பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலையை காப்பாத்துங்க - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : அக் 14, 2020 | Added : அக் 13, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. சமூகவலைதளங்களில் சூரப்பாவை நீக்குக, அண்ணா பல்கலையை காப்பாத்துங்க என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைப்பது தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா முயற்சி செய்து
SaveAnnaUniversity, Dismiss_Surappa,

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. சமூகவலைதளங்களில் சூரப்பாவை நீக்குக, அண்ணா பல்கலையை காப்பாத்துங்க என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைப்பது தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதில் மாநில அரசின் நிதி பங்கீடு இல்லாமல் கூட பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக திமுக., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட கண்டன அறிக்கையில், 'ஐந்து ஆண்டுகளில், அண்ணா பல்கலைக்கழகத்தால், 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதி பங்கீடு இல்லாமல், பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். எனவே, உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்' என, அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் எழுதப்பட்டிருப்பதில், முதல்வருக்கு உடந்தை இல்லை எனில், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், மாநில நிதி உரிமைக்கு விரோதமாகவும், மத்திய அரசுக்கு, தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ள சூரப்பாவை, உடனே நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


latest tamil news
இதையடுத்து சமூகவலைதளங்களில் சூரப்பாவிற்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. ''சூரப்பாவின் இந்த முடிவால் இடஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்படும் என்றும், மாநில உரிமைகள் பறிக்கப்படும், மாணவர்களுக்கான பல சலுகைகள் பாதிப்படும்'' என தங்களது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #SaveAnnaUniversity, #Dismiss_Surappa ஆகிய ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகின.


சூரப்பா விளக்கம்


இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த சூரப்பா, ''தனிப்பட்ட முறையில் மத்திய அரசுக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. மாநில அரசிடம் என்ன அறிக்கை சமர்ப்பித்தோமோ அதைத்தான் மத்திய அரசிற்கும் கடிதமாக எழுதினோம். உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடர்பு போன்ற பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். நிர்வாக ரீதியாக எந்த மாற்றமும் இருக்காது. மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு மாநில அரசின் கையில் உள்ளது. தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும்'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-அக்-202018:25:14 IST Report Abuse
sankaseshan தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் திருட்டு திராவிட கட்சிகளுக்கு வயிற்றில் எரியும் இவங்க தன்னிச்சையாக ஆட்டம் போட்டு பணம் பண்ண முடியாது இவனுங்க தேர்ந்தெடுத்த துணைவேந்தர்கள் லஞ்ச ஊழலில் சிக்கியவர்கள் EVR NAIKER சொன்ன மாதிரி நம்மகிட்ட வேலை செய்யறவன் படிச்சுட் டா மதிக்க மாட்டான் .
Rate this:
Cancel
14-அக்-202012:02:50 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Twitter treading by the paid persons, we dont believe the trending anymore. These Domilians scare is about losing the reservation not about the standard.
Rate this:
Cancel
14-அக்-202009:41:15 IST Report Abuse
P.S.Balakrishnan பரிந்துரை செய்தால், மேம்பாட்டுக்காக துணைவேந்தர் தனது ஆலோசனையை மேலிடத்துக்கு எழுதினால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா ?டிரெண்ட்டிங் டிராமா தேவையா ? நாட்டு முன்னேற்றத்தை விட சுய விளம்பரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ?சிந்தித்து செயல் படுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X