அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர்கள் குஷ்பு, கருணாசை இழுக்க பாஜ., திட்டம்?

Updated : அக் 11, 2020 | Added : அக் 11, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: நடிகையும், காங்., செய்தித்தொடர்பாளருமான குஷ்புவை பாஜ., பக்கம் இழுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக பாஜ., தலைவராக எல்.முருகன் பதவியேற்ற பிறகு, பாஜ.,வில் முக்கிய நபர்கள் சேர்வது தொடர்ந்து வருகிறது. திமுக.,வில் இருந்து விலகி பாஜ.,வில் இணைந்த வி.பி.துரைசாமி, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கட்சியில் சேர்ந்தனர்.
Tamilnadu, BJP, Kushboo, Congress, Murugan, தமிழகம், பாஜக, குஷ்பு, திட்டம்

சென்னை: நடிகையும், காங்., செய்தித்தொடர்பாளருமான குஷ்புவை பாஜ., பக்கம் இழுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பாஜ., தலைவராக எல்.முருகன் பதவியேற்ற பிறகு, பாஜ.,வில் முக்கிய நபர்கள் சேர்வது தொடர்ந்து வருகிறது. திமுக.,வில் இருந்து விலகி பாஜ.,வில் இணைந்த வி.பி.துரைசாமி, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கட்சியில் சேர்ந்தனர். அவர்களுக்கு துணை தலைவர் பதவியும் கொடுத்து அக்கட்சி அழகு பார்த்து வருகிறது. மேலும், பாஜ.,வின் இந்த நகர்வு, திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளில் இருந்து மேலும் சில முக்கிய பிரமுகர்களை இழுக்க தீவிரமாக செயல்படும் காய் நகர்த்தலாகவே பார்க்கப்பட்டது. புதிதாக கட்சியில் சேர்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதை வெளிப்படுத்தவே இந்த நகர்வு என கூறப்பட்டது.


latest tamil newsஇதற்கிடையே நடிகையும், காங்., செய்தித் தொடர்பாளருமான குஷ்புவை பாஜ.,வில் சேர்க்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2010 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பு, முதலில் திமுக.,வில் தலைமை கழகப் பேச்சாளரானார். 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில், அத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த கனவு பொய்தது. 2014ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் அவருக்கு ‛சீட்' கொடுக்கப்படாததால், பாஜ., அல்லது காங்., என தேசிய கட்சியில் சேர முடிவெடுத்தார்.


latest tamil newsஅதன்படி, காங்., கட்சியில் சேர்ந்த அவருக்கு அங்கும் 2016 சட்டசபை தேர்தல், மாநிலங்களவை எம்பி., என எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இதனால் தேசிய அரசியலில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தினார். காங்.,கில் இருந்து குஷ்பு விலகப்போவதாக அவ்வபோது வெளியான தகவல்களை மறுத்துவந்த அவர், காங்கிரஸ் கட்சியில் நீடிப்பதாக விளக்கம் அளித்தார். ஆனால், குஷ்பு உடனடியாக சிந்தித்து பாஜ.,விற்கு வர வேண்டும் என்று சிலர் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வந்தனர். அதற்கான முயற்சிகளும் நடந்து வந்தன.


latest tamil newsஇதற்கிடையே மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை குஷ்பு பாராட்டிய நிகழ்வும் நடந்தேறியது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜ., தலைவர் முருகன் சந்திக்கவுள்ளார். அப்போது, பாஜ., - அதிமுக கூட்டணி, குஷ்பு பாஜ.,வில் இணைவது குறித்து பேசப்படும் என தெரிகிறது.


நடிகர் கருணாஸ்சுக்கும் வாய்ப்பு !


இதற்கிடையே, நடிகரும் எம்எல்ஏ.,வுமான கருணாஸ், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை சூட்டவேண்டும் என முருகனிடம் கோரிக்கை வைத்துள்ளார் என கூறப்படுகிறது. அவரது கோரிக்கையை பாஜ., நிறைவேற்றும் பட்சத்தில் அவரும் பாஜ.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-அக்-202023:18:42 IST Report Abuse
தமிழவேல் காசு இருக்கு வாங்குறாங்க, இதுல உங்களுக்கு என்ன வீன் பேச்சு வேண்டி இருக்கு ?
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
11-அக்-202020:46:22 IST Report Abuse
Tamilnesan இருவரும் வெட்கம் கெட்டவர்கள்.......ஒருவரை ஒருவர் சேற்றை வாரி இறைத்து விட்டு இப்போது பாஜகவில் இனைய இருக்கிறார்கள். நேர்மையான அரசியல் என்று சொல்லும் பாஜக எப்படி இவர்களை சேர்த்துக்கொள்கிறது? மொத்தத்தில் யாருக்கும் வெட்கமில்லை......
Rate this:
Cancel
Rajamani Shanmugavelu - Male,மாலத்தீவு
11-அக்-202019:45:36 IST Report Abuse
Rajamani Shanmugavelu கருணாஸ்.. பிஜேபி க்கு ...விளங்கிரும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X