டனை எதிர்ப்பு தினம்

மரண தண்டனை விதிப்பதை கைவிட வலியுறுத்தி, அக்.10ல் உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2002 மே13ல் ரோமில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கூடி, மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றின. செய்யாத குற்றம், மொழி புரியாததால் அடைந்த தண்டனை, ஆராயப்படாத நீதி, மூளை வளர்ச்சியில்லாதவர் செய்த குற்றம், சிறுவயதில் செய்த குற்றம் காரணமாக உலகில் 5 பேருக்கு அநீதியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இனி இதுபோல் நடக்காமல் இருக்க மரண தண்டனையை உலக நாடுகள் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X