சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 12, 2020
Share
Advertisement
ஒன்பது மணி நேரம்கொரோனா வைரஸ் மனிதனின் தோல்களில் ஒன்பது மணி நேரம் வரை நீடித்திருக்கும். இது இன்புளூயன்சா வைரஸ் நீடித்திருக்கும் நேரத்தை விட அதிகம். இன்புளூயன்சா ஏ வைரஸ், இரண்டு மணி நேரம் தோல்களில் நீடித்திருக்கும் என ஜப்பானின் பெர்பெக்சுரல் மருத்துவ பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிளினிக்கல் தொற்றுநோய் மருத்துவ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இது சோப்பு அல்லது

ஒன்பது மணி நேரம்

கொரோனா வைரஸ் மனிதனின் தோல்களில் ஒன்பது மணி நேரம் வரை நீடித்திருக்கும். இது இன்புளூயன்சா வைரஸ் நீடித்திருக்கும் நேரத்தை விட அதிகம். இன்புளூயன்சா ஏ வைரஸ், இரண்டு மணி நேரம் தோல்களில் நீடித்திருக்கும் என ஜப்பானின் பெர்பெக்சுரல் மருத்துவ பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிளினிக்கல் தொற்றுநோய் மருத்துவ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இது சோப்பு அல்லது சானிடைசர் மூலம் அடிக்கடி கை கழுவ வேண்டும் என்பதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கலாம்.


தகவல் சுரங்கம்



பேரழிவு இல்லா உலகம்

பூகம்பம், வறட்சி, சுனாமி போன்ற இயற்கை பேரழிவு களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு ஒவ்வொரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 2009ம் ஆண்டு முதல் அக்.,13ல் 'சர்வதேச பேரழிவு குறைப்பு தினம்' கடை பிடிக்கப்படுகிறது. இயற்கை பேரழிவுகள் உயிரிழப்பை மட்டுமல்லாமல், பொருட்சேதத்தையும் ஏற்படுத்துவதால் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், இயற்கையை பாதுகாக்கும் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்த வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X