தமிழகம் பாலைவனமாகும்

Updated : அக் 12, 2020 | Added : அக் 10, 2020 | கருத்துகள் (20) | |
Advertisement
தமிழகத்தில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்து, போராட்டங்களை அறிவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு செய்தி சொன்னார்... 'இப்படி எல்லாவற்றையும் எதிர்த்தால், தமிழகம் விரைவில் பாலைவனமாகி விடும்' என்று சொல்லியிருந்தார். உடனே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, அவர் மீது
உரத்த சிந்தனை

தமிழகத்தில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்து, போராட்டங்களை அறிவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு செய்தி சொன்னார்... 'இப்படி எல்லாவற்றையும் எதிர்த்தால், தமிழகம் விரைவில் பாலைவனமாகி விடும்' என்று சொல்லியிருந்தார்.


உடனே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, அவர் மீது பாய்ந்தன.'அப்படியானால், ஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ மற்றும் 'நீட்' தேர்வுக்கு, ரஜினி என்ன சொல்வார்' என்று கேட்டனர். ரஜினி ஒரு ஜனநாயகவாதியாக இருப்பதால், ஒருவேளை இவர்கள் கூற்று உண்மையாக இருக்குமோ என்று எண்ணி, அமைதி காத்துவிட்டார்.


போராட்டக்காரர்களுக்கு இது மேலும் ஒரு வெற்றியாயிற்று. சிலருக்கோ, 'ஒரு சில திட்டங்கள் நின்று போவதால், தமிழகம் எப்படி பாலைவனமாகும்' என்று சந்தேகம் ஏற்பட்டது. எப்படி பாலைவனமாகும் என்று பார்ப்பதற்கு முன், ஒரு மீள்பார்வை.


தமிழகத்தின் பொற்காலம்முன்னாள் முதல்வர் காமராஜரின் தலைமையில், 1954 முதல், 1963 வரை இருந்த காலம், தமிழகத்தின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. தமிழகம், தொழில் துறையில் முன்னோடியாவதற்கான அடித்தளம், இவர் காலத்தில் தான் அமைக்கப்பட்டது. தொழில் துறையில் தமிழகம் இன்று மேலோங்கி விளங்குவதற்கான காரணம், கீழ்கண்ட திட்டங்களின் பட்டியலைப் பார்த்தால் தெரியும்.

* ரயில் பெட்டித் தொழிற்சாலை - 1955
* கிண்டி தொழிற்பேட்டை - 1955
* நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் - 1957
* ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை - 1961
* அம்பத்துார் தொழிற்பேட்டை - 1964
* பாரத் மிகு மின் நிறுவனம் (பெல்) - 1965
* சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - 1965
* மதுரை மருத்துவக் கல்லுாரி - 1954
* இந்திய தொழில்நுட்பக் கழகம் - 1959
* மண்டல பொறியியல் கல்லுாரி (ஆர்.இ.சி.,) திருச்சி - 1964

காமராஜர், தேசிய அரசியலில் தன்னிகரற்ற தலைவராக வலம் வந்தார். அவருடன் அன்றைய தொழில் துறை அமைச்சராக இருந்த, ஆர்.வெங்கட்ராமன், டி.வி.எஸ்., - எம்.ஆர்.எப்., முருகப்பா தொழில் குழுமங்களை அணுகி, தமிழகத்தில் தொழில்களை ஆரம்பிக்க ஊக்குவித்தார். இந்த அடிப்படைத் தொழில்கள் தான், 1990 முதல், தமிழகத்தில் அடுத்த தலைமுறை தொழில்கள் வரக் காரணமாயிருந்தன. அது மட்டுமல்லாது, 1991ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பயனையும் பெற முடிந்தது. இன்ஜினியரிங் தொழிலுக்கும், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கும், பொறியியல் பட்டதாரிகளுக்கும், தமிழகம் ஒரு இயங்கு தளமாக அதன்பின் உருவானது. இதன் காரணமாகத் தான், தமிழகத்தில் ஆட்டோமொபைல் குழுமத் தொழில்கள், மின்னணு தொழில்பேட்டைகள் உருவாயின.

கிண்டி, அம்பத்துார் தொழில்பேட்டைகளில் நம் வெற்றியானது, ஓசூர் தொழிற்பேட்டையை கர்நாடகம் பொறாமைப்படும் அளவுக்கு பிரமாண்டமாய் அமைப்பதற்கு, நம்பிக்கையைக் கொடுத்தது.இன்று எடுத்ததற்கு எல்லாம் போராட்டங்களை அறிவிக்கும் இந்த சுயநலவாதிகள் அன்று இருந்திருந்தால், இந்தத் திட்டங்களில் ஒன்று கூட தமிழகத்திற்கு வந்திருக்காது. நிலம் கையகப்படுத்துவதில் இருந்து, சுற்றுச்சூழல் மற்றும் மொழிப் பிரச்னைகளை ஊதிப் பெரியதாக்கியிருப்பர்.


தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு ஒரு நம்பிக்கை... நம் அரசியல் தலைவர்கள், நம் நலனுக்காகத் தான் செயல்படுவர்; அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தை எதிர்த்தால், அது உண்மையில் தீங்கானது என, நம்புகின்றனர்.ஆனால், நம் சுயநல அரசியல் தலைவர்கள், தங்கள் சொந்த ஆசாபாசங்களுக்கும், தங்கள் பொருளாதார பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் பெருக்கிக் கொள்ள, நாட்டு மக்களின் நலனை, காலில் போட்டு மிதிக்கின்றனர்.இதை அறியாமல், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், அப்பாவித்தனமாக, மக்களும் எதிர்க்கத் துவங்கி விடுகின்றனர்; இது, தவறு. ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தைக் கூட, இந்த அரசியல்வாதிகள், அப்போது இருந்திருந்தால் வர விட்டிருக்க மாட்டார்கள்.'அதன் அமைவிடம், மான்கள் பூங்காவில் இருக்கிறது; இது, உயர் ஜாதிக்காரர்களுக்கானது' என்று, ஏதாவது நொண்டி சாக்கு சொல்லி, வரவிடாமல் தடுத்திருப்பர்.

காமராஜருக்குப் பின் தமிழகத்திற்கு உயர் கல்வி நிறுவனங்கள் வர வேண்டுமென்று, எந்த முதல்வரும், அவர் அளவுக்கு பாடுபடவில்லை; எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மிக நீண்ட இடைவெளிக்குப் பின், 2011ல் தான் திருச்சி, இந்திய மேலாண்மைக் கழகம், தானாக அமைந்தது. மேற்சொன்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்காவிடில், தமிழகம் நிச்சயம் பாலைவனமாகத் தான் ஆகியிருக்கும். இன்று, இம்மாநிலத்தில் வழங்கப்படும் இலவசத் திட்டங்களுக்கு காரணம், தொலைநோக்குப் பார்வை கொண்ட, காமராஜர் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளமே. இல்லையெனில், பாலைவனம் மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் வனமாகக் கூட மாறியிருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், இங்கு அமைந்த தொழிற்சாலைகளின் மூலம் அதிகம் பயனடைந்தவர்கள் தொழிலாளர்கள் என்பதை விட, கம்யூனிஸ்ட்கள் தான்; அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள், இந்தத் தொழிற்சாலைகளால் தான் விரிவடைந்தன. நகரங்களிலும், தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்களிலும், மிகப் பெரிய கட்டடங்களை, அவர்கள் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.


இன்றைய போராட்டங்கள்மேற்சொன்ன விபரங்களின் பின்னணியில், இன்றைய காலகட்டத்தில் நடந்த ஸ்டெர்லைட், கூடங்குளம் மற்றும் நியூட்ரினோ திட்டங்களுக்கான எதிர்ப்பு போராட்டங்களைப் பார்ப்போம். இந்தப் போராட்டங்களால், தமிழகத்தைப் பற்றி வெளியுலகில் ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயரால், சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களோ, துாரக் கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களோ தமிழகத்திற்கு வருவதற்கு யோசிக்கும்.ஸ்டெர்லைட் ஆலை தன் ஆரம்ப கால, கவனக்குறைவான நடவடிக்கைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய அபாயகரமான கழிவுகளுக்கும், இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது, அனுபவிக்க வேண்டிய பாவம் தான். எனினும், நீண்ட காலத்திற்கு பிறகே, தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' என்ற கழிவில்லா முறையைக் கொண்டு வந்தனர்.

இவர்கள் செய்த தவறுக்காக, அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள், உயர்நிலை நிர்வாகத்தினர், நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களே.அதற்காக, நாடு ஏன் இழப்பைச் சந்திக்க வேண்டும்... அந்த வட்டாரத்தின் வளர்ச்சி ஏன் பாதிக்கப்பட வேண்டும்... அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும், வாடிக்கையாளரும் ஏன் பாதிப்பை ஏற்க வேண்டும்? இதன் தொடர்ச்சியாக, வங்கிகளின் வாராக் கடன் உயர்ந்து இழப்பிற்கு உள்ளாகின்றன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், யார் நன்மை அடைந்தனர்; எல்லாருக்குமே நஷ்டம் தான். தொழிலாளர்களா, வாடிக்கையாளர்களா, மக்களா, இல்லை, நம் நாடா; சீனாவைத் தவிர வேறு யாரும் நன்மை அடையவில்லை. சீனா மிகவும் மும்முரமாக, முனைப்பாக, தாமிரத்தை நமக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது.இந்த நிறுவனத்தை மூடுவதற்குப் பதிலாக, மாநில அரசு, அந்த நிறுவனத்தைத் தன் பொறுப்பில் எடுத்திருக்கலாம்.


இல்லையேல், சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்க உறுதியளிக்கும் பொதுத்துறை நிறுவனத்திடமோ அல்லது வேறு ஒரு தனியார் நிறுவனத்திடமோ ஒப்படைத்து இருக்கலாம்.அதுவும் இல்லை என்றால், இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற ஒரு நிறுவனத்தின் கண்காணிப்பில் இயங்கச் செய்திருக்கலாம். இது தொடர்பாக, சுற்றுச்சூழல் வல்லுனர்கள் பலரிடம் பேசியபோது, அவர்கள் அனைவருமே இது போன்ற ரசாயனத் தொழிற்சாலைகளை, கழிவுகளற்ற நிலையில் இயக்குவது சாத்தியமே என்று உறுதிபடச் சொல்கின்றனர்.

அதை விடுத்து, இது போன்ற தொழிற்சாலைகளை இயங்க விடாமல் மூடுவது, இன்னும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், ரசாயனத் தொழிற்கூடங்களை மூடினாலும், அவை உறங்குவதில்லை. அங்கு சேமிக்கப்பட்ட ரசாயனங்களில் வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தானிருக்கும். இதனால் ஏற்படும் பேராபத்தை எவரேனும் புரிந்து கொண்டனரா என்றால், இல்லை என்றே நினைக்கிறேன். கூடங்குளம் அணு உலையை, மத்திய அரசு நடத்துகிறது. மேலும், அது ரஷ்யத் தொழில்நுட்பத்தில் இயங்குவது. அதனால், முதலாளித்துவம் என்ற வாதம், கூடங்குளம் பிரச்னையில் எடுபடவில்லை. எனவே தான் போராட்டக்காரர்கள், அணு உலைத் தொழில்நுட்பத்தைப் பிரச்னையாக்கினர்.

அது அவர்கள் கூற்றுப்படியே பிரச்னையானது என்றால், அதுபற்றி விஞ்ஞானிகள் இருபுறமும் இருந்துவிவாதிக்கட்டுமே! வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் அரசு சாரா இயக்கங்கள், எதற்காகப் பிரச்னையைக் கிளப்பி, ஏதுமறியாத கிராமத்து மக்களை இதற்குள் இழுக்க வேண்டும்; இதனால், அவர்கள் அடைந்தது என்ன? மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியதும், இனி வரும் திட்டங்களின் மீது தண்ணீர் தெளித்ததைத் தவிர, வேறு ஒன்றுமில்லை. எல்லா திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழகத்தில் புதிய தொழில்களில் முதலீடு செய்ய யார் முன்வருவர்... அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாளர்கள் அதிகரிப்பரே தவிர, மக்களின் வாழ்வு மேம்படாது.


நியூட்ரினோ பிரச்னை இன்னும் விசித்திரமானது. நியூட்ரினோ எவ்வித கருத்து மாறுபாடுகளுக்கும் இடமில்லாத ஒரு திட்டமாக இருந்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுத்ததின் காரணமாக, விஞ்ஞான ஆராய்ச்சிகளின் தாயகமாகும் பொன்னான வாய்ப்பை இழந்திருக்கிறோம். இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், மது, சாராய ஆலைகள் எதற்குமே தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை என்பது தான். உலகத்தின் சாராய, மது ஆலைகளின் மையமாக தமிழகத்தை உருவாக்குவது தான் நம், 'தலைவர்களின்' நோக்கமா?


பங்களிப்பில்லாதவர்கள்இந்தப் போராட்டங்கள் அனைத்திலுமே, போராட்டக்காரர்களின் இலக்கு, அந்தத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்துவது ஒன்றே! சில நுாறு போராட்டக்காரர்கள், இந்த மாநிலத்தின் தொழில் துறை மற்றும் அறிவியல் வளர்ச்சியின் தலை எழுத்தை நிர்ணயிப்பதை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மிகச் சிறிய குழுவினருடன் சேர்ந்து, தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றன. காரணம், அவர்களுக்கு இழப்பதற்கென்று எதுவுமில்லை. அதில் இணைபவர்கள் ஒவ்வொருவரும் தான் இழக்கப் போகின்றனர். ஒரு திட்டத்திற்கு அதில் உள்ள பிரச்னைகளைப் பேசி களைவதற்கு பதிலாக, அந்தத் திட்டத்தையே நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட குழுவினருடன், அரசு எவ்வாறு பேச்சு நடத்த முடியும்? இதில், அப்பாவி விஞ்ஞானிகளின் வாதமும், விளக்கமும் எடுபடாமல் போய் விடும்.

ஏனெனில், உணர்வுகள் துாண்டப்படும் போது, அதற்கு முன், காரண காரியங்கள் எப்படி எடுபடும்?வரவிருக்கும் தேர்தலின்போது, அரசியல் கட்சிகள் வெளியிட இருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் வளர்ச்சி திட்டங்கள், புதிய தொழிற்சாலைகளை துவக்க ஆதரவு தர வேண்டுமென்ற கோரிக்கையை, இளைய தலைமுறையினர் வைக்க வேண்டும். முந்தைய காலத்தில் ஏற்பட்ட செழிப்பால் கொடுக்கப்படும் இலவசங்களை நம்பி வாழ்வது, நம் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்புச் சத்தில் வாழ்வது போலாகும். இது, நீண்ட நாட்களுக்குத் தாங்காது!

பேராசிரியர் ரமேஷ்
இந்திய மேலாண்மைகழகம், பெங்களூரு
தொடர்புக்கு:
அலைபேசி: 97422 21338,
இ - மெயில்: rameshg@iimb.ac.in

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
11-அக்-202021:14:30 IST Report Abuse
sankaseshan Pro. Ramesh , சொன்னது , 100 % உண்மை .டாஸ்மாக் மாநிலத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் . ஆப்ரிக்காவில் சாம்பிய ஒரு நாடு தாமிர உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில உள்ளது அங்கு பிரச்னை இல்லை TN ல் அந்நிய வெளிநாட்டு மதம் மாற்றிகள் பங்கு முக்கியமானது இது போலவே மற்ற பிரச்னை களும் . அது தவிர டிராவிடக்கட்சிகளுக்கு கப்பம் கட்டவேண்டும் .
Rate this:
11-அக்-202022:10:43 IST Report Abuse
பாமரன்சேஷூ... விஷயம் புரியாமல் உளரக்கூடாது... ஜாம்பியாவில் இருப்பது சுரங்கங்கள்... தாதுப்பொருட்கள் எடுக்கறாங்க... தூத்துக்குடியில் செய்தது ஸ்மெல்டிங்... அதாவது கழிவுகளை அகற்றி அதை உலோக நிலையில் கொண்டு வரும் ஆலை... யாராவது பெரியவாக்கிட்ட வெவரம் கேட்டுட்டு சொம்பை தூக்கிக்கிட்டு வாரும் ஓய்...😠😠 (ஒருவேளை பகோடா கம்பெனி இந்தியாவை ஜாம்பியா கூட கம்பேர் பண்ணுற நிலைக்கு கொண்டு வந்ததா சொல்றாரோ..🤭🤭)...
Rate this:
Nisha Rathi - madurai தமிழக ஒன்றிய முதல்வரை ஒழிப்போம் இந்தியப்பேரரசுவை காப்போம் ,இந்தியா
16-அக்-202015:44:04 IST Report Abuse
Nisha Rathiமதிகெட்டவனே நீதான் விவரம் தெரியாமல் பேசுகிறாய் அவர் உண்மையை தான் சொன்னார்...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
11-அக்-202021:00:42 IST Report Abuse
Rajagopal திராவிடக் காட்சிகள் சினிமாவை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த கட்சிகள். நடிகர்கள், வசன கர்த்தாக்கள், கவிஞர்கள் என்று நாடகம், திரைப்பட பிம்பங்களை வைத்து மக்களை மாய மோகத்தில் மூழ்கச் செய்து பதிவையும், அதிகாரத்தையும் அடைந்தார்கள். அவர்கள் கனவுகள் மட்டும் காண்பதில் வல்லவர்கள். சினிமாவில் புரட்சி நடந்து, கெட்டவர்கள் ஒழியுந்து, மூன்று மணி நேரத்தில் நியாயம் வழங்கப்பட்டு, எல்லாம் நல்லபடியாக முடிந்து விடும். நிஜ வாழ்க்கை அப்படி இல்லை. நிர்வாகம் தெரிந்தவர்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தால், முன்னேற்றம் ஏற்படும். இவர்கள் பிம்பங்களை மட்டுமே வளர்க்கும் திறமை பெற்றிருந்தார்கள். அதனால் வெறும் சிலைகளை எல்லா இடங்களிலும் வைத்தார்கள். அரங்கங்கள் கட்டினார்கள். பேருந்து, கட்டிடங்களின் பெயர்களை மாற்றினார்கள். வேறொன்றும் தெரியவில்லை. பணம் விரயமானது. கருணாநிதி ஒரு கவிஞர், வசன கர்த்தா, கட்டுரைகள் எழுதுபவர். சொற்பொழிவு நன்றாக செய்பவர். எம் ஜீ ஆர் நடித்து மேலே வந்தவர். ஜெயலலிதாவும் அதே வழிதான். இவர்கள் பதவியில் அமர்ந்து என்ன மாதிரிதான் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து அதற்கான திட்டங்களை வகுக்க முடியும்? இலவச சாப்பாடு, இலவசம், இலவசம் என்று பணத்தை வாரி இறைத்தார்கள். இடைத்தரகர்கள் அவற்றை சுருட்டிப் பண முதலைகளானார்கள். பக்தவத்சலம், சி சுப்பிரமணியம், வெங்கடராமன், ராஜாஜி, காமராஜர் போன்றவர்கள் நிர்வாகத் திறமை உடையவர்கள். இவர்களோ ஏரிகளில் வீடு கட்டினால் பஞ்சமும், வெள்ளமும் மாறி மாறி வரும் என்று அறியாதவர்கள். ஆறுகள் வற்றாமல் இருக்க நீர் நிலைகளும், காடுகளும் அழிக்கப் படாமல் இருக்க வேண்டும் என்பதை அறியாதவர்கள். கல்வியின் தரம் என்றால் என்னவென்று அறியாதவர்கள். வெற்றுப் பேச்சினால் எதுவும் சரியாக செய்யாமல், ஊழல் வளர்வதை ஒன்றும் செய்ய இயலாமல், தங்களது பிம்பங்களைக் காட்டி ஆட்சியைப் பிடிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். தரம் குறைந்தது. நிர்வாகம் துருப்பிடித்துப் போனது. ஆறுகள் சாக்கடைகளாக மாறின, இல்லை வற்றின. ஏரிகள் வறண்டு போயின. கனவுலகில் வளர்ந்தவர்கள் நிஜம் என்றால் என்ன என்று அறியாமல் தங்களது அரண்மனைகளில் வாழ்ந்து போனார்கள். இறந்தது அவர்களல்ல. தமிழ் மண். அதை இப்போது பெரியார் மண் என்று பெருமையாக சொல்கிறார்கள். ஆறுகளோடு ஆன்மீகமும் வற்றிப்போய் விட்டது. மனசாட்சி மறைந்து விட்டது. நல்லவர்கள் ஊரை விட்டுப்போய் விட்டார்கள். போக முடியாதவர்கள் அவதியில் சிக்கித் தத்தளிக்கிறார்கள். வளர்ச்சி ஏற்பட்டது காங்கிரஸ் காலத்தில் வித்திட்ட விதைகள். இந்தக் கழகங்கள் பதவியில் வந்திருக்காவிட்டால் தமிழகம் இன்னும் பன்மடங்கு வளர்ந்திருக்கும். இப்போது போராட்டம் போன்றவை மேலும் முன்னேற்றத்திற்குத் தேவையான விதைகளை விதைக்க விடாமல் செய்யும் முயற்சி. என் ஜி ஓக்கள் பெருகி, ஊடுருவி போராட்டங்களை ஏற்படுத்தி எதுவும் வராத படி செய்து வந்துள்ளன. பின்னாலிருப்பது சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள். இவர்கள் இந்த சக்திகளின் கைப்பொம்மையாகி பணம் புரட்டி வாழ்க்கை நடத்துகிறார்கள். சாராயம் இன்றி தமிழ் நாட்டில் பணம் உண்டாக்குவது கடினமாகும் நிலை வந்து விட்டது. கழகங்களை புறக்கணித்து மாற்று ஆட்சி ஏற்பட்டு ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்பட்டு, கலாச்சாரம் மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். இல்லையேல் கேரளாவையும், பிஹாரையும் அரசியவாதிகள் அழித்தது போல தமிழகமும் மாறி விடும். அனைவரும் வேறு இடங்களுக்கு சென்று வேலை செய்து பிழைக்கும் நிலைமை ஏற்படும். கழகங்களைக் குப்பையில் எறியுங்கள். சினிமாக்காரர்களை நம்பாதீர்கள்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
11-அக்-202016:16:58 IST Report Abuse
Svs Yaadum oore மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டது சுடலைதானே … தஞ்சை சோறுடைத்தாம் …இவனுங்க சொல்லித்தான் தெரியணும்… ஆறு ஏரி குளம் குட்டை எல்லாம் நாசம் செய்தது திருட்டு திராவிடம்தானே ….காலி மண்டைக்கு இது புரியலையே …..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X