ஜாதிய தலைவர்கள் நிறைந்த கட்சிகளால் சமூக நீதியை நிலை நாட்ட முடியாது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜாதிய தலைவர்கள் நிறைந்த கட்சிகளால் சமூக நீதியை நிலை நாட்ட முடியாது

Updated : அக் 14, 2020 | Added : அக் 14, 2020 | கருத்துகள் (19)
Share
தலித் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்ததை, தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். நான்கு ஊராட்சிகளில், தேர்தலே நடத்த முடியாத நிலை இருந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி, தலித் தலைவர்களை உருவாக்கினார் - தி.மு.க., முதன்மைச் செயலர் நேரு.'கடந்த, 50 ஆண்டுகளாக, எடுத்ததற்கெல்லாம் சமூக நீதி, ஜாதிகள் இல்லை
நேரு, அர்ஜுன்சம்பத், உதயகுமார், வைகைச்செல்வன்

தலித் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்ததை, தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். நான்கு ஊராட்சிகளில், தேர்தலே நடத்த முடியாத நிலை இருந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி, தலித் தலைவர்களை உருவாக்கினார்
- தி.மு.க., முதன்மைச் செயலர் நேரு.


'கடந்த, 50 ஆண்டுகளாக, எடுத்ததற்கெல்லாம் சமூக நீதி, ஜாதிகள் இல்லை என பேசி வரும் உங்கள் தலைவர்கள், என்ன லட்சணத்தில், நாட்டை இதுவரை நடத்தி வந்துள்ளனர் என்பதற்கு, இந்த சம்பவமே சாட்சியாம்; ஜாதிய தலைவர்கள் நிறைந்த இந்த கட்சிகளால், ஒரு போதும் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., முதன்மைச் செயலர் நேரு பேட்டி.



தமிழகத்தில், 60 ஆண்டாக, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி செய்தும், ஊராட்சி தலைவியை தரையில் உட்கார வைத்துள்ளனர். இரு கட்சிகளும், ஜாதி அரசியலை நடத்தி வருகின்றன. தமிழகத்தில், ஜாதி, மத வெறி ஒழிய, ஆன்மிக அரசியல் அணியை, ஹிந்து மக்கள் கட்சி உருவாக்கி வருகிறது
- ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.


'இப்பவும், இவ்விரு கட்சிகளின் மூத்த தலைவர்கள், ஜாதி பெயரை கூறித் தான், பிற தலைவர்களை, நண்பர்களை, 'ஜாலியாக' அழைப்பர்; எனவே, இவர்களால், ஜாதியை ஒழிக்கவே முடியாது...' என, கூறத் துாண்டும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.



கூட்டணியில் தேசியக் கட்சிகள் இருந்தாலும், தமிழகத்தில், திராவிடக் கட்சிகளின் தலைமையிலேயே கூட்டணி அமையும். அ.தி.மு.க., - தி.மு.க.,வில், இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. இது தான், கடந்த கால வரலாறாகவும் இருந்துள்ளது
- அமைச்சர் உதயகுமார்.


'மத்தியில், தேசியக் கட்சிகளின் தலைமையில் கூட்டணி; மாநிலங்களில், மாநில கட்சிகளின் தலைமையில், தேசியக் கட்சிகள் கூட்டணி; நல்லா இருக்குது சார், உங்கள் அரசியல் அணுகுமுறை...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு.



'பொன்னார்' கன்னியாகுமரியில் தோற்றதற்கு பிறகு, மனம் நொந்து, 'புண்ணார்' ஆகி விட்டார். பொன்னார், பொன்னாக மாற வேண்டும் என்பது தான், எங்களுடைய விருப்பம்
- அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன்.


latest tamil news




'அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தே பொன்னார், பூவாகவும், புயலாகவும் இருப்பார்...' என, அவர் பாணியிலேயே பதிலளிக்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிக்கை.



தி.மு.க., கூட்டணியை பலவீனப்படுத்த, சிலர் திட்டமிட்டு வதந்தியை பரப்புகின்றனர். தேர்தல் நேரத்தில், தொகுதி பங்கீடு முடிந்த பின், கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என்று முடிவு செய்வது வழக்கம். ஆனால், தற்போது வேண்டும் என்றே சிலர், இந்த பிரச்னையை கிளப்பி வருகின்றனர்
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.


'தி.மு.க.,வில் சிலரே, உங்களுக்கு எதிராக, உள் வேலைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X