சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 14, 2020
Share
Advertisement
நோய் எதிர்ப்பு சக்தி காலம்கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அறிகுறி உருவானதில் இருந்து அடுத்த மூன்று மாதங் களுக்கு அவரது உடலில், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளியின் ரத்தம், உமிழ்நீர் சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தினர். 343 நோயாளிகளை சோதனை செய்ததில் 122 நாட்களுக்கு நோய்


நோய் எதிர்ப்பு சக்தி காலம்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அறிகுறி உருவானதில் இருந்து அடுத்த மூன்று மாதங் களுக்கு அவரது உடலில், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளியின் ரத்தம், உமிழ்நீர் சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தினர். 343 நோயாளிகளை சோதனை செய்ததில் 122 நாட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. ஐ.ஜி.ஜி, ஐ.ஜி.ஏ., மற்றும் ஐ.ஜி.எம்., என மூன்று விதமான ஆன்டிபாடி உருவாகியிருந்தன. இதில் ஐ.ஜி.ஜி., வகை மட்டும் 90 நாட்களுக்கும் மேல் நீடித்தது.


தகவல் சுரங்கம்



அமைதி தந்த உணவு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வான ஐ.நா.,வின் துணை அமைப்புகளில் ஒன்றான உலக உணவு திட்டம் அமைப்பு, 1961 டிச, 19ல் தொடங்கப்பட்டது. தலைமையகம் இத்தாலியின் ரோம். கிளை அலுவலகங்கள் 80 நாடுகளில் உள்ளன. ஆண்டுதோறும் 83 நாடுகளில் 9.14 கோடி பேருக்கு உணவு வழங்குகிறது. உலக நாடுகளில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இந்த அமைப்புக்கான நிதி, உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் பெறப்படுகிறது. இதற்கு ஒரு தலைவர், 36 நாடுகளின் பிரதிநிதிகள் செயலர்களாக உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X