என்னுடைய இந்துத்வாவை சரிபார்க்க தேவையில்லை: கவர்னருக்கு உத்தவ் பதில்

Updated : அக் 13, 2020 | Added : அக் 13, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் கோவில் திறக்க தளர்வு அறிவிப்பது தொடர்பான கவர்னரின் கடிதத்திற்கு பதிலளித்த முதல்வர் உத்தவ் தாக்கரே, ‛என்னுடைய இந்துத்வா உங்களால் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை,' என பதிலளித்துள்ளார்.இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 15 லட்சத்து 35 ஆயிரம் பேர் கொரோனாவால்
MaharashtraCM, UddhavThackeray, Replies, Governor, MyHindutva, மஹாராஷ்டிரா, முதல்வர், உத்தவ் தாக்கரே, இந்துத்வா, கவர்னர், பதில்

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் கோவில் திறக்க தளர்வு அறிவிப்பது தொடர்பான கவர்னரின் கடிதத்திற்கு பதிலளித்த முதல்வர் உத்தவ் தாக்கரே, ‛என்னுடைய இந்துத்வா உங்களால் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை,' என பதிலளித்துள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 15 லட்சத்து 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தும், மஹா., மாநிலத்தில் மட்டும் 2வது அலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அம்மாநில அரசு, கோவில் தரிசனம் போன்றவற்றிற்கு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. கோவில் தரிசனத்திற்காக பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையிலும், முதல்வர் உத்தவ் தாக்கரே தளர்த்தவில்லை.


latest tamil news


இதனையடுத்து உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில கவர்னர் கடிதம் எழுதினார். அதில், ‛தளர்வுகளை தள்ளிவைக்க ஏதேனும் தெய்வீக முன்னறிவிப்பைப் பெறுகிறீர்களா? அல்லது திடீரென்று மதச்சார்பற்றவர்களாக மாறிவிட்டீர்களா? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,' என எழுதியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரே, ‛ஊரடங்கினை திடீரென அமல்படுத்தியது சரியானது அல்ல. அதேபோல் ஒரே நேரத்தில் அனைத்திற்கும் தளர்வுகள் அளிப்பது நல்ல விஷயம் அல்ல. நான் இந்துத்வாவை பின்பற்றுகிறவன். என்னுடைய இந்துத்வா உங்களால் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை,' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-202023:42:25 IST Report Abuse
Ramesh R பைத்தியக்கார கவர்னர்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-அக்-202019:43:15 IST Report Abuse
blocked user சிவசேனா மட்டும் தனியாக நின்று ஜெயித்து அதன் பின்னர் இது போல பேசலாம்...
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-202019:41:09 IST Report Abuse
 rajan மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? நகைப்பு தான் வருகிறது. சரத்பவார் மற்றும் சோனியா போட்ட பிச்சை இன்று நொண்டி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உள்ளார் எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X