தலித்துகள், முஸ்லிம்களை மனிதர்களாக கருதாதது வெட்கக்கேடு: ராகுல் கொதிப்பு

Updated : அக் 11, 2020 | Added : அக் 11, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
புதுடில்லி: தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள், மனிதர்களாக கூட கருதுவதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை என காங்., எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.உ.பி.,யின் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 14ம் தேதி, 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்ட அவர், டில்லி மருத்துவமனையில்
Rahul, HathrasCase, ShamefulTruth, Dalits, Muslims, Tribals, ராகுல், ஹத்ராஸ், வழக்கு, வெட்கம், தலித், முஸ்லிம்கள், பழங்குடியினர்

புதுடில்லி: தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள், மனிதர்களாக கூட கருதுவதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை என காங்., எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யின் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 14ம் தேதி, 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்ட அவர், டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார்.


latest tamil news


இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், உ.பி., போலீஸாரும் தெரிவிக்கின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று தொடர்ந்து கூறியும் ஏன் போலீஸார் மறுக்கிறார்கள், காரணம் என்ன,' என்ற செய்தியை பகிர்ந்துள்ளார்.


latest tamil news


மேலும் அவர் பதிவிட்டதாவது: தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள், மனிதர்களாக கூட கருதுவதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை. ஹத்ராஸ் சம்பவத்தில் யாரும் பலாத்காரம் செய்யப்படவில்லை என உ.பி., முதல்வர் ஆதித்யநாத், மாநில போலீசார் கூறுகின்றனர். ஏனென்றால், அவர்களுக்கும், பல இந்தியர்களுக்கும், பாதிக்கப்பட்ட பெண் யாரும் இல்லாதவர்தானே. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
12-அக்-202011:39:21 IST Report Abuse
S.P. Barucha தமிழகத்தில் பிராமணர்களின் சொத்து , கோயில் நிலங்கள் அபகரித்து அக்கிரஹாரத்தை அழித்தது இந்த இரண்டு கூட்டம்தான் .
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
12-அக்-202009:26:32 IST Report Abuse
mathimandhiri அங்கோலா என்ற மத்திய ஆப்பிரிக்க நாட்டில் இஸ்லாம் மதத்தையே தடை செய்து விட்டதாகவும் அனைத்து மசூதிகளும் இடிக்கப் பட்டு விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இங்கு அரசு செலவில் மதரஸாக்கள் நடை பெறும் நிலைமை. கோவில் வருமானத்திலிருந்து மசூதிகளை பெரும் நிதியை அரசே ஒதுக்குகிறது. பப்புவுக்கு இன்னும் என்ன வேண்டுமாம். இங்கு தான் மற்றவர்கள் அவர்களை எழுபது ஆண்டுகளாக தோளில் சுமந்து கொண்டு இருக்கிறார்களே. இந்த ராஜ போக வாழ்க்கை வேறு எங்கு இருக்கு பப்பு? உன் தோஸ்த் இம்ரானுடன் ஒரு தபா அங்கோலா போயிட்டு உண்மை நிலவரம் எப்படின்னு பாரு. முடிஞ்சா சீனாவில் உள்ள உய்ககர் முஸ்லீம் கேம்புகளுக்கும் ஒரு விசிட் அடி பாக்கலாம். அங்க தான உன் எஜமான் சப்பை மூக்கன் இருக்கானே.
Rate this:
Cancel
90s kid - karaikkal,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-202007:17:40 IST Report Abuse
90s kid தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள், மனிதர்களாக கூட கருதுவதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை,...... 60 வருசமா ஆண்டது இவர் குடும்பங்கிறது மறச்சிட்டு இந்த மாதிரி போஸ்ட் போட எப்படி இவருக்கு மனசு வருது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X