அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்ன செய்றீங்க பழனிசாமி - டிரெண்டிங்கில் குவியும் கேள்வி

Updated : அக் 12, 2020 | Added : அக் 11, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசிடம் கேட்டு பெறாமல் அமைதியாக இருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டாக் ஒன்று டிரெண்ட் ஆனது. சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி.,யில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு பல மாநிலங்களுக்கு நிலுவை வைத்துள்ளது. இதை வழங்க மத்திய அரசு நடவடிக்கை
EPS, CMEPS,

சென்னை : தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசிடம் கேட்டு பெறாமல் அமைதியாக இருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டாக் ஒன்று டிரெண்ட் ஆனது.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி.,யில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு பல மாநிலங்களுக்கு நிலுவை வைத்துள்ளது. இதை வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரத்து 321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.


latest tamil news




இந்நிலையில் ஜிஎஸ்டி சட்டத்தை செயல்படுத்தியதில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியான 47,272 கோடி ரூபாயை மத்திய அரசு வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டது என்று தலைமைக் கணக்கு ஆய்வு அலுவலரின் அறிக்கை கூறியிருப்பதை சுட்டிக்காட்டி திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் ஜிஎஸ்டியால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் அடங்கி அமைதி காத்துக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

இதனால் ஜிஎஸ்டி தொடர்பாக தொடர்ந்து திமுக.,வை சேர்ந்தவர்கள் அதிமுக., அரசை விமர்சித்து வருகின்றனர். ''ஜிஎஸ்டி., நிலுவையை உடனடியாக மத்திய அரசிடம் கேட்டு பெறுங்கள், அமைதியாக இருக்காதீர்கள்'' என்று டுவிட்டரில் இன்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் #குனியாதே EPS_GSTகேள் என்ற பெயரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானபேர் இந்த ஹேஷ்டாக்கில் மீம்ஸ்களும், கருத்துக்களும் பதிவிட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
12-அக்-202015:44:01 IST Report Abuse
S.P. Barucha காரோண பணமே கையிருப்பில் பல ஆயிரம் கோடி உள்ளது போதும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-அக்-202011:10:09 IST Report Abuse
Natarajan Ramanathan திமுகவுக்கு தோல்விபயம் மிகவும் அதிக அளவில் இருப்பதால் ரஜினி அரசியலுக்கு வருவதை அட்லீஸ்ட் ஒரு ஆண்டு தள்ளிப் போட முடியுமா என்று கெஞ்சுகிறதாம்.....
Rate this:
கலைஞர் வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னைDMK மலர T ஷர்ட் அவரு போட்டா DMK ஊத்தி மூடிக்கும். பரவாயில்லையா? நம்மூர் தான் இன்னும் தெளியவில்லை....
Rate this:
Cancel
Kavi - Hosur,இந்தியா
12-அக்-202008:41:09 IST Report Abuse
Kavi DMK it wing handle Twitter account against eps
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X