ஒற்றுமையின் பின்னணியில் யார்?

Updated : அக் 13, 2020 | Added : அக் 11, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
ஒரு வழியாக, அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் பிரச்னை முடிவுக்கு வந்து, இ.பி.எஸ்., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பின் பின்னணியில் பல விஷயங்கள் நடந்துள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திடீரென, இ.பி.எஸ்., தமிழக கவர்னரைச் சந்தித்தார்.இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லும் டில்லி, பா.ஜ., தலைவர்கள், இதன்
  ஒற்றுமையின் ,பின்னணியில் ,யார்?

ஒரு வழியாக, அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் பிரச்னை முடிவுக்கு வந்து, இ.பி.எஸ்., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பின் பின்னணியில் பல விஷயங்கள் நடந்துள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திடீரென, இ.பி.எஸ்., தமிழக கவர்னரைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லும் டில்லி, பா.ஜ., தலைவர்கள், இதன் விவரங்களை சொல்ல மறுத்து விட்டனர். ஹிந்தி திணிப்புக்கு எதிராக, தி.மு.க., போராட்டம் நடத்தி யது. பின், கவர்னரைச் சந்தித்தார், அந்த கட்சி தலைவர் ஸ்டாலின். அதன் பின், இந்த போரட்டம் கைவிடப்பட்டது. 'இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்று சேர்த்து பாருங்கள்' என்கின்றனர், பா.ஜ., வினர்.
அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன் தினம், சென்னையில் இரு முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன.அன்று, பா.ஜ., வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் சென்னையில் இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர், இந்த மத்திய அமைச்சரை சந்தித்தார். ஒரு மணி நேரம் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. 'முதல்வர் பதவிக்காக, அ.தி.மு.க.,வுக்குள் நடக்கும் சண்டை, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. 'இனிமேலும் தொடர்ந்தால் நல்லதல்ல. ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க முயற்சியுங்கள்; இதுதான் பிரதமரின் விருப்பம்' என, அந்த அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டதாம்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuel - chennai,இந்தியா
13-அக்-202012:52:49 IST Report Abuse
samuel இதில் ஒரு வியப்பும், அதிசயமும் இல்லை. மத்திய அரசின் விருப்பப்படியே இங்கு நடைபெறும் ஊழல் ஆட்சி தொடர்கிறது என்பதை மக்கள் அறிவர்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-அக்-202006:58:20 IST Report Abuse
skv srinivasankrishnaveni எவன் ஆண்டாலும் அழிக்கவே முடியாதவைகள் ஊழல் /டாஸ்மாக் தில்லுமுல்லு வெளிவேஷம்கள் விதியே என்று வாழும் வாழ்க்கை (இது பொதுஜனம் அண்ட் OPSக்கும் பொதுவானது)
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-அக்-202018:58:14 IST Report Abuse
Malick Raja அடடா ..அடடா .. அடைமழைதான் .. . பாட்டுக்கு தாளம் போடுவார்கள் . இவர்கள் பிரிவார்கள் ..கூடுவார்கள் .. மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள் என்ற நினைப்பில்லாமல் இருப்பது தேர்தல் முடிவில் பார்க்கலாம் .. பின்னணி ..முன்னணி எல்லாம் பிணியாகவே இருக்கும் .. ஆக அதிமுகவை ஒழித்துக்கட்ட பிஜேபி எடுத்த முயற்சி வெற்றிதான் . அடுத்து அதிமுக இல்லாமல் அது பிஜேபி என்ற கட்சியாக இருக்கும் ..தலைவர்கள் கூடுதலாகிறார்கள் .. அவ்வளவுதான் ..
Rate this:
Kadaparai Mani - chennai,இந்தியா
13-அக்-202012:49:45 IST Report Abuse
Kadaparai Maniஅதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். அதிமுக என்ற மாபெரும் இயக்கம் தான் திமுகவை தேர்தலில் சந்திக்க முடியும் . இது இந்தியாவில் உள்ள தலைவர்களுக்கு தெரியும்.திமுக அஞ்சுவது அதிமுகவை பார்த்துதான் .அதிமுக பந்து போன்றது தட்ட தட்ட மேலே வரும். பாஜாக தமிழ் நாடு நிலைமை, சக்தி பிரதமர் முக்கிய தலைவர்களுக்கு தெரியும் ....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-அக்-202013:11:42 IST Report Abuse
Malick Rajaஅதுனாலதான் கடந்த தேர்தலில் 40க்கு ஒன்று கிடைத்தது.. இனி தர்மயுத்தக்காரரும்.. மகாபாரத தலைவரும்.. ராமாயண முனிவரும் சேர்ந்து 240 தொகுதிகளிலும் நிற்பதில் சந்தேகம் இல்லை ..இடங்கள் பெறுவது கடினமே...
Rate this:
Kadaparai Mani - chennai,இந்தியா
13-அக்-202017:14:32 IST Report Abuse
Kadaparai Maniஅடுத்து நடந்த விக்கிரவாண்டி நாங்குநேரி வென்றது யார் . பாராளுமன்ற தேர்தல் மோடிக்கு எதிரான அலை .சட்டசபை தேர்தல் என்றால் அதிமுக வெற்றி சங்கநாதம் .உங்கள் திமுக பெருசுகளிடம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை தேர்தலில் தோற்ற அனுபவம் திமுகவிற்கு உண்டு ,கேட்டு பாருங்கள் இந்தவருடம் என்று 1980...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X