ஆஸ்துமா ஆபத்தா
மற்றவர்களுடன் ஒப்பிடும் போது, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பாதித்தாலும், அதனால் பெரிய ஆபத்து இல்லை என அமெரிக்காவின் பாஸ்டன் ெஹல்த்கேர் சிஸ்டம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே வயதினரை சேர்ந்த 562 ஆஸ்துமா நோயாளிகள், 2686 ஆஸ்துமா இல்லாதவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மருத்துவமனை, வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை இரு பிரிவிலும் ஒரே அளவில் இருந்தாலும், உயிரிழப்பு சதவீதம் ஆஸ்துமா பிரிவினரிடம் குறைவாக இருந்தது.
தகவல் சுரங்கம்
பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகள் சுமையல்ல, அவர்கள் கடவுள் கொடுத்த வரம் என்பதை புரிந்து அவர்களை கொண்டாட வேண்டும். பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், உரிமைகளை காத்தல் மற்றும், சாதனைகளை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 11ல் உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 'எனது குரல், நமது சமமான எதிர்காலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. இன்னும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும். பெண் குழந்தை கல்வி கற்றால், அவள் மட்டுமல்ல சமூகமே முன்னேற்றம் பெறும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE