அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அறிக்கை தயாரிக்க தி.மு.க.,வில் ... குழு!

Updated : அக் 12, 2020 | Added : அக் 11, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
தேர்தல் ஆயத்தப் பணிகளில், அடுத்த கட்டமாக, தேர்தல் அறிக்கை தயாரிக்க, தி.மு.க.,வில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி உட்பட, எட்டு பேர் குழுவை, பொதுச்செயலர் துரைமுருகன், நேற்று அறிவித்தார். இந்தக் குழு, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும், அவர்கள் சார்ந்துள்ள
தேர்தல் அறிக்கை, தயாரிக்க, தி.மு.க.,வில் ,குழு!

தேர்தல் ஆயத்தப் பணிகளில், அடுத்த கட்டமாக, தேர்தல் அறிக்கை தயாரிக்க, தி.மு.க.,வில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி உட்பட, எட்டு பேர் குழுவை, பொதுச்செயலர் துரைமுருகன், நேற்று அறிவித்தார்.

இந்தக் குழு, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும், அவர்கள் சார்ந்துள்ள சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள் என, பல்வேறு பிரதிநிதிகளையும் சந்தித்து, அவர்களின் முக்கிய கோரிக்கைகளை, தேர்தல் அறிக்கையாக தயாரிக்க முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு, மே மாதம் நடைபெறவுள்ள, தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.


11 பேர்ஆளும் கட்சியில், முதல்வர் வேட்பாளராக, முதல்வர் பழனிசாமி., அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் வழிகாட்டுதல் குழுவுக்கு, 11பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டந்தோறும், அரசு திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய, முதல்வர் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். அரசால் நிறைவேற்றிய திட்டங்களை, ஆங்காங்கே துவக்கி வைத்தும், நிலுவையில் உள்ள பணிகளை துரிதப்படுத்தியும் வருகிறார். அதன் வாயிலாக, தனக்கும், தன் ஆட்சிக்கும், மக்களிடத்தில் ஆதரவு திரட்டி வருகிறார்.

விரைவில், அக்கட்சியின் சார்பில், தேர்தல் பிரசாரக் குழு உள்ளிட்ட, பல்வேறு தேர்தல் பணி குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., தரப்பிலும், தேர்தல் ஆயத்தப் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்து தரும் பொறுப்பை, பிரசாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனத்திடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார்.


மூவர் பட்டியல்

சட்டசபை தொகுதி வாரியாக, ஐபேக் நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, களப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தொகுதி வாரியாக, வெற்றி வாய்ப்பு கணிப்புப் பணியிலும், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் பணியிலும், தற்போது ஐபேக் ஈடுபட்டுள்ளது. தொகுதி தோறும், தகுதியான மூவர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து, ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

அதற்கேற்ப, கட்சி நிர்வாகிகளின் செல்வாக்கு, குற்றச்சாட்டுகள் எல்லாம் அலசப்பட்டு, ஜாதி, பண பலம், மக்கள் ஆதரவு போன்ற தகுதிகளின் அடிப்படையில் தேர்வான மூவர் மட்டுமே, இப்பட்டியலில் இடம் பெறுகின்றனர்.தேர்தல் ஆயத்தப் பணியின் அடுத்த கட்டமாக, 2021 சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


பெண்கள் இருவர்

அதில், தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ், மகளிர் அணி செயலர் கனிமொழி, கொள்கை பரப்பு செயலர் சிவா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பேராசிரியர் அ.ராமசாமி ஆகிய எட்டு பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு, தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதிட்டங்கள்; செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக, இக்குழுவில், எம்.பி., கனிமொழியும், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பட்டியலின மக்களின் கோரிக்கைகளை அறிந்து, அவர்களுக்கு, தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக, அச்சமுதாயத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்து, மக்கள் நலப் பணிகளில் நீண்ட அனுபவம் உள்ள, டி.ஆர்.பாலு போன்றவர்களுக்கும், குழுவில் இடம் தரப்பட்டு உள்ளது.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றவர்கள், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்னர். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என, அனைத்து தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களிடம் கலந்தாலோசித்து, அவர்கள் விரும்பும் கோரிக்கைகைள குறிப்பெடுத்தனர். அவற்றை, தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்தனர்.

அதேபோல், இப்போதும் தொகுதி வாரியாகச் சென்று, அங்கு முகாமிட்டு, பல தரப்பட்ட வாக்காளர்களையும் சந்திக்க உள்ளனர். அவர்களின் முக்கிய பிரச்னைகளையும், ஏற்கனவே ஐபேக் அளித்த அறிக்கையில் உள்ள பிரச்னைகளையும் ஒருங்கிணைத்து, தேர்தல் அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதனால், தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு, கட்சி தொண்டர்கள் மத்தியில், மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.அறிக்கை தயாரிப்பு முடிந்து, அது வெளியாகும் போது தான், தேர்தல் களத்தில், அது நாயகனாக உருவெடுக்குமா என்பது தெரிய வரும்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202023:22:15 IST Report Abuse
kulandhai Kannan இந்தக் குழு, நெல் கொள்முதல் பற்றி எதுவும் கூறாமல் இருப்பது நல்லது. இல்லையேல், அந்த வார்த்தையை படிப்பதற்குள் சிலருக்கு டவுசர் கிழிந்து விடும்.
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
12-அக்-202022:26:42 IST Report Abuse
Narasimhan திமுக வெற்றி பெற்றால் எல்லோருக்கும் எலும்புத்துண்டும் புரையும் கொடுக்கப்படும்
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
12-அக்-202017:35:54 IST Report Abuse
ram என்ன சொல்லப்போறீங்க... ஊழல் இல்லாத ஆட்சி...சாராய தொழிற்சாலை மூடல்...மணல் கொல்லை தடுப்பு...ஈழம் காப்போம்...இதைத்தான் நீங்க தேர்தல் அரிக்கையா கொண்டு வருவீங்க..ஆனால் இது எதுவுமே உங்களுக்கு ஒத்துவராததுன்னு உலகத்துக்கே தெரியும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X