பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு ரூ.2,000? தீயாய் பரவுது தகவல்

Updated : அக் 12, 2020 | Added : அக் 11, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை,:'தீபாவளிக்கு, தமிழக அரசு, 2,000 ரூபாய் வழங்கும்' என்ற தகவல், சமூக வலைதளங்களில், இறக்கை கட்டி பறக்கிறது.தமிழகத்தில், கொரோனா தொற்றால் ஏழை மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பண உதவி வழங்க, தமிழக அரசு அமைத்த, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையிலான குழு, அரசுக்கு பரிந்துரை செய்தது. தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் ஆறு
 தீபாவளிக்கு ரூ.2,000? தீயாய் பரவுது தகவல்

சென்னை,:'தீபாவளிக்கு, தமிழக அரசு, 2,000 ரூபாய் வழங்கும்' என்ற தகவல், சமூக வலைதளங்களில், இறக்கை கட்டி பறக்கிறது.

தமிழகத்தில், கொரோனா தொற்றால் ஏழை மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பண உதவி வழங்க, தமிழக அரசு அமைத்த, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையிலான குழு, அரசுக்கு பரிந்துரை செய்தது. தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், பண உதவி வழங்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.'அம்மா கொரோனா பேரிடர் நிவாரண நிதி' என்ற பெயரில், ஏழை குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்க, 3,000 கோடி ரூபாய் தேவை.


இந்நிதியை வழங்க, மத்திய அரசு முன் வந்துள்ளது.இந்த தகவல் வெளியானதும், அடுத்த மாதம் தீபாவளியை, ஏழை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, சமூக வலைதளங்களில், வேகமாக தகவல் பரவியது.ஆனால், அரசு தரப்பில், அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-202020:03:34 IST Report Abuse
மதுமிதா என்ன இருந்தாலும் 20₹டோக்கன் மட்டும் தந்து வெற்றி பெற்ற தந்திரம் யாருக்கும் வராது. மாஸ்டர் பிளான்
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் 2000 ஓவா!! இதே எங்கள் தளபதி 20000 குடுப்பார்.
Rate this:
Cancel
11-அக்-202010:33:29 IST Report Abuse
ஆரூர் ரங் பொங்கலுக்குக் கொடுத்தாலே தேர்தலுக்குமுன் மறந்துவிடுவர்.😟 தீபாவளிக்குக் கொடுத்து என்ன பயன்😟 ? டாஸ்மாக் நாட்டு🥂🍻 வாக்காளர்களின் 😉எதிர்பார்ப்பு😉 தங்கள் தொகுதியில் திமுக😎 அதிமு☻க நேரடிப் போட்டி. அப்போதான் வினியோகம் தாராளமா இருக்கும் . சரக்கு🥂 வினியோகமும்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X