சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 14, 2020
Share
Advertisement
ஒரு நிமிடத்தில் 'சோதனை'கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக இந்தியா - இஸ்ரேல் இணைந்து தயாரிக்கும் 'ரேபிட் டெஸ்ட்' தொழில்நுட்பம் இன்னும் சில தினங்களில் அறிமுகப் படுத்தப்படும் என இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதர் ரோன் மால்கா தெரிவித்துள்ளார். பத்தில் இருந்து சுவாச பகுப்பாய்வு, குரல்சோதனை உள்பட நான்கு வகையான தொழில்நுட்பமாக குறைத்து ஆய்வு நடக்கிறது. இதில் ஒருவர் மிக

ஒரு நிமிடத்தில் 'சோதனை'

கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக இந்தியா - இஸ்ரேல் இணைந்து தயாரிக்கும் 'ரேபிட் டெஸ்ட்' தொழில்நுட்பம் இன்னும் சில தினங்களில் அறிமுகப் படுத்தப்படும் என இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதர் ரோன் மால்கா தெரிவித்துள்ளார். பத்தில் இருந்து சுவாச பகுப்பாய்வு, குரல்சோதனை உள்பட நான்கு வகையான தொழில்நுட்பமாக குறைத்து ஆய்வு நடக்கிறது. இதில் ஒருவர் மிக எளிதாக கொரோனா பரிசோதனையை, ஒரு நிமிடத்துக்குள் தெரிந்து கொள்ள முடியும். இந்தியா முழுவதும் மாதிரிகள் பெறப்பட்டு தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் ஆய்வு நடைபெறுகிறது.

தகவல் சுரங்கம்

இளைஞர் எழுச்சி தினம்

இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த தினம், தமிழகத்தில் இளைஞர் எழுச்சிதினமாக கடை பிடிக்கப்படுகிறது. உடலால் மறைந்தாலும், இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததன் மூலம் அனைவரது மனதிலும் வாழ்கிறார். 1931 அக்.,15ல் ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து, ராக்கெட், ஏவுகணை, அணு ஆயுத விஞ்ஞானி யாக, ஜனாதிபதியாக உயர்ந்தார். தன் உயிர் பிரியும் வரை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X