பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு கால வாழ்க்கைக்கு ஏற்ற நகரம் இந்தியாவில் கோவைக்கு மூன்றாமிடம்!

Updated : அக் 11, 2020 | Added : அக் 10, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
ஓய்வுக்குப் பின் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவில் இடம் பெற்றுள்ள ஐந்து நகரங்களில் கோவை மூன்றாவது இடம் பிடித்துள்ளது.'டுமாரோ மேக்கர்ஸ்' என்ற பன்னாட்டு ஆலோசனை நிறுவனம், மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து பல்வேறு கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், ஓய்வு காலத்தில் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்கள் குறித்து சமீபத்தில் தேசிய அளவிலான
 ஓய்வு கால வாழ்க்கைக்கு ஏற்ற நகரம் இந்தியாவில் கோவைக்கு மூன்றாமிடம்!

ஓய்வுக்குப் பின் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவில் இடம் பெற்றுள்ள ஐந்து நகரங்களில் கோவை மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

'டுமாரோ மேக்கர்ஸ்' என்ற பன்னாட்டு ஆலோசனை நிறுவனம், மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து பல்வேறு கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், ஓய்வு காலத்தில் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்கள் குறித்து சமீபத்தில் தேசிய அளவிலான ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.


வாழ்க்கைத்தரம், மருத்துவம், போக்குவரத்து வசதிகள், குற்ற விகிதம் மற்றும் சீதோஷ்ண நிலை ஆகிய ஐந்து விஷயங்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. விலைவாசி, வாடகை உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சேகரித்து அதன் அடிப்படையில், ஐந்து நகரங்களை பட்டியலிட்டுள்ளது.

இதில், சண்டிகார், முதலிடத்தைப் பிடித்துள்ளது. மஹாராஷ்டிராவின் புனே நகரம், இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவை மாநகரம், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை தெலங்கானா தலைநகரம் ஹைதராபாதும், உத்தரகண்ட் மாநிலத்தின் குளிர்காலத் தலைநகராக விளங்கும் டேராடூனும் பிடித்துள்ளன.

குறிப்பாக, 64 சதவீத இந்தியர்களுக்கு, தங்களுடைய ஓய்வு கால வருவாய் இலக்கு குறித்த அச்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த நிறுவனம், சென்னையை விட நுகர்பொருட்களின் விலை, கோவையில், 19 சதவீதம் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


குற்ற விகிதம் சற்று அதிகம்

தேசிய குற்றப்பதிவேடு ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரப்படி, குற்றவியல் விகிதம் க்ரைம் ரேட் தேசிய சராசரியை விட சற்று அதிகமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கோவை மாநகர போலீசாரிடம் கேட்டபோது, 'வடமாநில நகரங்களில் சின்னச் சின்ன குற்றங்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. இங்கு பதிவு செய்யப்படுகின்றன. அதனால் தான், தேசிய சராசரியை விட அதிகமாகத் தெரிகிறது. ஆனால், இங்கு அச்சப்படும் வகையில் கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகம் நடப்பதில்லை' என்றனர்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
11-அக்-202015:07:32 IST Report Abuse
 Muruga Vel எடப்பாடி கோயமுத்தூர் காரரா ..
Rate this:
Cancel
INNER VOICE - MUMBAI,இந்தியா
11-அக்-202014:00:52 IST Report Abuse
INNER VOICE திருவனந்தபுரம் தான் முதலிடம் வரவேண்டும்.யார் கண் பட்டுதொ
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
10-அக்-202023:02:50 IST Report Abuse
கொக்கி குமாரு அதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X