அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும்: அண்ணாமலை

Updated : அக் 13, 2020 | Added : அக் 13, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
மதுரை: ''ஊழல் குற்றச்சாட்டுகள், குடும்ப அரசியலால் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும்,'' என மதுரையில் பா.ஜ., மாநில துணை தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை தெரிவித்தார்.இம்மையில் நன்மை தருவார் கோயிலில் குடும்பத்தினருடன் அவர் தரிசனம் செய்தார். பின் அவர் கூறியதாவது: பா.ஜ., சித்தாந்தங்களுடன் ஒத்த கருத்து கொண்டவர்கள் இணைந்து
BJP, Annamalai, Election, Vote, Against, DMK, பாஜக, துணைத்தலைவர், அண்ணாமலை, தேர்தல், திமுக, ஓட்டு

இந்த செய்தியை கேட்க

மதுரை: ''ஊழல் குற்றச்சாட்டுகள், குடும்ப அரசியலால் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும்,'' என மதுரையில் பா.ஜ., மாநில துணை தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை தெரிவித்தார்.

இம்மையில் நன்மை தருவார் கோயிலில் குடும்பத்தினருடன் அவர் தரிசனம் செய்தார். பின் அவர் கூறியதாவது:
பா.ஜ., சித்தாந்தங்களுடன் ஒத்த கருத்து கொண்டவர்கள் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது குஷ்பு உள்ளிட்ட மூவர் இணைந்துள்ளனர். குஷ்பூ எந்த கருத்தையும் ஆணித்தரமாக எடுத்து வைப்பவர். அவர் பா.ஜ.,வில் தனக்கான பணியை முன் எடுத்து செல்வார். குறுநில மன்னர்களை போல தி.மு.க.,வில் குடும்ப அரசியல் தொடர்வதால் மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள், தி.மு.க., முன்னாள் மத்தியமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை போன்றவைகளால் தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும்.


latest tamil news



அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடந்தது போன்ற பிம்பத்தை தி.மு.க., போன்ற எதிர்கட்சிகள் ஏற்படுத்துகின்றன. தி.மு.க., போல அ.தி.மு.க.,விற்கு எதிராக ஆதாரப்பூர்வமான ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை.பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தலில் நான் போட்டியிடுவது என் கையில் இல்லை. தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன். தற்போது பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று வருகிறேன், என்றார். பா.ஜ., மருத்துவர் அணி மாநில தலைவர் விஜயபாண்டியன், நிர்வாகி சிவபிரபாகரன் உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-அக்-202010:50:54 IST Report Abuse
Malick Raja ஸ்பெக்ட்ரம் ஊழலெல்லாம் பழைய கஞ்சியாகி முடிந்து போன ஒன்று .. ஒன்று தெரியுமா .. ஒரு ஆள் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு அதிலிருந்து விடுபட ஒரு கட்சிக்கு உறுப்பினராகி இருப்பது .. அது யார் .. அது போகட்டும் கர்நாடகத்தில் IPS. அதிகாரியாக இருந்தபோது . கர்நாடகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று சொல்லி காவிரி நீர் பற்றியெல்லாம் நான் கவலைப்படமாட்டேன் என்று சொன்னது யார் ? ஆக கூவலாம் கூவிக்கினே இருக்கவேண்டியதுதான் . நோட்டாவை வென்றால் போதும் .. பிஜேபி ஆட்சி அமைந்ததற்கு சமம்
Rate this:
Cancel
13-அக்-202017:35:55 IST Report Abuse
Moorthy Ramachandran அது உண்மைதான். திமுகவிற்கு எதிராகத்தான் ஒட்டுவிலும் ஆனால் அந்த ஓட்டு யாருக்கு விழ போகிறது என்பதுதான் இப்போது உள்ள கேள்வி.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-அக்-202015:40:40 IST Report Abuse
Vijay D Ratnam என்னது ஊழல் செய்தவர்களுக்கு மக்கள் ஒட்டு போடமாட்டாய்ங்களா ? ஹையோ ஹையோ, இவரு என்ன பச்சைப்புள்ளையா இருக்காரு. மக்களுக்கு எல்லாம் தெரியும் பாஸ். ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடடித்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இரண்டு லட்சம் கோடி நிலக்கரி ஊழல், பி எஸ் என் எல் ஊழல், ஏர்செல் மேக்சிஸ் ஊழல், INX. மீடியா ஊழல், கேரள சோலார் ஊழல் முதல் சேது சமுத்திரத்துல கோடிகளை புல்டவுஸர் வைத்து அள்ளுனது வரை எல்லாமே மக்களுக்கு தெரியும். பணம் பாட்டில் பிரியாணி என்று பழக்கப்பட்டுப்போன தமிழக வாக்காளர்கள் கிட்ட சும்மா வெறும் கைய தூக்கிக்கிட்டு ஒட்டுக்கேட்டு வந்துடாதீங்க. நாங்கல்லாம் யாரு, லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி, ஆண்டிமுத்து ராசா, தயாநிதி மாறன், கார்த்திக் சிதம்பரம், டி.ஆர்,பாலு,எஸ் எஸ் பழனிமாணிக்கம்,ஜெங்க்த்ரட்சகன் போன்ற உத்தமர்களை ஜெயிக்க வைத்த ஆளுங்க. நேர்மை, தூய்மை, வாய்மை என்று பெனாத்திக்கிட்டு இருந்தா உங்களைவிட சூப்பரா மணிக்கணக்கா பேசுற தமிழருவி மணியன் லெவல்ல நிக்கவேண்டியதுதான். போங்க சார், சீனி சக்கர சித்தப்பாவுக்கு இந்த எடப்பாடியே பெட்டர் என்றுதான் பார்ப்போம். தெரியாத பிசாச விட தெரிஞ்ச பேயே மேல்.
Rate this:
13-அக்-202017:39:14 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )தமிழன் பெயரில் ஏன் பம்மிட்டு இருக்க சொந்த பெயர் இல்லையா உனக்கு...
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
13-அக்-202021:15:52 IST Report Abuse
baygonsprayஅப்போ திமுக தலைவர்கள் வீட்டில் ஏன் ஜெயா மற்றும் துணை முதல்வர் , முதல்வர் வீட்டில் ரைட் செய்தது போல செய்ய வில்லை ? கமிஷன் வாங்கிவிட்டதா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X