டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள்

Updated : அக் 12, 2020 | Added : அக் 12, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: பாலிவுட்டில் போதை மருந்து விவகாரம் தொடர்பாக அவதூறாக செய்தி வெளியிடுவதாக ஒட்டு மொத்த பாலிவுட் பிரபலங்கள் ஒரணியில் திரண்டு டி.வி. சேனல்கள் மீது டில்லி ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதான அவரது காதலி ரியா உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர்.
 For Calling Bollywood "Druggies", "Scum", 2 Top News Channels Are Sued

புதுடில்லி: பாலிவுட்டில் போதை மருந்து விவகாரம் தொடர்பாக அவதூறாக செய்தி வெளியிடுவதாக ஒட்டு மொத்த பாலிவுட் பிரபலங்கள் ஒரணியில் திரண்டு டி.வி. சேனல்கள் மீது டில்லி ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதான அவரது காதலி ரியா உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் போதை மருந்து பயன்படுத்துவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து இந்த விவகாரத்தை கடந்த சில மாதங்களாக முன்னணி ஆங்கில டி.வி. சேனல்கள் தொடர் செய்தியாக வெளியிட்டு வருகின்றன..ஏற்கனவே ரிபப்ளிக் டி.வி. பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில் இன்று பாலிவுட் நடிகர்கள், ஷாரூக்கான், சல்மான்கான், கரன்ஜோகர், ஆமீர்கான், அஜய்தேவ்கான், அக்சய்குமார், அனில்கபூர், நடிகைகள், அனுஷ்கா ஷர்மா, தியா மிர்ஷா, ஜோயா அக்தர், உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பாலிவுட்டின் 34 படத்தயாரிப்பாளர்கள்,
முன்னணி ஆங்கில டி.வி. சேனல்களான ரிபப்ளிக் டி.வி.யின் அர்னாப் கோஸ்வாமி, பிரதீப் பண்டாரி, டைம்ஸ்நவ் டி.வி. சேனலின் ராகுல் சிவசங்கர், நவீ்ன்குமார் ஆகிய பத்திரிகையாளர்கள் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் இரு அவதூறு வழக்குகள் தொடந்துள்ளனர்.அதில் பாலிவுட் பிரபலங்கள் பற்றி அவதூறான, மிகவும் இழிவான செய்தியையும், தவறான தகவல்களையும் வெளியிட்டு பாலிவுட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
14-அக்-202008:39:03 IST Report Abuse
Allah Daniel ///Amal Anandan - New jersey,யூ.எஸ்.ஏ 13-அக்-2020 08:41 தேசியவாதி என்பது இப்போது ஒரு அலங்கார வார்த்தை./// எங்க... யாரையாவது சுடலையை பார்த்து தேசியவாதினு சொல்ல சொல்லுங்க பாப்போம்? நாடு நல்ல இருக்கணும்னு நினைச்சாலே அவன் தேசியவாதி தான்...
Rate this:
Cancel
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
13-அக்-202011:20:53 IST Report Abuse
Dr. Suriya சினிமா ஒரு saakadai.... அங்கு நடக்காத அசிங்கங்கள் கிடையாது.......இப்பொழுது அதுவும் ஒரு பெண் என்றால் அது சினிமாவில் எந்த துறை என்றாலும் அவர்கள் எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும் appoluthu thaan தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும்.. இதற்காக என்மீது அவதூறு வழக்கு போட்டாலும் பரவாயில்லை நான் சாட்சியுடன் நிரூபிப்பேன்......
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13-அக்-202017:00:21 IST Report Abuse
 Muruga Velசாக்கடையில் எதுக்கு ஆராய்ச்சி பண்ணறீங்க ..சாட்சி வேற வெச்சுருக்கீங்க .....
Rate this:
Cancel
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-202010:20:13 IST Report Abuse
aashik அர்னாப் கோஸ்வாமி எப்பொழுதும் பாஜகவுக்கு தான் SUPPORT .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X