பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் பணிக்கு டிசம்பரில் ஒப்பந்தம் கையெழுத்து

Updated : அக் 15, 2020 | Added : அக் 13, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரை": ''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு டிச., அல்லது ஜனவரியில் இந்தியா, ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் கூறியதாவது:தமிழகத்தில் தினசரி, 80 ஆயிரம் முதல், 90 ஆயிரம் வரை சளி மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. பிற மாநிலங்களை விட குறைவான பாதிப்பே
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு   டிசம்பரில் ஒப்பந்தம்

மதுரை": ''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு டிச., அல்லது ஜனவரியில் இந்தியா, ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தினசரி, 80 ஆயிரம் முதல், 90 ஆயிரம் வரை சளி மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. பிற மாநிலங்களை விட குறைவான பாதிப்பே உள்ளது.கேரளா மற்றும் சில வடமாநிலங்களில் பண்டிகை கொண்டாட்டங்களால் கொரோனா அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் பண்டிகை, மழை, குளிர் காலம் துவங்குகிறது. இக்காலத்தில் கண்டிப்பாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, கைகழுவுவதில் அஜாக்கிரதை வேண்டாம். இதை வாழ்க்கை முறையோடு இன்னும் சில காலத்திற்கு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான இறுதி திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணியில் ‛ஜிக்கா' குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.டிச., அல்லது ஜன.,ல் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்வர். உடனடியாக பணிகள் துவங்கிவிடும். மாநில அரசு வசம் எந்த பணிகளும் நிலுவையில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் வினய், டீன் சங்குமணி, சுகாதார துணை இயக்குனர் அர்ஜூன்குமார் உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-அக்-202009:31:18 IST Report Abuse
ஆப்பு அடிக்கல் நாட்ட வந்தவர் அஞ்சு பைசா தரப்போரதில்லை. ஜப்பானிடம் கடன் வாங்கி கல்யாணம். திறந்து வைக்கவும் வந்துருவாரு...
Rate this:
Cancel
14-அக்-202008:51:24 IST Report Abuse
பாமரன் எந்த வருட டிசம்பர் அல்லது ஜனவரின்னு சொன்னாரா🙄 ஏற்கனவே தொடங்கிய திட்டத்திற்கு தானே அடிக்கல் நாட்டினார்? (இது சின்ன டவுசர் சொன்னது... .)
Rate this:
Cancel
14-அக்-202008:06:32 IST Report Abuse
தமிழ் எலெக்ஷன் வருதில்ல அதான் இப்போ சீன் காட்றானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X