பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 42 நாட்களுக்கு பின் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா

Updated : அக் 12, 2020 | Added : அக் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,12) ஒரே நாளில் 5,165 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6.7 லட்சத்தை கடந்தது. 42 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,879 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,61,264 ஆக

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,12) ஒரே நாளில் 5,165 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6.7 லட்சத்தை கடந்தது. 42 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.latest tamil news
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,879 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 191 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-125) மூலமாக, இன்று மட்டும் 80,162 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 84 லட்சத்து 2 ஆயிரத்து 994 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news
இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,877 பேர் ஆண்கள், 2,001 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,99,382 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,61,850 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 203 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 62 பேர் உயிரிழந்தனர். அதில், 29 பேர் தனியார் மருத்துவமனையிலும், 33 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,314 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 43,747 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-அக்-202009:06:22 IST Report Abuse
Sampath Kumar குறைந்த கொரோனா ??? பின்னாளில் மிக அதிகமாக்க பரவ வாய்ப்பு உள்ளதாக அறிக்கை கூறுகிறது மக்களே உஷாரு சீனாவில் மீண்டும் அட்டாக் பார்த்து இங்கு
Rate this:
Cancel
Balam - Chennai,இந்தியா
13-அக்-202007:19:53 IST Report Abuse
Balam What ever the count came in reality doesn't matter for this government the ceiling count is always 5500 only no matter what it is...when new counts in chennai r getting increased day by day..but the overall count always the same??? If we file a case, then by default a comission will be placed and the commission result will take life long....
Rate this:
Cancel
jay - toronto,கனடா
12-அக்-202019:07:20 IST Report Abuse
jay திணிக்காதீர்கள் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X