பொது செய்தி

இந்தியா

முல்லை பெரியாறு குழுவை கலைக்க தமிழக அரசு எதிர்ப்பு

Updated : அக் 12, 2020 | Added : அக் 10, 2020
Share
Advertisement
புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவின் கீழுள்ள துணைக் குழுவை கலைக்க, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் - கேரள எல்லையில், கேரளாவின் இடுக்கியில் அமைந்துள்ளது, முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை, தமிழக அரசு பராமரித்து வருகிறது. கால அட்டவணைஅணையின் பாதுகாப்பு தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த சிலர்,
முல்லை பெரியாறு குழுவை  கலைக்க தமிழக அரசு எதிர்ப்பு

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவின் கீழுள்ள துணைக் குழுவை கலைக்க, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் - கேரள எல்லையில், கேரளாவின் இடுக்கியில் அமைந்துள்ளது, முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை, தமிழக அரசு பராமரித்து வருகிறது.


கால அட்டவணை



அணையின் பாதுகாப்பு தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த சிலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:அணையின் நீர் இருப்பு தொடர்பான தகவல்கள் பரிமாறிக் கொள்வது, கதவணைகள் திறக்கப்படுவது குறித்த கால அட்டவணையை நிர்ணயிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது. வெள்ள காலத்தின்போது, அணையின் நீர்மட்டம் மற்றும் அணை திறந்து விடப்படுவது குறித்து, கேரள அரசுக்கு தகுந்த நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவைப் பதிவு செய்து, முன்னதாகவே திட்டமிடுவதற்கான ஆய்வுக் கருவிகளை நிறுவுவதாக, 2015ல் கேரள அரசு உறுதியளித்தது. ஆனால், இதுவரை அதை செயல்படுத்தவில்லை.அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவுக்கு உதவுவதற்காக, துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கண்காணிப்பு குழு



இந்தக் குழுவை கலைக்க வேண்டும் என மனுதாரர்கள் கூறியுள்ளனர்; அதற்கு அவசியமில்லை. இந்த துணைக் குழு, அணையின் நீர்மட்டம், மழை அளவு உள்ளிட்ட தகவல்களை திரட்டி, கண்காணிப்பு குழுவுக்கு அளித்து வருகிறது. எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் துணை குழுவுக்கு இல்லை. அதனால், அதை கலைக்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X