எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ரஜினி களமிறங்கினால் ஆட்சி கனவு பலிக்குமா? 'ஐபேக்' சர்வே முடிவால் தி.மு.க., கலக்கம்!

Updated : அக் 14, 2020 | Added : அக் 13, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
'நடிகர் ரஜினி கட்சி துவக்கி, மெகா கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை சந்தித்தால், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, கடுமையாக போராட வேண்டியது இருக்கும்' என, 'ஐபேக்' தரப்பில், ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கலக்கம் அடைந்துள்ள தி.மு.க., தலைமை, 200 தொகுதிகளில் போட்டியிடும் முடிவை கைவிட்டு, கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடையாத வகையில், தொகுதிகளை பிரித்து
ரஜினி, ஆட்சி, கனவு, பலிக்குமா, ஐபேக், தி.மு.க., கலக்கம்

'நடிகர் ரஜினி கட்சி துவக்கி, மெகா கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை சந்தித்தால், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, கடுமையாக போராட வேண்டியது இருக்கும்' என, 'ஐபேக்' தரப்பில், ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கலக்கம் அடைந்துள்ள தி.மு.க., தலைமை, 200 தொகுதிகளில் போட்டியிடும் முடிவை கைவிட்டு, கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடையாத வகையில், தொகுதிகளை பிரித்து கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வரும் சட்டசபை தேர்தல், ஆளுமைமிக்க தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கிற, முதல் தேர்தல். எனவே, இந்த தேர்தலில் வெற்றி பெறும் அணியின் தலைவர், ஆளுமை மிக்க தலைவராகவும், மக்கள் தலைவராகவும் ஜொலிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

தி.மு.க.,விற்கு தேர்தல் வியூகங்களை அமைக்கிற, 'ஐபேக்' நிறுவனம், சமீபத்தில் எடுத்த, 'சர்வே' முடிவில், 'தி.மு.க., கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நடிகர் ரஜினி களத்தில் இறங்கி, மெகா கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்தால், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, கடுமை யாக போராட வேண்டிய நிலை வரும்' என்றும், அதில் கூறியிருப்பதாகவும் தெரிகிறது. மேலும், '150 தொகுதிகளில் வெற்றி என்ற, சர்வே முடிவை, 120 தொகுதிகள் என்று மாற்றி, மாநில நிர்வாகி களிடம் கூற வேண்டும். 'அப்போது தான், மாநில நிர்வாகிகள், வேகமாகவும், விவேகமாகவும், தேர்தல் பணிகளில் ஈடுபடுவர்' என, தி.மு.க., அதிகார மையம், அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளது.
விமர்சனம் இல்லை


இந்நிலையில், நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., 200 தொகுதிகளில் போட்டியிட போகிறது என்று கூறிய அனுமானத்தை மையமாக வைத்து, ஊடகங்கள் விவாதிக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியாகி, கூட்டணி கட்சிகள் ஒரு முறை அல்ல; இரண்டு முறை அமர்ந்து பேசி, போட்டியிட போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவது தான் வாடிக்கை. அதற்குள், தி.மு.க., 200 தொகுதிகளில் போட்டியிட போகிறது என்ற விவாதங்கள், அர்த்தம் இல்லாதவை. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள், கடைசியில் கலகலத்து போவர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை, 200 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடவில்லை என்பதையும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்து விடக் கூடாது என, தி.மு.க., அஞ்சுவதையும் காட்டுகிறது. அதனால் தான், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதி பங்கீட்டில் தியாகம் செய்யவும் தயார் என்பதை, சூசகமாக, ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.
ரஜினி, கட்சி துவக்கி, தேர்தல் களத்தை சந்திக்கப் போவது தான், ஸ்டாலின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பிரமாண்டம்


இதுகுறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:'எப்போ வருவேன்; எப்படி வருவேன்னு தெரியாது; ஆனா, வர வேண்டிய நேரத்தில், கரெக்டா வந்துடுவேன்' என்ற ரஜினியின் வசனம், வரும் பிப்., மாதம் நிரூபணமாக உள்ளது. ஜனவரி மாதத்தில், சென்னை புறநகர் அல்லது மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்த, ரஜினி திட்டமிட்டுள்ளார்.

ரஜினிக்கு, டிச., 25க்குப் பின் ராஜயோகம் காத்திருக்கிறது என, பிரபல ஜோதிடர் கூறியுள்ளார். ரஜினி கட்சி துவக்கினால், அது, தி.மு.க.,வை பாதிக்கும் என்பதால் தான், அவரை பற்றிய விமர்சனம், அக்கட்சியினரிடம் இல்லை.


உறுதி


ஜெ., இல்லை என்றாலும், அ.தி.மு.க.,வை எதிர்கொள்வதே மிகப்பெரிய சவால் என்கிறபோது, புதிதாக களத்திற்கு வரும் ரஜினியை வேறு சந்திக்க வேண்டுமே என்ற கலக்கம், தி.மு.க.,வை வாட்டி வதைக்கிறது. ரஜினிக்கு நெருக்கமான வெளிநாட்டு டாக்டர் நண்பர் வாயிலாக, இந்த தேர்தலில், அவர் சந்திக்கப்போகும் மன ரீதியான பிரச்னைகள், உடல்நல பிரச்னைகள் குறித்து, அவரை எச்சரிக்கும் படி, தி.மு.க., மேலிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த வெளிநாட்டு நண்பரும், ரஜினியிடம் பக்குவமாக சொன்னபோது, ரஜினி, தன் புன்னகையை மட்டும் பதிலாக தந்துள்ளார். தொடர்ந்து, அந்த வெளிநாட்டு நண்பர் வாயிலாக, ரஜினியை கட்சி துவக்க விடாமல் தடுக்க, தி.மு.க., மேலிடம் முயற்சித்து வருகிறது. ஆனால், ரஜினி கட்சி துவக்குவது, 200 சதவீதம் உறுதி. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raguram - madurai,இந்தியா
16-அக்-202014:35:24 IST Report Abuse
raguram தேர்தல் ஆணையம் எந்த கட்சிக்கும், குறிபிட்ட கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தால்,வேட்பாளர்கள் விருப்பட்ட தொகுதியில் போட்டியிட அனுமதிக்க கூடாது. அந்த கட்சி வேட்பளர்கள் விருப்பட்ட தொகுதியில் போட்டியிட அனுமதிக்க கூடாது. குலுக்கல் முறையில் 120 தொகுதிக்கும் வேட்பளர் அறிவிக்க வேண்டும். சுயேச்சைகள் மட்டுமே விரும்பிய தொகுதியில் அனுமதிக்கலாம். மக்களுக்கு சேவை செய்ய வருபவர்கள்,குறிபட்ட தொகுதியில் செல்வாக்கு எனும் குறுகிய மனபான்மை அனுமதிக்க கூடாது. பல கட்சிகள் டெபாசிட் கிடைக்காது. ரஜினி, அண்ணாமலை இதை பற்றி சிந்தித்து நடைமுறை படுத்த துவங்கினால்,பல கட்சிகள் டெபாசிட் கிடைக்காது.
Rate this:
Cancel
Thomas - Al Khor,கத்தார்
15-அக்-202016:46:51 IST Report Abuse
Thomas சொந்த சொத்துத்துக்கு வரி கட்டாதவர் நாட்டை காப்பாற்றுவார். சிறந்த காமடி
Rate this:
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
15-அக்-202017:45:55 IST Report Abuse
Vasuஅப்போ ஸ்டாலின் எல்லா வரியும் கட்டி அரசாங்க கஜானாவை நிரப்பிட்டார்?...
Rate this:
Cancel
Thomas - Al Khor,கத்தார்
15-அக்-202016:45:47 IST Report Abuse
Thomas பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X