பொது செய்தி

இந்தியா

யானை மீது யோகா செய்த போது தவறி விழுந்த ராம்தேவ்

Added : அக் 13, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
மதுரா: பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா கற்று தரும் போது கீழே விழுந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது. பாபா ராம்தேவ் யோகா கற்று தருவதில் இந்தியா முழுவதிலும் பிரபலமானவர். இவர் நடத்தும் யோகா நிகழ்ச்சிகள் டிவிக்களில் ஒளிபரப்பாகின்றன. கடந்த 2002ம் ஆண்டு முதல் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை உ.பி.,மாநிலம் மதுராவில் ராம் நரேதி

மதுரா: பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா கற்று தரும் போது கீழே விழுந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.



latest tamil news



பாபா ராம்தேவ் யோகா கற்று தருவதில் இந்தியா முழுவதிலும் பிரபலமானவர். இவர் நடத்தும் யோகா நிகழ்ச்சிகள் டிவிக்களில் ஒளிபரப்பாகின்றன. கடந்த 2002ம் ஆண்டு முதல் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை உ.பி.,மாநிலம் மதுராவில் ராம் நரேதி ஆசிரமத்தில் யானை மீது அமர்ந்து யோகா கற்று தரும் நிகழ்ச்சியை நடத்தினார்.


latest tamil news



அப்போது எதிர்பாராத விதமாக யானையின் மீது இருந்து கீழே விழுந்தார். உடனடியாக சுதாகரித்து கொண்டு எழுந்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்தவீடியோ டுவிட்டரில் 18,400க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

மேலும் சில நெட்டிசன்கள் அவர் யானை மீது இருந்து விழவில்லை, குதித்தார் எனவும், ஆகஸ்ட் மாதத்தில் மழையின் போது சைக்கிள் ஒட்டி கீழே விழும் வீடியோவையும் ஒப்பிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-அக்-202010:48:41 IST Report Abuse
Malick Raja முடிவு வரவேண்டுமல்லவா? இப்படித்தான் வரும் என்றல்ல எப்படியும் வரலாம் என்பதல்லவா நியதி..இது அனைத்து மனிதவர்கத்திற்கும் பொதுவானதே
Rate this:
Cancel
RAJ .S - CHENNAI,இந்தியா
14-அக்-202010:40:00 IST Report Abuse
RAJ .S ரொம்ப முக்கியம்
Rate this:
Cancel
14-அக்-202009:51:55 IST Report Abuse
ஆப்பு யானை மேலிருந்து கீழே விழும் காட்சியை டி.வி ல காட்டினாங்க. விழுந்தவுடன் எழுந்து ஓடுனாரே ஒரு ஓட்டம். யானை பாவம் ஒரு யோகி மாதிரி நின்னுக்கிட்டிருந்தது தான் ஹைலைட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X