பொது செய்தி

தமிழ்நாடு

கொள்ளை நடப்பதை தடுக்க முயற்சி; மது கடைகளில் பாதுகாப்பு தீவிரம்

Updated : அக் 13, 2020 | Added : அக் 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை; கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், 1,000 மதுகடைகளில் கண்காணிப்புகேமராக்களையும்; 500 கடைகளில், இரும்பு பண பெட்டகத்தையும், 'டாஸ்மாக்' வைத்துள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,300 மது கடைகள் வாயிலாக, தினமும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. விற்பனை பணத்தை, ஊழியர்கள், இரவில் கடைகளில் வைத்து, மறுநாள் வங்கிகளில்

இந்த செய்தியை கேட்க

சென்னை; கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், 1,000 மதுகடைகளில் கண்காணிப்புகேமராக்களையும்; 500 கடைகளில், இரும்பு பண பெட்டகத்தையும், 'டாஸ்மாக்' வைத்துள்ளது.



latest tamil news


தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,300 மது கடைகள் வாயிலாக, தினமும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. விற்பனை பணத்தை, ஊழியர்கள், இரவில் கடைகளில் வைத்து, மறுநாள் வங்கிகளில் செலுத்துகின்றனர்.இதனால், சமூக விரோதிகள், மதுக் கடைகளை உடைத்து, பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளை அடித்து செல்கின்றனர். எனவே, கடைகளில், கொள்ளை சம்பவத்தை தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், டாஸ்மாக் முடிவு செய்தது.

அதன்படி, முதல் கட்டமாக, தலா, ஒரு கடைக்கு, இரண்டு கேமரா என, 3,000 கடைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும்; 2,825 கடைகளில், வங்கிகளில் இருப்பது போல, 300 கிலோ எடையுடைய இரும்பு பண பெட்டகம்வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.கேமரா பொருத்தும் பணி, நடப்பாண்டு ஜூலையிலும்; இரும்பு பெட்டகம் வைக்கும் பணி, ஆகஸ்ட் இறுதியிலும் துவங்கியது. நேற்று வரை, 1,000 கடைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 500 கடைகளில், இரும்பு பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன.


latest tamil news


இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் கிராமம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில், இரும்பு பெட்டகம் வைக்கப்படுகிறது.முதல் கட்டமாக, கேமரா மற்றும் இரும்பு பெட்டகம் வைக்கும் பணி, நவம்பரில் முடிக்கப்படும்; இரண்டாவது கட்டத்தில், எஞ்சிய அனைத்து கடைகளிலும், பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
13-அக்-202011:49:15 IST Report Abuse
Indian  Ravichandran டாஸ்மார்க்கில் ஒரு பாட்டிலுக்கு ஐந்து ரூபாவாக இருந்த எக்ஸ்ட்ரா கமிஷனை கொரோனாவிற்கு அப்புறம் பத்துரூபா ஆக்கிட்டாங்கப்பா அதை எப்போ தடுப்பீங்க. பாவம் குடிமகன்ங்கள் சபோட்டுக்கு யாரும் வர்றது இல்லை, நானாவது கேட்கிறேன் அய்யா உத்தம அதிகாரிகளே இதை கொஞ்சம் கவனிங்க. திருட்டுத்தனம் இல்லாத இடமே இல்லை, இதுல கேமரா ஒரு கேடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X