ஆபீசுக்குள்ளே அந்தப்புரம்... அதிகாரியால் களேபரம்!

Updated : அக் 13, 2020 | Added : அக் 13, 2020
Share
Advertisement
லிங்பெல் சத்தம் கேட்க, கதவை திறந்தாள் சித்ரா, ''வா மித்து...'' என்ற வாறு, சமையலறைக்குள் சென்று மின்னல் வேகத்தில் காபி கலந்து கொடுத்தாள்.அதை குடித்தவாறே, "எப்படியோ, அ.தி.மு.க., வுல, முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒருவழியாக முடிஞ்சது. ஒரு கட்சியோட வெற்றியை கொண்டாட பட்டாசு வெடிக்கிறது நியாயம்தான். ஆனா, ஒரே கட்சிக்குள்ள இருக்கிறவங்க, 'பஞ்சாயத்தில' சாதகமா தீர்ப்பு
ஆபீசுக்குள்ளே அந்தப்புரம்... அதிகாரியால் களேபரம்!

லிங்பெல் சத்தம் கேட்க, கதவை திறந்தாள் சித்ரா, ''வா மித்து...'' என்ற வாறு, சமையலறைக்குள் சென்று மின்னல் வேகத்தில் காபி கலந்து கொடுத்தாள்.அதை குடித்தவாறே, "எப்படியோ, அ.தி.மு.க., வுல, முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒருவழியாக முடிஞ்சது. ஒரு கட்சியோட வெற்றியை கொண்டாட பட்டாசு வெடிக்கிறது நியாயம்தான். ஆனா, ஒரே கட்சிக்குள்ள இருக்கிறவங்க, 'பஞ்சாயத்தில' சாதகமா தீர்ப்பு வந்ததுக்காக, இப்படி 'ஆர்ப்பாட்டம்' பண்றது நியாயமான்னு, மக்கள் பரவலா பேசறாங்க,'' என்றாள் மித்ரா.

''அரசியலில் இதெல்லாம், சாதாரணம்பா,'' என சிரித்த சித்ரா, ''வில்லேஜ் சைடு, சரக்கு விற்பனையில கல்லா கட்டினவங்க மேல கேஸ் போட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.''வெவரமா சொல்லுங்க...''''தாரா... போலீஸ் ஆபீசரு, தன்னோட எல்லையில, சரக்கு, லாட்டரி, கிளப், சில்லிங் நடத்தறவங்கன்னு, 'இல்லீகல் பிசினஸ்' குரூப்பை கூப்பிட்டு, மீட்டிங் போட்டிருக்காரு. 'கவனிப்பு' சமாசாரத்தையும், மறைமுகமாக சொன்னதால, வந்தவங்க, குஷியோடு திரும்பி போனாங்களாம்,''

''போற வழியில, அவங்க வந்த, 'மகேந்திரா' ஜீப் நடுவுல பஞ்சராகி நின்னுடுச்சாம்,'' விளக்கினாள் சித்ரா. "இதே மாதிரிதான், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்ல 'ஆப் டியூட்டி'ல இருக்கிறவங்க, மரத்தடில, சேர், டேபிள் போட்டு, சரக்கு அடிக்கிற இடமா மாத்திட்டாங்களாம். அதோடில்லாம, போதையில 'டேன்ஸ்' ஆடறாங்களாம்,''

''இதென்னடி, கூத்தா இருக்கு,'' சித்ரா பேசி கொண்டிருந்த போது, வீதியில், கொரோனா தடுப்பு பிரசார வாகனம் சென்றது.அதைப்பார்த்த, மித்ரா, ''கொரோனாவை வச்சு, சில அதிகாரிங்க காசு பாக்கறாங்களாம்,'' என்றாள்.''இது எங்கடி?''

''கோழிப்பண்ணை ஊர்லதான். ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கிற, ஒரு ஆபீசரு, கோழிப்பண்ணைக்கு விசிட் போனாரு. சில லேபர் 'மாஸ்க்' போடாததால, 200 ரூபா பைன் போட்ட அவரு, ரசீது இல்லாம, 5,000 வெட்டுனு சொன்னாராம்,''''பதறிப்போன பண்ணை மேனேஜர், அவ்ளோ கொடுக்க முடியாதுன்னு கறாரா சொல்ல, 200 ரூபாய்க்கு ரசீது கொடுத்துட்டு, ஆயிரம் ரூபாயை, வாங்கிட்டு, கெடச்ச வரைக்கும் லாபம்னு, போயிட்டாராம்,''கையிலிருந்த 'டிவி' ரிமோட்டில், 'சட்'டென சேனலை மித்ரா மாற்ற, 'சுந்தர'வனம் சினிமா ஒளிபரப்பானது.

உடனே, 'மியூட்' செய்த, சித்ரா, ''அதிகாரிங்க பல பேரு அவங்க இஷ்டத்துக்கு வேலை பாக்குறாங்க,'' என்றாள்.''யாரை சொல்றீங்க...''''பொங்கலுாரில், யூனியன் ஆபீசர் ஒருத்தர், அரசு வாகனம் இருந்தும், தன்னோட சொந்த காரை தான் அதிகமாக பயன்படுத்துறாராம். முக்கியமான பைல்களை அதுல வைச்ச தான் 'டீல்' பண்ணி, வசூல்வேட்டையாடறாராம்,''

''வெளியில நல்லவருன்ணு காட்டிக்கிறதுல, கில்லாடி. இந்த மாதிரி ஆபீசர்களை, அந்த 'மகேஸ்வரன்'தான் காப்பாத்தணும்,''''அது சரிடி. தாராபுரம் பக்கத்துல, திருப்பதி பெருமாளுக்கு பிடித்த கோஷத்தின் பேரை கொண்ட கிராமத்தில, ஒரு லேடி ஆபீசர், 'லஞ்சம் வாங்காம எந்த வேலையும் செய்றதில்லையாம். பொறுத்துப்பார்த்த பொதுமக்கள் பொங்கி எழுந்து, சிறை பிடிச்சுட்டாங்க,''

''தகவல் தெரிஞ்சு போன தாசில்தார், 'நவ'ராத்திரிக்குள்ள, நடவடிக்கை எடுக்கறதா 'ரத்தின' சுருக்கமா சொல்லிட்டு போனாராம்,'' என்றாள் சித்ரா.''ஏக்கா... சிட்டிக்குள்ள என்ன விசேஷங்க்கா?''''சிட்டில இருக்கிற பெரிய கடைக்காரங்க, பனியன் கம்பெனிகாரங்க கிட்ட கறாரா கல்லா கட்டிக்கிட்டிருந்த 'ட்ராபிக்' ஆபீசர் மேல, கமிஷனர் காதுக்கு புகார் போயிருக்கு. கூப்பிட்டு 'வார்ன்' பண்ணினாரு. கொஞ்ச நாள் அடக்கி வாசிச்ச அவரு, தன்னோட அதிகாரி 'கொடியை' மீண்டும் பறக்க விட்டுட்டார்,''

''சிட்டிக்குள்ள 'பீக்' அவர்ஸில், வர்ற லாரி டிரைவர்கிட்ட, 'அதிகாரிக்கு குடுக்கணும்,'னு சொல்லியே, பல ஆயிரம் ரூபாய் வசூல் பண்ணி, 'செல்வ'த்தை சேர்த்து திளைக்கிறாராம்,'' ''சிட்டியில ஒரு அதிகாரி, தனக்கு உதவியா இருக்கற மாதிரி ஆட்களை வச்சிட்டு, ஆபீசையே 'அந்தப்புரம்' போல மாத்திட்டாராம். அதுக்கு சாட்சியா, தன்னோட ஆபீசில, குட்டி பெட்ரூம் கூட 'செட்' பண்ணிட்டாராம்,'' என கோபமாக கூறினாள் சித்ரா.

''ஏங்க்கா, இதென்ன கொடுமையா இருக்குது, மேலதிகாரி கேட்க மாட்டார்னு தைரியத்தில், இப்படி பண்றாருன்னு நினைக்கிறேன்,'' சொன்ன மித்ரா, சேனலை மாற்ற அதில், வடிவேலுவின், பேக்கரி காமெடி ஓடியது.''உடுமலை அரசு ஆஸ்பத்திரில, சரியா சம்பளம் தர்றது இல்லைன்னு சொல்லி, தனியார் 'கான்ட்ராக்ட் லேபர்ஸ்' ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. அந்த கம்பெனி மேனேஜர் காசு வாங்கிட்டு, பலருக்கும் வேலை போட்டு கொடுத்திருக்கிறதா, புகார் கிளம்பிடுச்சு,''

''இது தெரிஞ்சுகிட்ட 'சீப் டாக்டர்' விசாரணை செஞ்சி, மேனேஜர, வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் செஞ்சும், திரும்பி அதே ஆஸ்பத்திரிக்கே வந்துட்டாராம். இந்த விவகாரத்துல பல 'லகரம்' கைமாறி விட்டதா ஒரு பேச்சு. எல்லாம், அந்த 'முருகனு'க்கே வெளிச்சம்,'' என கும்பிட்ட மித்ரா, ''அக்கா, நான் கெளம்பறேன்,'' சொல்லிவிட்டு வெளியே வரவும், ஜெயப்பிரகாஷ் என பெயரிட்ட ஆட்டோ வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X