உழைப்பு திலகம் கவுசல்யா பாட்டிக்கு வயது 99 | Dinamalar

உழைப்பு திலகம் கவுசல்யா பாட்டிக்கு வயது 99

Updated : அக் 14, 2020 | Added : அக் 14, 2020 | கருத்துகள் (3)
Share
காலை 7 மணிசென்னை நங்கநல்லுார் 45 வது தெரு முனையில் ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது ஆட்டோவில் இருந்து வயதான ஒரு பாட்டி முதலில் இறங்குகிறார் அவர்தான் நம் கட்டுரையின் கதாநாயகி கவுசல்யா பாட்டி தற்போது 99 வயதாகிறது.ஆட்டோவில் எடுத்து வந்த இட்லி,பூரி,பொங்கல்,கிச்சடி,வடை உள்ளீட்ட உணவு பதார்த்தங்கள் நிறைந்த பாத்திரங்கள் வரிசைகட்டி இறங்குகிறது அனைத்தும் ரோட்டோரம் உள்ள

காலை 7 மணி
சென்னை நங்கநல்லுார் 45 வது தெரு முனையில் ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது


latest tamil newsஆட்டோவில் இருந்து வயதான ஒரு பாட்டி முதலில் இறங்குகிறார் அவர்தான் நம் கட்டுரையின் கதாநாயகி கவுசல்யா பாட்டி தற்போது 99 வயதாகிறது.ஆட்டோவில் எடுத்து வந்த இட்லி,பூரி,பொங்கல்,கிச்சடி,வடை உள்ளீட்ட உணவு பதார்த்தங்கள் நிறைந்த பாத்திரங்கள் வரிசைகட்டி இறங்குகிறது அனைத்தும் ரோட்டோரம் உள்ள தள்ளுவண்டிக்கடைக்கு மாறுகிறது கொஞ்ச நேரத்தில் சுடச்சுட சுவையான காலை உணவு ரெடி.


latest tamil newsஇவரது மேற்பார்வையில் இவரது மகள் கமலாவும் மகன் கிருஷ்ணமூர்த்தியும் வரும் வாடிக்கையாளர்களை கவனித்துக் கொள்கின்றனர் வாடிக்கையாளர்கள் பலரது பெயரை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் அவர்களது பெயரைச் சொல்லி நல்லா சாப்பிடுப்பா என்று சொல்கிறார்.

கண் பார்வை தெளிவாக இருக்கிறது கண்ணாடி போடுவது கிடையாது காது நன்றாக கேட்கிறது ஞாபக சக்தி அபாரமாக இருக்கிறது அதிகாலை 3 மணிக்கு எழுந்து மகள் மகனுடன் காலை உணவுகளை தயார் செய்ய ஆரம்பித்தால் மூன்று மணி நேரத்தில் அனைத்தையும் தயார் செய்து கொண்டு ஆட்டோ பிடித்துக் கொண்டு கடைக்கு வந்துவிடுகிறார்.

பெரும்பாலும் பகல் பத்து மணிக்குள் உணவுகள் தீர்ந்துவிடும் காரணம் உணவின் ருசி அப்படி எப்போதாவது கூடுதலாக ஒரு மணி நேரம் இருக்க நேரிடும் எப்படியும் பகல் 12 மணிக்குள் கடையை மூடிவிட்டு திரும்ப கிளம்பிவிடுவார்.


latest tamil newsவீட்டிற்கு போனதும் மகளும் மகனும் சிறிது ஒய்வு எடுப்பர் அவர்கள் ஒய்வு எடுத்து எழுவதற்குள் கவுசல்யா பாட்டி அவர்களுக்கு தேவையான மதிய உணவும் வத்தல் குழம்பும் தயார் செய்து இரண்டு அப்பளத்தையும் சுட்டு வைத்துவிடுவார்.பிறகு மறுநாளைக்கு உண்டான வேலைகளில் இறங்கிவிடுவார்.

மாயவரத்தை பூர்வீகமாகக் கொண்ட கவுசல்யா பாட்டி வீட்டில் பலரும் சமையல் கலையில் கொடிகட்டிப் பறந்தவர்களே அந்த பக்குவமும் கைநேர்தியும் கவுசல்யா பாட்டிக்கும் அவரது மகள் கமலாவிற்கும் எப்போதுமே உண்டு.சென்னைக்கு வந்த பிறகு இருவரும் சேர்ந்து ஆரம்பித்த கடைதான் இது.latest tamil newsஅம்மாவிற்கு வயது 99 ஆகிவிட்டதால் அவரை இப்போது அதிகம் வேலை வாங்குவதில்லை தம்பியின் துணையுடன் கமலாவே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்.ஆனாலும் ஆர்வம் காரணமாக கவுசல்யா பாட்டி கூடமாட வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்.

கவுசல்யா பாட்டி முன்பு சிவாஜி ரசிகராக இருந்தார் இப்போது ரஜினி ரசிகர் டி.வி.,யில் ரஜினி படம் போட்டால் போதும் எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு ரஜினி படம் பார்க்க உட்கார்ந்துவிடுவார்

பெரிதாக வருமானம் இல்லை என்றாலும் பலரை திருப்திப்படுத்தக்கூடிய தொழில் செய்கிறோம் என்ற மனதிருப்தி இருக்கிறது. மகள் கமலாவிற்கு யாராவது பண உதவியோ அல்லது இட உதவியோ செய்தால் சிறிய அளவில் ஒட்டல் ஆரம்பித்து குறைந்த விலையில் மதிய சாப்பாடும் விதவிதமான பராம்பரிய பட்சணங்கள் செய்து விற்கவேண்டும் என்பது ஆசை.

இவரது நங்கநல்லுார் கடைக்கு விடுமுறையே கிடையாது வாரத்தின் ஏழு நாட்களிலும் இயங்கும் கொரோனா காரணமாக ஒரு இருபது நாட்கள் கடை போடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது கடை போடவில்லை என்ற கவலையை விட வாடிக்கையாளர்களை பார்க்க முடியவில்லையே அவர்களுக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என்றுதான் அதிகம் கவலைப்பட்டனர்.

நல்ல விஷயங்களும் நல்ல மனிதர்களும் எப்போதுமே தோற்றதாக சரித்திரம் இல்லை கவுசல்யா பாட்டி சதமடிப்பதற்குள் கமலாமாமியின் கனவுகள் நிறைவேறட்டும்,அவரது எண்:73387 16104.

-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X