பொது செய்தி

இந்தியா

'இட்லி'யை இகழ்ந்த பேராசிரியர்; பாடம் புகட்டிய சசி தரூர்

Updated : அக் 09, 2020 | Added : அக் 09, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: இட்லியை விமர்சித்த பிரிட்டன் பேராசிரியரை காங். - எம்.பி. சசி தரூர் 'டுவிட்டர்' வாயிலாக விமர்சித்தார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் டுவிட்டரில் 'இந்தியாவின் தென் மாநிலங்களில் வசிக்கும் மக்களின் விருப்ப உணவான இட்லி தான் உலகிலேயே சலிப்பான உணவு வகை' என பதிவிட்டார்.இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென்
UK professor, idli, boring, Shashi Tharoor

புதுடில்லி: இட்லியை விமர்சித்த பிரிட்டன் பேராசிரியரை காங். - எம்.பி. சசி தரூர் 'டுவிட்டர்' வாயிலாக விமர்சித்தார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் டுவிட்டரில் 'இந்தியாவின் தென் மாநிலங்களில் வசிக்கும் மக்களின் விருப்ப உணவான இட்லி தான் உலகிலேயே சலிப்பான உணவு வகை' என பதிவிட்டார்.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் டுவிட்டரில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். காங். - எம்.பி. சசி தரூரின் மகன் இஷான் தரூரும் விமர்சித்தார். இதையடுத்து சசி தரூரும் களத்தில் இறங்கினார்.


latest tamil news



அவர் குறிப்பிட்டதாவது: இட்லியின் சுவையை பாராட்டுவதற்கும் கிரிக்கெட்டை ரசிப்பதற்குமான திறன் எல்லாருக்கும் இருக்காது. வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கும் இந்த மனிதரைப் பார்த்து பரிதாபப்படு மகனே. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து ஆண்டர்சன் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: எதிர்பாராத விதமாக இந்திய மக்களை கோபமடைய வைத்துவிட்டேன். என் மீதான விமர்சனங்களுக்குப் பின் மதிய வேளைக்கு இட்லியை 'ஆர்டர்' செய்து சாப்பிட்டேன். எனக்கு தோசை, ஆப்பம் உள்ளிட்ட பெரும்பாலான உணவு வகைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் புட்டு மற்றும் இட்லியை என்னால் சகித்துக்கொள்ள இயலாது. என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-அக்-202016:32:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni அஞ்சிமாசாகுழந்தைலேந்து பெட்ரிட்ட்டேனா கிடைக்கும் கிளவாவரை உண்ணக்கூடிய வெறி பெஸ்ட் உணவு இட்லி தெரியுமா இந்த ஆண்டர்சன் போன்றவாளுக்கெல்லாம் மைதலே செய்த கேக் பிரெட் எல்லாமேதான் பெஸ்ட் போவ்ட் அவாளுக்கெல்லாம் மட்டன் கோழி ஆடுமாடு துண்ணும் பிறவிகள்தானே
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-202020:14:00 IST Report Abuse
Endrum Indian வேடிக்கை என்னவென்றால் இட்லியை குறை சொன்ன எட்வர்ட் ஆண்டெர்சன்னின் பெண்டாட்டி மலையாளி. ஆகவே தான் அந்த எரிச்சலில் கூறியிருக்கின்றான். சஷி தரூர் சொன்னது என் வீட்டுக்கு வா உனக்கு இட்லியோடு சட்னி சாம்பார் தருகின்றேன் அது உனக்கு புடிக்கும் என்று சொன்னான் இது என்னவோ பெரிசா சொன்ன மாதிரி இந்த தப்ப எதுக்கு, உடனே பலரிடம் இருந்து எதிர்ப்பு டீவீடீர் வந்ததும் தான் செய்தது தவறு என்று சொல்லி தன்னை மாற்றி றிக்கொண்டார். அவ்வ்ளவு தான் நடந்தது மலையாளி பெண்டாட்டி ஆண்டர்சனை இட்லி தின்ன வைத்ததால் வந்த ட்வீட் இது அவ்வளவே.
Rate this:
Cancel
vidhuran - chennai,இந்தியா
11-அக்-202010:41:13 IST Report Abuse
vidhuran கருத்து தெரிவித்தவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. ஒருவர் சஷி தரூர் மனைவியை கொன்றவர் என்கிறார்கள் ஒருவர் காங்கிரஸ் எம்பி என்கிறார்கள். மொத்தத்தில் இவர்களுக்கெல்லாம் கூட கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பது தான் கொடுமை. இதற்கு மேலும் இவர்களை போன்றவர்கள் கருத்துக்களை பதிவு செய்யும் ட்விட்டரில் இட்லி பிடித்தால் எனா? பிடிக்காவிட்டால் என்ன? ஒரு ஐரோப்பியர் இட்லி எனக்கு பிடிக்காது என்று சொன்னதற்கு இவ்வளவு தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X