பொது செய்தி

இந்தியா

லடாக் செல்கிறது பார்லி., குழு; வீரர்களுக்கான வசதி குறித்து ஆய்வு

Updated : அக் 14, 2020 | Added : அக் 14, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: சீனாவுடன் எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், பார்லிமென்டின் பொது கணக்கு குழுவைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், லடாக் எல்லைக்குச் சென்று, வீரர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.ஆலோசனைஇந்தாண்டு துவக்கத்தில், சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் ஒரு அறிக்கை, பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
லடாக், பார்லிமென்ட் குழு, ஆய்வு

புதுடில்லி: சீனாவுடன் எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், பார்லிமென்டின் பொது கணக்கு குழுவைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், லடாக் எல்லைக்குச் சென்று, வீரர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.


ஆலோசனை


இந்தாண்டு துவக்கத்தில், சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் ஒரு அறிக்கை, பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'லடாக், சியாச்சின் போன்ற கடும் பனிப்பொழிவு உள்ள பகுதியில் பணியாற்றும் வீரர்களுக்கு, உரிய உடைகள் மற்றும் சாதனங்கள் வழங்கப்படவில்லை' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான, பார்லிமென்டின் பொது கணக்கு குழு ஆய்வு செய்தது. முப்படைகளின் தலைமை தளபதி, பிபின் ராவத்துடனும் இந்தக் குழு ஆலோசனை நடத்தியது.


கடிதம்


அதைத் தொடர்ந்து, 'லடாக்குக்கு சென்று நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியிருந்தார். வரும், 28 - 29ல் இந்த நிலைக் குழுவைச் சேர்ந்த, எம்.பி.,க்கள் லடாக் சென்று, வீரர்களுடன் பேச உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் கடும் பனியை தாங்கக் கூடிய ஆடைகள் மற்றும் சாதனங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆய்வு செய்ய உள்ளனர்.


latest tamil news



சீனா எதிர்ப்பு


சீன எல்லையை ஒட்டியுள்ள, லடாக் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில், புதிதாக கட்டப்பட்ட, 44 பாலங்களை, நம் ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஜாவோ லிஜியான் கூறியதாவது:

எல்லையில் கட்டுமான பணிகள் மேற்கொள்வது தான், இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம்.பிரச்னை தீவிரமடையும் வகையில் இரு தரப்பும் செயல்படக் கூடாது. லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில், இந்தியா மேற்கொள்ளும் கட்டமைப்பு வசதிகளை, நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்; அது சட்ட விரோதமானது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
14-அக்-202022:42:45 IST Report Abuse
THINAKAREN KARAMANI பார்லிமென்டின் குழு லடாக் சென்று, நம் வீரர்களுடன் பேசி அவர்களுக்குத் தேவையான - கடும்பனியைத் தாங்கக் கூடிய ஆடைகள் மற்றும் தேவையான ஆயுதங்கள் - போன்றவற்றை தரமானதாக கொடுக்கவேண்டும். நம் உயிர், நம் நாடு காப்போர்க்கு சகலவசதிகளையும் செய்துகொடுங்கள். வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
14-அக்-202022:15:42 IST Report Abuse
THINAKAREN KARAMANI 'லடாக், சியாச்சின் போன்ற கடும் பனிப்பொழிவு உள்ள பகுதியில் பணியாற்றும் வீரர்களுக்கு, உரிய உடைகளும் தர்மன் மற்றும்வீரர்களுக்கு வழங்கப்படும் vvddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddவசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.கடும் பனிப்பொழிவு உள்ள பகுதியில் பணியாற்றும் வீரர்களுக்கு, உரிய உடைகள் மற்றும் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA. Aaaaa
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-202019:49:19 IST Report Abuse
Saravanan ingu நமது ராணுவத்தையும் நமது பிரதமரையும் குறை சொல்லும் பிடித்து கொண்டு போய் அங்கேயே விட்டு விட்டு வர வேண்டும் போபோர்ஸ் பீரங்கி ஊழல், ஆதர்ஷ் ஊழல், அலைக்கற்றை ஊழல், பூச்சி மருந்து இது போன்ற எண்ணற்ற சாதனை படைத்தாலும் அதை விட புதியதாக ஊழல் செய்ய ஒன்பது வருசமாக வீட்டில் இருக்கும் கூட்டம் பொய் சொல்லி திரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X