பா.ஜ.,வில் இணைந்தார் நடிகை குஷ்பு

Updated : அக் 12, 2020 | Added : அக் 12, 2020 | கருத்துகள் (66+ 125)
Share
Advertisement
புதுடில்லி: காங்., கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பாஜ.,வில் சேர்வதற்காக டில்லியில் உள்ள பாஜ., அலுவலகம் வந்தார். பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் தேசிய செயலர் ரவி முன்னிலையில் சேர்ந்தார். உடன் மாநில பா.ஜ., தலைவர் முருகன் உடன் இருந்தார். கடந்த 2010 முதல் திமுக.,வில் இருந்த நடிகை குஷ்பு , 2014ல் இருந்து காங்கிரசில் சேர்ந்தார். அங்கு

புதுடில்லி: காங்., கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பாஜ.,வில் சேர்வதற்காக டில்லியில் உள்ள பாஜ., அலுவலகம் வந்தார். பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் தேசிய செயலர் ரவி முன்னிலையில் சேர்ந்தார். உடன் மாநில பா.ஜ., தலைவர் முருகன் உடன் இருந்தார்.



latest tamil news



கடந்த 2010 முதல் திமுக.,வில் இருந்த நடிகை குஷ்பு , 2014ல் இருந்து காங்கிரசில் சேர்ந்தார். அங்கு செய்தித்தொடர்பாளராக இருந்து வந்த அவர், சமீப காலமாக காங்கிரசில் சில நிர்வாகிகளுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தார். மேலும், மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையை பாராட்டி இருந்தார். இதனால் அவர் கட்சி மீதும், கட்சி தொண்டர்கள் அவர் மீதும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் அவர் பா.ஜ.,வில் சேரவுள்ளதாக செய்தி பரவியது.


latest tamil news



இதனையடுத்து குஷ்புவை காங்., செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் மூத்த செயலர் பிரனவ்ஜா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் குஷ்பு தரப்பில், ‛காங்., அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்துள்ளேன்' என அறிக்கை விட்டிருந்தார்.
இந்நிலையில், டில்லி பாஜ., அலுவலகம் சென்ற அவர் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அவரை பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து (66+ 125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamalsait - riyadh,சவுதி அரேபியா
14-அக்-202002:17:31 IST Report Abuse
kamalsait இந்த அம்மா மக்களுக்கு நல்லது செய்ய கட்சி மாறவில்லை தனக்கு நல்லது செய்யவே கட்சி மாறி உள்ளது நாளைக்கு வேற கட்சில லாபம் இருந்தா அங்க போயிரும் கூத்தாடிகள் கட்சியில் உள்ளதை மக்கள் பெரிதாக கருதக்கூடாது அவர்களுக்கு எங்க இருந்தாலும் பணம் கொட்டும் மக்களே உங்களை பற்றி யார் சிந்திக்கிறார்களோ அவர்களை பின் தொடருங்கள்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-அக்-202007:14:26 IST Report Abuse
skv srinivasankrishnaveni வருக வருக தமிழ்த்தாய் குஷ்புவே வருக வளம் பெறுக மக்கள் உனக்குக்கோயில் கட்டினாங்க நியூ திமுக>கான் கிரேஸ் >அதிமுக >மதிமுக >கம்யூனிஸ்டு என்று நன்னாவே ட்ரைனிங் எடுத்துண்டு பிஜே பி க்குவந்துட்டீயே சமத்துசக்கரை அடுத்து ஏவாகட்ச்சில் ஐக்கியம் ஆவரேதாயுததேசம் என்ஜாயாய் மக்கள் என்ற பேக்குகள் சினிமாபயித்தியமா அலையும்வரை தமிழ்நாடு நாசமாபோகபன்னாநுக பிஜேபி குவைக்குப் பொறியா ஆப்பு உன் காட்டுலே புயலே அடிக்குதும்மா என்ஜாய்
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
13-அக்-202010:41:27 IST Report Abuse
Sathya Dhara வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டது. அதை அடித்து விரட்ட கையில் கிடைத்த குச்சியை எடுத்துக்கொள்ளுவதில் எந்த தவறும் இல்லை. குச்சி அழுக்காக இருந்தால்....குச்சி இதற்குமுன் செப்டிக் தொட்டி சுத்தம் செய்ய பயன் படுத்தப்பட்டு இருந்தால்....அதற்காக குச்சியை எடுத்து அடிக்காமல் விடுவோமா....பாம்பு வீட்டை விட்டு அடித்து துரத்தப்பட்ட வேண்டும் இல்லையா....ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் புகுந்த விஷ நாகங்கள் வீட்டை விட்டு விரட்டப்பட்ட வேண்டும். அதனால் அம்மையாரே வருக....விரட்டுக தமிழகத்தில் புகுந்த பாம்புகளை. பின் நீங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இது அந்த "மன்னிப்பு" அல்ல. உண்மையான. மக்களின் மனதில் இருந்து வெளி வரும் மன்னிப்பு....
Rate this:
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
13-அக்-202007:01:24 IST Report Abuse
நீலகண்டன் அரசியலில் எந்தவித நேர்மையும் எதிர் பார்க்க முடியாது தனக்கான இடத்தை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் மக்கள் குறைகளை போக்க வந்த சென்ற தலைமுறை தலைவர்களை பற்றி படிக்கும் பொழுது இன்றைய தலைமுறை எப்படி சீர்கெட்டு உள்ளது என்பதை குஷ்பூ போன்றவர்கள் நமக்கு உதாரணமாக இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X