பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: மாநிலங்களுக்கு கண்டிப்பு

Updated : அக் 12, 2020 | Added : அக் 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : 'பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில், சமீபத்தில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை
பெண்கள், எதிரான குற்றங்கள்,  மாநிலங்கள், மத்திய அரசு கண்டிப்பு

புதுடில்லி : 'பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில், சமீபத்தில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம், நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை, மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவினர், விசாரித்து வருகின்றனர்.



கடும் நடவடிக்கை



இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை கையாள்வது குறித்த புதிய வழிமுறைகள் அடங்கிய அறிக்கையை, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுப்பிவைத்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பெண்களுக்கு எதிராக வன்முறைகளை இழைக்கும் குற்றவாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ், கட்டாயமாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சட்டத்தில், பல கடுமையான விதிகள் இருந்தாலும், இதில் போலீசார் முறையாக செயல்படவேண்டியது முக்கியமாகும்.


விசாரணை



சட்ட விதிகளுக்கு உட்படாமல் போலீசார் பணியாற்றினால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, நீதி கிடைக்காமல் போய்விடும். வழக்கு விசாரணை தாமதமானால், அதன் காரணத்தை விசாரணை வாயிலாக கண்டறிய வேண்டும். விசாரணையில், அதிகாரிகள் மீது தவறு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
11-அக்-202014:32:32 IST Report Abuse
SaiBaba பெண்கள் விஷயம் என்றதும் இங்கு ஒரு கருத்தையும் காணோம். இது தான் இந்தியா. பெண்ணை அழிக்க அனைத்து ஆண்களும் கைகோர்த்து நிற்கும் பரிதாபம்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
11-அக்-202007:36:31 IST Report Abuse
Svs Yaadum oore சட்டம் ஒழுங்கு என்பது மாநில அதிகாரம் ….அதில் மத்திய அரசு தலையிடுவது மாநில அதிகார வரம்பை மீறிய செயல் என்று சுடலை கிளம்பி வருவாரே …இந்த மத்திய அரசு அறிக்கை எல்லாம் மாநிலங்களில் எவன் மதிப்பான்? ….லஞ்ச ஊழலில் மூழ்கிய நாடு இது …..இங்குள்ள மக்களுக்கு அறிவு வரும் வரை எதுவும் மாறாது …..
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
11-அக்-202000:12:52 IST Report Abuse
SaiBaba கணவரால் பதினேழு வருடங்கள் துன்பப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் ஓட ஓட விரட்டப்பட்டு வீடில்லாமல் கொரோனா காலத்திலும் அங்கு இங்கென்று தங்கி காவல்துறையிடம் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்து, நீதித்துறையிடமும் தெரிவித்தும் ஒரு பலனும் இல்லை. அனைத்தையும் அதிகாரம் பலம் கொண்டு மறைக்கிறார்கள். இன்னும் இருநூறு வருடங்கள் ஆனாலும் இந்தியாவில் பெண்களுக்கு நீதி கிடைக்காது. பெண் ஜென்மத்தை இந்தியாவில் குழி தோண்டி புதைத்து விடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X