பொது செய்தி

இந்தியா

இந்திய எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Updated : அக் 12, 2020 | Added : அக் 12, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
லடாக்: இந்திய எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 44 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.லடாக், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் எல்லைச் சாலை அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ள 44 பாலங்களை மத்திய பாதுகாப்புத்துறை
Rajnath, Inaugurates, 44Bridges, Built, BorderAreas, ராஜ்நாத்சிங், எல்லைப்பகுதி, பாலம்,

லடாக்: இந்திய எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 44 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

லடாக், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் எல்லைச் சாலை அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ள 44 பாலங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (அக்.,12) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதில், லடாக் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 7 பாலங்கள் மூலம் எல்லையில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை, தளவாடங்களை விரைவாகக் கொண்டு செல்ல இயலும்.


latest tamil news



அதுமட்டுமல்லாமல் இமாச்சலப் பிரதேசத்தில் தார்ச்சாவிலிருந்து லடாக்கை இணைக்கும் பாதை அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. 290 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சாலை முழுமையாக முடிந்துவிட்டால், லடாக் பகுதியிலிருந்து கார்கில் பகுதிக்கு எளிதாகச் செல்ல முடியும். டில்லியில் இருந்தவாறு காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ராஜ்நாத் பேசியதாவது:


latest tamil news



நம்முடைய வடக்கு மற்றும் கிழக்கு எல்லையில் என்ன மாதிரியான சூழல் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் பாகிஸ்தான், தற்போது சீனாவால், எல்லையில் பிரச்னை உருவாகியுள்ளது. இந்த இரு நாடுகளுடன் 7 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு எல்லைகளை நம் நாடு கொண்டுள்ளது. அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் தலைமையால், இந்தப் பிரச்சினைகளை வலிமையாக அணுகுவதோடு, எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய வரலாற்று மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.


latest tamil news



எல்லைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள இந்த 44 பாலங்களால் ராணுவத்துக்கு மட்டுமின்றி, பொதுமக்களும் எளிதாகச் சென்று வர முடியும். போக்குவரத்துப் பகுதிகளில் நமது ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இப்பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பது ராணுவத்தினருக்குப் பெருமளவு உதவும்.


latest tamil news



ராஜாங்க ரீதியாக இந்தச் சாலைகள் உதவுவதோடு, நாட்டின் வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு இருப்பதையும் பிரதிபலிக்கிறது. எல்லைச் சாலை அமைப்பு தொடர்ந்து உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணியைச் செய்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் எல்லைச் சாலை அமைப்பின் மூலம் கடினமான மலைப்பகுதிகளில் 2,200 கி.மீ. தொலைவுக்குப் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
13-அக்-202004:44:58 IST Report Abuse
blocked user 60 ஆண்டுகள் ஆண்ட ஒரு கட்சி இதில் பத்தில் ஒரு பகுதி கூட செய்யவில்லையே ஏன்? பணமில்லையா அல்லது தேசம் என்ற எண்ணமே இல்லையா... சிந்திக்க வேண்டும்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
12-அக்-202019:06:10 IST Report Abuse
Indian  Ravichandran பகுத்தறியு உள்ளோர் வாழ்த்தும் செய்தி.
Rate this:
Cancel
Uma Kumar - Madurai ,இந்தியா
12-அக்-202018:35:43 IST Report Abuse
Uma Kumar Jai Hind, Jai Modiji
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X