பொது செய்தி

இந்தியா

ஜாதிய தலைவர்கள் நிறைந்த கட்சிகளால் சமூக நீதியை நிலை நாட்ட முடியாது

Updated : அக் 14, 2020 | Added : அக் 14, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
தலித் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்ததை, தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். நான்கு ஊராட்சிகளில், தேர்தலே நடத்த முடியாத நிலை இருந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி, தலித் தலைவர்களை உருவாக்கினார் - தி.மு.க., முதன்மைச் செயலர் நேரு.'கடந்த, 50 ஆண்டுகளாக, எடுத்ததற்கெல்லாம் சமூக நீதி, ஜாதிகள் இல்லை
நேரு, அர்ஜுன்சம்பத், உதயகுமார், வைகைச்செல்வன்

தலித் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்ததை, தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். நான்கு ஊராட்சிகளில், தேர்தலே நடத்த முடியாத நிலை இருந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி, தலித் தலைவர்களை உருவாக்கினார்
- தி.மு.க., முதன்மைச் செயலர் நேரு.


'கடந்த, 50 ஆண்டுகளாக, எடுத்ததற்கெல்லாம் சமூக நீதி, ஜாதிகள் இல்லை என பேசி வரும் உங்கள் தலைவர்கள், என்ன லட்சணத்தில், நாட்டை இதுவரை நடத்தி வந்துள்ளனர் என்பதற்கு, இந்த சம்பவமே சாட்சியாம்; ஜாதிய தலைவர்கள் நிறைந்த இந்த கட்சிகளால், ஒரு போதும் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., முதன்மைச் செயலர் நேரு பேட்டி.தமிழகத்தில், 60 ஆண்டாக, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி செய்தும், ஊராட்சி தலைவியை தரையில் உட்கார வைத்துள்ளனர். இரு கட்சிகளும், ஜாதி அரசியலை நடத்தி வருகின்றன. தமிழகத்தில், ஜாதி, மத வெறி ஒழிய, ஆன்மிக அரசியல் அணியை, ஹிந்து மக்கள் கட்சி உருவாக்கி வருகிறது
- ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.


'இப்பவும், இவ்விரு கட்சிகளின் மூத்த தலைவர்கள், ஜாதி பெயரை கூறித் தான், பிற தலைவர்களை, நண்பர்களை, 'ஜாலியாக' அழைப்பர்; எனவே, இவர்களால், ஜாதியை ஒழிக்கவே முடியாது...' என, கூறத் துாண்டும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.கூட்டணியில் தேசியக் கட்சிகள் இருந்தாலும், தமிழகத்தில், திராவிடக் கட்சிகளின் தலைமையிலேயே கூட்டணி அமையும். அ.தி.மு.க., - தி.மு.க.,வில், இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. இது தான், கடந்த கால வரலாறாகவும் இருந்துள்ளது
- அமைச்சர் உதயகுமார்.


'மத்தியில், தேசியக் கட்சிகளின் தலைமையில் கூட்டணி; மாநிலங்களில், மாநில கட்சிகளின் தலைமையில், தேசியக் கட்சிகள் கூட்டணி; நல்லா இருக்குது சார், உங்கள் அரசியல் அணுகுமுறை...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு.'பொன்னார்' கன்னியாகுமரியில் தோற்றதற்கு பிறகு, மனம் நொந்து, 'புண்ணார்' ஆகி விட்டார். பொன்னார், பொன்னாக மாற வேண்டும் என்பது தான், எங்களுடைய விருப்பம்
- அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன்.


latest tamil news
'அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தே பொன்னார், பூவாகவும், புயலாகவும் இருப்பார்...' என, அவர் பாணியிலேயே பதிலளிக்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிக்கை.தி.மு.க., கூட்டணியை பலவீனப்படுத்த, சிலர் திட்டமிட்டு வதந்தியை பரப்புகின்றனர். தேர்தல் நேரத்தில், தொகுதி பங்கீடு முடிந்த பின், கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என்று முடிவு செய்வது வழக்கம். ஆனால், தற்போது வேண்டும் என்றே சிலர், இந்த பிரச்னையை கிளப்பி வருகின்றனர்
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.


'தி.மு.க.,வில் சிலரே, உங்களுக்கு எதிராக, உள் வேலைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.


Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
14-அக்-202021:46:35 IST Report Abuse
rajan இதைபடித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் .உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ...உலக மக்களின் பார்வை படும்மெரினாவில்அண்ணா சமாதி,எம்ஜிஆர் சமாதி,ஜெயலலிதா சமாதி,கருணாநிதி சமாதியில்,ராமசாமி நாயக்கர் சிலையென்றுஎல்லா எழவும் இருக்குதுஎங்கடா அந்த ராஜராஜ சோழன் சிலை ?எங்கடா போனது என்சூர்யவர்மன் சிலை?எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்?எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்தபாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.?எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை?எங்கடா இருக்கு என் வேலுநாச்சியார் சிலை ?எங்கதான்டா இருக்கு சேரன் செங்குட்டுவனின் சிலை ?எங்கடா அந்த அழகுமுத்தோடநினைவு மண்டபம்.?எங்கு பார்த்தாலும்அண்ணா அறிவாலயம்அண்ணாநகர்,அண்ணா சாலைஅண்ணா சிலைபெரியார் மண்டபம்பெரியார் பேருந்து நிலையம்பெரியார் சாலை பெரியார் சிலைகலைஞர் கருணாநிதி நகர்.கருணாநிதி சிலை,எம்ஜிஆர் மணிமண்டபம்எம்ஜிஆர் பல்கலைகலகம்எம்ஜிஆர் பேருந்து நிலையம்எம்ஜிஆர் நகர்எம்ஜிஆர் நூலகம்எம்ஜிஆர் சாலைஎம்ஜிஆர் சிலைஅடுத்தால அம்மா, சின்னம்மாபுஜ்ஜிமா,கட்டுமரம்இப்படி சொல்லியே நாசமா போங்கடா!..உலக சாம்ராஜ்யங்களைவென்றுகாட்டிய நம் முன்னோர்களுக்கு சரியானசிலைகளுமில்லை,நினைவு கட்டிடங்களும் இல்லை.அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத்திட்டத்தில் ஒழுங்காக இல்லைஇடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி மறுத்தால் கொன்று குவித்த அத்துணைகழிசடைகளின் வரலாறும்பாடத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறதே! வெட்கமாக இல்லை!கரிகாலன் கட்டிய கல்லணைஇன்றுவரை சுற்றுலாத் தலமாகமாற்றப்படவில்லை.மாபெரும் கடற்படையை கட்டமைத்துஉலகின் பல நாடுகளை வென்றுமாபெரும் சோழப் பேரரசை நிறுவியராஜேந்திர சோழனை பற்றிஇங்கே கற்பிக்கப்படவில்லை!ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான்அந்தக் கோவிலைக் கட்டியவன்யாரென்று கூடத் தெரியாமல்அந்தக் கோவிலைக் கட்டியமாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட அப்பேற்பட்ட அவனது நடுநிலைத்தன்மையைப்பாராட்டி நீ அல்லவாஅவனது பெயரை உலகம் போற்றிட செய்திருக்க வேண்டும்.?ஒன்றுமே செய்யாமல்இருந்துவிட்டாயே நன்றி கெட்டவனே.பசுவுக்காக தன் மகனையேகொன்ற சோழனின் கல்லறையை பாரடா..கஜினி முகமதுவை பதினேழு முறை ஓடவிட்டு விரட்டியநம் ரஜபுதன ராஜாக்களின் நினைவினைப் போற்றடா..தான் கட்டிய கோவிலில் தன் பெயரை எழுதாமல் அதில் வேலை செய்த சிற்பக்கலைஞர்களின் பெயரை எழுதி வைத்த நம் ராஜ ராஜ சோழனின் கல்லறை எங்கே! மணிமண்டபம்தான் எங்கே!?இப்பேர்பட்ட ஒரு மாமன்னனை கேவலம் காசுக்காக சாயம் பூசி கூத்தாடும் கூட்டம் கேள்வி கேக்குது.தெற்காசியாவை ஆண்டஒரு மாமன்னனின் கல்லறையை நீ வைத்திருக்கும் கோலத்தைப் பாரடா !மானங்கெட்ட தமிழனே.அப்படி என்னாடா இந்த இடையில் வந்த கொள்ளையர்கள்உனக்கு செய்துவிட்டனர் ?இடையில் வந்த ரெண்டு நல்ல மனுஷன் கக்கனும்,காமராஜரும்.கக்கன் யாரென்று யாருக்குமே தெரியாது.காமராஜரை சாதி சங்க தலைவராய் மாற்றி வைத்துவிட்டாய்.ஐய்யா முத்துராமலிங்கத் தேவரை சாதிதலைவராய் மாற்றி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.மாகராஷ்ட்ராவில் எத்தனையோதலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான்.அந்த மான உணர்வு உனக்கு ஏனடா இல்லாமல் போனதுதமிழனே..!விழித்திடு தமிழா : போதும் இந்த மாயை1.ஈவேரா சாதியை ஒழித்தார்...அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்....2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி...3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது...4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு ...5.ஈவெரா சமுகநீதி காத்தார்....90 மார்க் எடுத்தவன் வீதியில் பிச்சைகாரனாய் ..35 மார்க் எடுத்தவன் ஏசி ரூமில் ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..ஆக மொத்தத்தில் ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!! கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது,மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது,கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது,தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது, ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாதுதன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாதுஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாதுஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாதுஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாதுமுதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலிதேவனை தெரியாது மற்றும் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம் தெரியாதுஇவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,எதுவுமே செய்யாத பெரியார் என்கிற பிரிவினைவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான். இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16-அக்-202008:27:16 IST Report Abuse
 Muruga Velவெட்டி ஒட்டி எங்களை நோகடிக்கிறீங்களே .. சமூக நீதி ..திராவிடம் ..இவை மாய வார்த்தைகள் ..கலைஞர் குடும்பத்தில் பிராமண சமூகத்தில் சம்மந்தம் வெச்சுக்கிறது சகஜம் ..அழகிரி தவிர வேறு யாரும் தலித் சமுதாயத்தில் கலியாணம் பண்ணவில்லை ......
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-அக்-202020:54:09 IST Report Abuse
sankaranarayanan புட்ட பார்தி சாயி பாபா கலைஞர் வீட்டுக்கே வந்து பார்த்தார் - திருப்பதி வேதபண்டிதர்கள் கலைஞர் வீட்டுக்கே வந்து நின்றுகொண்டு வேதம் ஓதினார்கள் - எல்லாம் மணவாடுதானே இல்லையா? தெலுங்கிற்கு தனி மரியாதை இடம் எல்லாம் இங்கே கொடுப்பவர்கள் எங்கள் குடும்பம் - தமிழன் என்று சொல்லிக்கொண்டே தெலுங்கிற்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் எங்கள் குடும்பம் - நாங்கள் தெலுங்குத்தமிழர்கள். போதுமா?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-அக்-202019:54:02 IST Report Abuse
Rajagopal சாதிகள் மறையப்போவதில்லை. அவற்றின் ஏற்ற தாழ்வுகள் மட்டும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கும். இன்று உயர்ந்தவன், நாளை தாழ்ந்தவனாகலாம். அப்படித்தான் இயற்கை. இதை அரசியலை வைத்து மாற்ற இயலாது. பிராமணர்களை உயர்ந்த சாதி என்று முறையிட்டு அதிகாரத்திற்கு வந்தவர்கள் இப்போது உயர்ந்த சாதியாகி விட்டார்கள். பிராமணர்கள் தாழ்த்தப்பட்டு விட்டார்கள். ஆனால் அவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. படித்து, வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று தங்களது தகுதியாலும், திறமையாலும் உயர்ந்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் சாதிகளை ஒழிக்கிறோம் என்று பறை சாற்றிக்கொண்டு, பிராமணர்களைத் துச்சப்படுத்தியே காலத்தை ஓட்டி விட்டார்கள். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. மாறாக, பிராமணர்களை அதிகாரத்திலிருந்து ஒழித்துக் கட்டி விட்டு, சாதி அரசியலைத் தொடர்ந்திருக்கிறார். இதனால் இழப்பு அவர்களை நம்பி ஏமாந்த தமிழர்களுக்குத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X