காஷ்மீரில் மீண்டும் 370 ; சீனா உதவும் : பரூக்கின் வாய்க்கொழுப்பு - டிரெண்டிங்கில் பாய்ச்சல்

Updated : அக் 13, 2020 | Added : அக் 12, 2020 | கருத்துகள் (140)
Advertisement
புதுடில்லி : ''சீனா ஆதரவுடன் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பிரிவு 370ஐ கொண்டு வருவோம்'' என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370 மற்றும் அதன் உடன் தொடர்புடைய 35ஏ
FarooqAbdullah, Jammukashmir,

புதுடில்லி : ''சீனா ஆதரவுடன் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பிரிவு 370ஐ கொண்டு வருவோம்'' என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370 மற்றும் அதன் உடன் தொடர்புடைய 35ஏ ஆகியவற்றை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றாலும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க அம்மாநில முன்னாளர் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த கோபம் தொடர்ந்து மத்திய அரசு மீது இருந்து வருகிறது. இதனாலேயே சமயம் கிடைக்கும் போதெல்லாம் சீனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்தை பரூக் தெரிவித்து வருகிறார். முன்பு ஒருபேட்டியில், ''காஷ்மீர் மக்கள் யாரும் தங்களை இந்தியர்களாக உணரவில்லை, சீனா கூட தங்களை ஆளட்டும்'' என கருத்து தெரிவித்தார். இதற்கு அப்போதே பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil news
இந்நிலையில் இப்போது ஒரு பேட்டியில், ''லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ஊடுருவல் முயற்சி நடப்பதே பிரிவு 370 நீக்கியதால் தான். சீனா அதை ஏற்கவில்லை. சீனா உதவியோடு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370-வது பிரிவை அமலுக்கு கொண்டு வருவோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் ஒருபோதும் சீனா அதிபரை இந்தியாவுக்கு வரும்படி அழைக்கவில்லை. பிரதமர் மோடி தான் அவரை வரவேற்று சென்னையில் விருந்து கொடுத்தார். 370 பிரிவு தொடர்பாக பார்லிமென்ட்டில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

எல்லையில் சீனா தொடர்ந்து அந்து மீறி வருவதால் அங்கு எப்போதும் ஒரு பதட்டமான சூழல் நிலவுகிறது. அப்படி இருக்கும் சூழலில் பரூக்கின் கருத்தை சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ. உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர். ''உடனடியாக பரூக்கை சீனாவுக்கு அனுப்புங்கள், சீனாவின் நண்பராகிவிட்டார் பரூக், தேசத்திற்கு எதிராக பேசும் பரூக் உடனடியாக கைது செய்ய வேண்டும்'' உள்ளிட்ட பல கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால் டுவிட்டரில் #FarooqAbdullah என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

Advertisement
வாசகர் கருத்து (140)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17-அக்-202005:52:00 IST Report Abuse
NicoleThomson இவன் மிக தெளிவாக முதுகில் குத்தும் தனத்தை வெளிக்காட்டுகிறான் இவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டோடு செட்டே ஆஅகமாட்டார்கள் இவர்களை போன்றோரை இனம்கண்டு குடும்பத்தோடு ஒதுக்கி வைப்பது தான் சாலச்சிறந்தது
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17-அக்-202019:49:45 IST Report Abuse
NicoleThomsonநீங்களும் இவனை போன்ற இனமா?...
Rate this:
Cancel
Udhay Charan - Salem,இந்தியா
14-அக்-202014:16:16 IST Report Abuse
Udhay Charan பாரூக் ஜி உங்கள் வயதிற்கு மதிப்பு கொடுத்து ஒன்றை சொல்கிறேன், அரசியல் பிரிவு 370யென்பது இந்திய அரசியல் சட்டம். இதை எவ்வாறு சீனா உதவியுடன் நிறைவேரருவிர். அவ்வாறு சொல்வதே தேச துரோகம். இதை சொல்வீர்கள் ,செய்விர்கள் என்று தான் வீட்டுக்காவலில் இருந்தீர்கள். ஆனால், நான் அப்படித்தான் என வுணர்த்தியுள்ளீர்கள். நன்றி. தரணி இருந்தால், தேர்தலை எதிர் கொண்டு..சட்டசபையில் தீர்மானம் நிரைவேற்றுங்கள்.. பார்ப்போம்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
13-அக்-202014:35:53 IST Report Abuse
siriyaar திமுக ஆட்சி அமையவும் சீனா உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X