பீஹார் தேர்தலில் சிறுபான்மையினருக்கு சீட் தராத காங்.,: முஸ்லிம்கள் அதிருப்தி

Updated : அக் 12, 2020 | Added : அக் 12, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினருக்கு சீட் தராதது, முஸ்லிம்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினரின் நம்பிக்கையை அக்கட்சி இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.பீஹார் சட்டசபைக்கு அக்.,28, நவ.,3, நவ., 7 ல் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவ.,10ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ticket, minorities, Congres,trust, Bihar, Muslim, voters,பிஹார், தேர்தல், சிறுபான்மையினர், சீட், காங், முஸ்லிம்கள், அதிருப்தி

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினருக்கு சீட் தராதது, முஸ்லிம்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினரின் நம்பிக்கையை அக்கட்சி இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பீஹார் சட்டசபைக்கு அக்.,28, நவ.,3, நவ., 7 ல் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவ.,10ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில், வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது. தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இடம் பெற்று, 70 தொகுதிகளில், காங்., போட்டியிடுகிறது. காங்கிரஸ் வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இது அம்மாநில சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இது தொடர்பாக பாட்னாவில் வசிக்கும் ஷமீம் ஹசன் என்பவர் கூறுகையில், காங்கிரஸ் மீதான எங்கள் நம்பிக்கை தகர்ந்துவிட்டது. இதனால், அக்கட்சியால் இங்கு வெற்றி பெற முடியவில்லை. ஐக்கிய ஜனதாதளம், லோக்ஜனசக்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளை முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர். தற்போது, காங்கிரஸ் ஆதரவுடன் பல கட்சிகள் ஆட்சி அமைக்கின்றன. இதனால், காங்கிரஸ் மீதான நம்பிக்கையை பீஹார் மக்கள் இழந்துவிட்டனர் என தெரிவித்தார்

பாட்னாவை சேர்ந்த ஆஸ் முகமது கூறுகையில், சிறுபான்மையினரை, ஒப்பந்தம்போடப்பட்ட தொழிலாளர்கள் எனவும், தாங்கள் என்ன நினைக்கிறோமோ அதனையை அவர்களும் நினைக்க வேண்டும் என காங்கிரஸ் கருதுகிறது. சிறுபான்மையினரை காங்கிரஸ் நடத்திய விதத்தை அனைவருக்கும் தெரியும். தற்போது, வாக்காளர்கள் அனைவரும், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற அளவுக்கு புத்திசாலியாகிவிட்டனர் எனக்கூறினார்.

பீஹார் மாநில காங்.,மூத்த தலைவர் பிரேம் சந்த் மிஸ்ரா கூறுகையில், முதல்கட்ட தேர்தலில், எங்களுக்கு 27 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன 2ம் மற்றும் 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. நிச்சயம் சிறுபான்மையினருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் அஜய் அலோக் கூறுகையில், மதசார்பின்மையில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளோம் என கருதியவர்கள். எங்களுக்கு மதச்சாயம் பூசியவர்கள், சிறுபான்மையினருக்கு ஒரு இடம் கூட தரவில்லை. ஆனால், நாங்கள் 10 சதவீத இடம் அளித்துள்ளோம். மாநிலத்தில் உள்ள 16 சதவீத மக்களை கருத்தில் கொள்ளாமல், எப்படி வளர்ச்சி பெற முடியும் என தெரிவித்தார்.

ராஷ்ட்ரீய லோக் சத்தா கட்சியின் உபேந்திரா குஸ்வாகா கூறுகையில், காங்கிரஸ், பா.ஜ.,உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டன. இதனால், சிறுபான்மையினரின் ஒரே தேர்வாக எங்கள் கட்சி உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இந்தியா
13-அக்-202009:36:55 IST Report Abuse
மூல பத்திரம் இதே தான் நமூரிலும். நம்மூர் சிறுபான்மையினர் இந்த கேடுகெட்ட நடுநிலையற்ற போலி மத சார்பின்மை கூட்டத்தை ஒதுக்கினால் இங்கு பாஜக வுக்கு வேலை இருக்காது என அவர்கள் புரிந்துகொள்ளலாம்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
13-அக்-202007:59:21 IST Report Abuse
Sampath Kumar அவங்க தராட்டா என்ன??? உங்க கட்சி தந்து உள்ளதா போல அப்புறம் என்ன அதிருப்தி அவனுகளே இழுக்க தான் அக்கா குசும்பு குசுபு வை சேர்த்து உள்ளீர்களே
Rate this:
Cancel
13-அக்-202007:57:42 IST Report Abuse
மதுமிதா ஓட்டுக்காக பேசும் கூட்டம் தேர்தலுக்கு பின் தூக்கி வீசும். நிழலான(வர்) வார்த்தைகளை நிஜம் என நம்பும் மக்கள் இருக்கும் வரை காங்கிரஸ்சும் கூட்டணிகளும் வைரமும் முத்துக்களுமாக பேசுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X